பழனி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசனம் செய்தால், தீராத கஷ்டம் வந்து விடுமா? ஆண்டி கோலத்தில் மறைந்துள்ள ரகசியம்தான் என்ன?

pazani4
- Advertisement -

நமக்கு முன் வாழ்ந்த முன்னோர்கள் எல்லாம், இயற்கையான சூழலில், இயற்கையையே தெய்வங்களாக வழிபட்டு வந்தார்கள். அதாவது மலை, மழை, காற்று, நெருப்பு இப்படியாக உருவமே இல்லாத பஞ்சபூதங்களை கடவுளாக நினைத்து வழிபட்டு வந்தார்கள். இதோடு சேர்த்து நவகிரகங்களையும் வழிபாடு செய்தார்கள். அதாவது, இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலக் கட்டத்திலிருந்து, நான்கு ஐந்து தலைமுறைகளுக்கு முன்னோக்கி சென்றால், இறைவழிபாட்டில் பரிகாரங்களும், வழிபாட்டு முறைகளும் மிகவும் குறைவாகத்தான் இருந்து வந்தது. இருப்பினும் அவர்களுடைய வாழ்க்கையில் சந்தோஷத்திற்கு எந்த ஒரு குறையும் இல்லையே! நாம் வாழும் வாழ்க்கையை விட, ஒருபடி அதிகமான நிறைவான வாழ்க்கையை தான், நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்று உறுதியாக நம்மால் சொல்லிவிட முடியும்.

pazani

இதற்கு என்ன காரணமாக இருக்கும்? ‘முன்னோர்களுடைய வாழ்க்கையில் நேர்மை இருந்தது. அவர்களுடைய பக்தியில் உண்மை இருந்தது.’ ‘இப்ப இருக்கறவங்க எல்லாம், நேர்மையா இல்லையா? பக்தியா இல்லையா? என்று சண்டைக்கு வரவேண்டாம்.’ ஆனால் நமக்கு வரக்கூடிய கஷ்டத்திற்கு நாம் செய்த தவறுகள் தான் காரணமாக இருக்க முடியும். இன்றைய சூழ்நிலையில், நம்முடைய முன்னேற்றத்திற்கு, நாம் செல்லக்கூடிய குறுக்கு வழிகள் கூய தான் காரணம் என்று சொல்லலாம். எந்த ஒரு வேலையைத் தொட்டாலும் அதில் விரைவான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்ற ஆர்வக் கோளாறு. குறிப்பிட்டுச் சொல்லப் போனால் சீக்கிரமாகவே பணக்காரர் ஆகி விடவேண்டும் என்ற எண்ணத்தில் நம்முடைய வாழ்க்கையில், பாவங்களை சேர்த்துக்கொண்டே போகின்றோம்.

- Advertisement -

நமக்கு எல்லோருக்கும் புரிகின்ற பாஷையில் சொன்னால், நாம் செய்த பாவத்திற்கான பலனை அனுபவித்து கொண்டே இருக்கின்றோம். ஒருவருக்கு தீராத கஷ்டம் இருந்து வருகிறது. வாழ்க்கையில் தடைகள் இருந்து கொண்டே வருகிறது. இல்லற வாழ்க்கை சரியாக அமைவதில்லை. வருமானம் இல்லை. இப்படியாக பிரச்சனையை மட்டுமே எதிர் கொண்டு வாழும் சூழ்நிலையானது நிலவுகிறது என்றால், நிச்சயம் இதற்கு கர்ம வினைகள் தான் காரணம்.

pazani1

கலியுகத்தில், நான் செய்த கர்மவினைகளை குறைக்கக்கூடிய சக்தி முருகப்பெருமானுக்கு உள்ளது. முருகப்பெருமானை பழனி மலைக்கு சென்று தரிசனம் செய்தால் நம்முடைய வினைகள் கட்டாயம் குறைக்கப்படும். கர்ம வினைகளால் நம் ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர பழனி முருகனை எப்படி வழிபாடு செய்வது?

- Advertisement -

நிறைய பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம்! ‘பழனி சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தால், ஆண்டி கோலத்தில் தரிசனம் செய்யக்கூடாது. ராஜ அலங்காரத்தில் தான் காண வேண்டும். அப்போதுதான் ராஜ வாழ்க்கை கிடைக்கும் என்று!’

pazani2

ஆனால் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் தீராத துயரத்தை அனுபவித்து வந்தால், அதிகப்படியான தடைகள் உங்களுடைய வாழ்க்கையில் இருந்தால், உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் இருந்தால், நீங்கள் பழனி முருகனை தண்டாயுதபாணி கோலத்தில், ஆண்டி அலங்காரத்தில் தரிசிப்பது தான் சிறந்தது.

- Advertisement -

pazani3

திங்கட்கிழமை காலை 6 மணியிலிருந்து 9 மணிக்குள் மலையேறி முருகப்பெருமானை ஆண்டி கோலத்தில் தரிசித்தால், உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நிவர்த்தியாகி, வாழ்க்கையில் நீங்கள் படிப்படியான முன்னேற்றத்தை நிச்சயம் காண்பீர்கள். இதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

rahu

உங்களுடைய ஜாதக கட்டத்தில் பிரச்சனை தரக்கூடிய கிரகங்கள் எதுவாக இருந்தாலும், ராகுவாக இருந்தாலும் சரி, கேதுவாக இருந்தாலும் சரி, சனி பகவானாக இருந்தாலும் சரி, அந்த கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டுமென்றால், அதற்கான ஒரே தீர்வு பழனி முருகனை ஆண்டி கோலத்தில் திங்கட்கிழமை காலை வேளையில் தரிசனம் செய்வது மட்டுமே! என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நேற்று வக்ர நிவர்த்தி அடைந்த சனி பகவான் எந்த 5 ராசிக்கு இனி அதிர்ஷ்டத்தை அள்ளி தரப்போகிறார் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -