நேற்று வக்ர நிவர்த்தி அடைந்த சனி பகவான் எந்த 5 ராசிக்கு இனி அதிர்ஷ்டத்தை அள்ளி தரப்போகிறார் தெரியுமா?

sani

மே மாதம் 11-ஆம் தேதியில் இருந்து கடந்த செப்டம்பர் 29-ம் தேதி வரை சனிபகவான் வக்ர நிலையில் இருந்து வந்தார். இத்துடன் வக்ர நிவர்த்தி அடைகிறார். தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயரும் சனிபகவான் இனி எந்தெந்த ராசிக்கு என்னென்ன தொல்லைகளை கொடுக்கப் போகிறார்? எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்ட யோகங்களை அள்ளித் தரப் போகிறார்? என்று பக்தர்கள் சற்றே கலக்கத்துடன் காணப்படுகிறார்கள். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு யோகம் வரப் போகும் டாப் 5 ராசிகள் யாரெல்லாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sani-baghavan

கடந்த செவ்வாய்க்கிழமை 10:40 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சென்று நேர்கோட்டில் பயணம் செய்கிறார். இந்த சனி பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நடந்து கொண்டிருந்த ஏழரை சனி முடிந்து போகிறது.

விருச்சிக ராசிக்காரர்கள் இனி சற்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் அனுபவித்து வந்த துன்பங்கள் யாவும் இனி படிப்படியாக விலகி விடும். புதிய உற்சாகம் பிறக்கும்.

kumbam-rasi

ஆனால் கும்ப ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடியில் சிக்கி விட்டீர்கள். எனவே நீங்கள் இன்னும் கூடுதல் மனோ தைரியத்துடன் இருக்க வேண்டும். எதிர் வரும் துன்பங்களை எதிர் கொள்ளும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து சனி பகவான் வழிபாடுகள் செய்து சனி பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மகர ராசியில் இருக்கும் சனி பகவானின் பார்வை 3, 7, 10 ஆகிய இடங்களில் படுகிறது. சனி பெயர்ச்சியால் யோகம் பெற இருக்கும் 5 ராசிகள் மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம். இந்த 5 ராசிகாரர்களுக்கு சனி பெயர்ச்சியால் அதிக லாபமும், ராஜயோகமும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கான பலன்களையும் தனித்தனியே காணலாம்.

மேஷம்:
mesham-rasi1
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் புதிய தொழில் துவங்கும் முடிவுகள் எடுப்பதற்கு சாதகமான பலன்களைத் தரும். செய்யும் தொழில் மற்றும் வியாபாரங்கள் நல்ல வளர்ச்சி காணும். புகழும், பதவிகளும் உங்களைத் தேடி வரும். இறை வழிபாடுகள் மேற்கொள்வதன் மூலம் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் பெறலாம். கணவன் மனைவி இடையே புரிதல் இல்லை என்றால் பிரிவுகள் வருவதற்கு சாத்தியக்கூறு உண்டு என்பதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் நல்ல பலன் காணலாம். இதுவரை இருந்து வந்த உங்களுடைய துன்ப நிலை மாறி இனி வசந்த காலம் பிறக்க இருக்கிறது. தடைபட்ட சுபகாரியங்கள் கை கூடி வரும். உங்கள் சுய ஜாதகம் அற்புதமாக இருக்கும் பட்சத்தில் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தையும் அள்ளித் தரும்.

ரிஷபம்:
rishabam-rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த அஷ்டமத்து சனி முடிந்து பாக்கிய சனி துவங்க இருப்பதால் குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இருப்பதால் அதிர்ஷ்டங்களும், யோகங்களும் வீடு தேடி வந்து சேரும். ராசியில் ராகு பகவான் சஞ்சரிப்பதால் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். சனி பகவான் உங்கள் ராசிக்கு லாப தானத்தை பார்ப்பதால் சொத்துக்கள் மூலம் பணவரவு தாராளமாக இருந்து கொண்டிருக்கும். ஆரோக்கியம் மற்றும் உடன் பிறந்தவர்கள் விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வருமானம் பெருகி தர்ம காரியங்களை செய்யும் அளவிற்கு நல்ல யோகம் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு கொடுக்க இருக்கிறது.

சிம்மம்:
simmam-rasi
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி அற்புதமான பலன்களை தரப்போகிறது. உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் இதுவரை உங்களை எதிர்த்து வந்தவர்கள் பின் வாங்குவார்கள். உங்களின் கை ஓங்கி இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். இதுவரை இருந்து வந்த பகைவர் பிரச்சனைகள், வீண் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறும். ஆடம்பர சொத்துக்கள் மற்றும் பொன் பொருள் சேரும்.

விருச்சிகம்:
viruchigam-rasi
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி ஏழரை சனியின் முடிவாக பிறந்து இருப்பதால் ராஜ யோகத்தை அள்ளி தர போகிறது. மற்ற ராசிக்காரர்களை விட விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி அதிர்ஷ்டமான பலன்களை தரும். என்னடா வாழ்க்கை இது! என்று வெறுத்துப் போய் இருந்த நீங்கள் இனி பிரகாசத்துடன் காணப்படுவீர்கள். அடைப்பட்டு இருந்த அத்தனை கதவுகளும் உங்களுக்காக இனி திறக்க இருக்கிறது. பெயர், புகழ், பதவிகள், வருமானம் அத்தனையும் அதிகரிக்கும்.

மீனம்:
meenam-rasi
மீன ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்சியானது எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை தரும். குருபகவான் லாப ஸ்தானத்திற்கு மாற இருப்பதால் சாதகமான பலன்களையும், சுபச்செய்திகளும் கிடைக்கப் பெறும். உங்களின் நீண்டநாள் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறக் கூடிய அற்புதமான பெயர்ச்சியாக இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு இருக்கும். இதுவரை நீங்கள் எதையெல்லாம் கஷ்டம் என்று நினைத்தீர்களோ! அதுவே உங்களுக்கு சுலபமாக மாறக்கூடும். திடீர் பணவரவு உண்டாகி மனதிற்கு மகிழ்ச்சியை அள்ளித் தரும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் படுக்கை அறையில் இந்த பொருட்களெல்லாம் இருந்தால் கணவன் மனைவிக்குள் நிச்சயம் பிரச்சனை வரும். நிம்மதி என்பதே இருக்காது!

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.