- Advertisement -

தங்க ஆபரண வசிய பூஜை

- Advertisement -

தங்கத்தின் விலையை கேட்கும் போது பலருக்கும் மயக்கமே வந்திருக்கும். நம்முடைய முன்னோர்கள் காலத்தில் 100 ரூபாயாக இருந்த தங்கத்தின் மதிப்பு இப்பொழுது ஆயிரக்கணக்கில் சென்று விட்டது. இருப்பினும் தங்கத்தின் மேல் இருக்கக்கூடிய ஆசை என்பது யாருக்குமே குறையவில்லை. அனைத்து நகை கடைகளிலும் நகையை வாங்க வேண்டும் என்பதற்காக பலரும் செல்லத்தான் செய்கிறார்கள். வீட்டில் எந்த ஒரு சுபகாரியம் நடப்பதாக இருந்தாலும் அந்த இடத்தில் தங்கத்தின் மதிப்பு என்பது மிகவும் பெரிய அளவில் தெரியும். தங்க நகைகளை அதிகமாக சேர்க்க வேண்டும் என்றால் அதை நாம் வசியம் செய்ய வேண்டும். அப்படி வசியம் செய்வதற்கு உதவக்கூடிய பூஜையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தங்க ஆபரண வசிய பூஜை

தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்த உடனேயே தங்கத்தை வாங்கி விட முடியாது. தங்கம் வாங்குவதற்கு போதுமான அளவு பணவரவு இருப்பினும் ஒரு சிலர் அந்த தங்கத்தை வாங்க முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். இன்னும் சிலர் தங்கத்தை வாங்கி வந்தாலும் அதை போட்டு அழகு பார்க்க முடியாத நிலையில் இருப்பார்கள். எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் வீட்டில் தங்கம் என்பது சேர வேண்டும். தங்கம் எந்த அளவிற்கு சேர்கிறதோ அந்த அளவிற்கு தனலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து விட்டது என்று கூட கூறலாம். அப்படி தங்கம் அதிகளவில் சேர்வதற்கு செய்ய வேண்டிய ஒரு பூஜையை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த பூஜையை ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று செய்ய வேண்டும். ஒரு மாதத்தில் ஒரு முறை மட்டும் இந்த பூஜையை செய்தால் போதும். தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் அதாவது நான்கு ஞாயிற்றுக்கிழமை இந்த பூஜையை செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் தங்கத்தை வாங்கி அனுபவிப்பதற்கான யோகம் என்பது உண்டாகும். இந்த பூஜையை ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலம், எமகண்டம் இந்த இரண்டு நேரங்களை தவிர்த்து மற்ற எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு கண்டிப்பான முறையில் தங்கம் வேண்டும். தங்கமே இல்லை என்பவர்கள் வெள்ளியை வைத்தாவது இந்த பூஜையை செய்ய வேண்டும். நாம் உபயோகப்படுத்தக்கூடிய தங்கமாக இருந்தாலும் அந்த தங்கத்தை பன்னீரால் சுத்தம் செய்த பிறகு இந்த பூஜையில் வைக்கலாம்.

ஒரு தாம்பாள் தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாள தட்டிற்கு மேலே வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய வாசனை மிகுந்த மலர்களை பரப்பிக் கொள்ளுங்கள். மல்லிகை, முல்லை, ஜாதி பிச்சி, நித்திய மல்லி போன்ற மலர்களை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேலே ஒரு வெற்றிலையை வைத்து அந்த வெற்றிலைக்கு மேலே நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் தங்கத்தை வைக்க வேண்டும். இந்த தட்டிற்கு முன்பாக மூன்று அகல் விளக்குகளை வைத்து அந்த மூன்று அகல் விளக்கிலும் நல்லெண்ணெய் மற்றும் நெய் இவை இரண்டையும் கலந்து ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக இந்த பூஜையில் ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். வாசனை மிகுந்த தாழம்பூ குங்குமத்தை எடுத்து வைத்துக்கொண்டு பின்வரும் இந்த மந்திரத்தை 308 முறை கூறி அந்த தங்கத்திற்கு குங்குமத்தை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

மந்திரம்

“ஓம் ஸ்ரீம் வம் தங்கம் ஸ்வாஹா”

- Advertisement -

இப்படி அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்த விட வேண்டும். தூபம் காட்டும் பொழுது வீடு முழுவதும் காட்ட வேண்டும். மேலும் எந்த இடத்தில் நாம் தங்கம் வைப்போமோ அந்த இடத்திலும் தூபம் காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று முழுவதும் இது அப்படியே பூஜை அறையிலேயே இருக்கட்டும். மறுநாள் அதாவது திங்கட்கிழமை அன்று இந்த தங்கத்தை எடுத்து நாம் உபயோகப்படுத்துவதாக இருந்தால் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் அல்லது தங்கம் வைக்கும் இடத்தில் வைத்து விடலாம். குங்குமத்தை தனியாக சேகரித்து தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு வளர்பிறை அஷ்டமி வழிபாடு

தங்கத்தை வைத்து இந்த முறையில் குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்பவர்களுக்கு தங்கம் அதிக அளவில் சேர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்