நாளை தங்க கணபதி தினம்! அதி அற்புதம் வாய்ந்த இந்த நாளின் சிறப்பு என்ன என்று தெரியுமா உங்களுக்கு? நாளை இதை மட்டும் செய்து விட்டால் உங்கள் வாழ்க்கையில் கடன் தொல்லையே இருக்காது.

ganapathi
- Advertisement -

நாளைய தினம் அமாவாசை சனிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. இது ஒரு சிறப்பு. அதுமட்டும் இல்லாமல் சனிக்கிழமை, ரோகிணி நட்சத்திரத்தோடு அமிர்த யோகமும் சேர்ந்து வருத்திருப்பதால், இந்த நாளை தங்க கணபதி தினம் என்று சொல்லுவார்கள். இந்த நாள் மிக மிக சிறப்பு வாய்ந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளில் நாம் என்ன செய்தால் கடன் பிரச்சனை தீரும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த ஒரு சில விஷயங்களை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். அதி அற்புதம் வாய்ந்த இந்த நாளை யாரும் தவற விடாதிங்க. இது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான் வரும். இந்த வருடம் நாளை அதாவது 17.6.2023 ஆம் தேதி தங்க கணபதி தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்க கணபதி தின வழிபாடு:
நாளைய தினத்திலேயே கணபதியின் பெயர் உள்ளது. முழுமுதற் கடவுளான இந்த கணபதிக்கு உரிய நாளாக இது சொல்லப்பட்டுள்ளது. நாளைய தினம் மாலை 4.25 வரை ரோகிணி நட்சத்திரம் இருக்கின்றது. ஆகவே நாளை நீங்கள் இந்த நேரத்திற்கு முன்பாகவே விநாயகர் கோவிலுக்கு சென்று, உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று உங்கள் கையால் அருகம்புல் புல், வாங்கிக் கொடுத்து, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து விநாயகரை வழிபாடு செய்தால் மிக மிக சிறப்பு. இந்த வழிபாட்டை நாளை காலையில் முடிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பொதுவாகவே மனிதர்கள் என்றால் கடன் கஷ்டம் இருக்கும். நீங்கள் யாரிடமிருந்தாவது கடன் வாங்கி இருந்தால், அந்த கடனில் ஒரு சிறு தொகையை நாளைய தினம் அவர்களுக்கு திருப்பிக் கொடுங்கள். அது தவிர உங்களுடைய நகையை அடமானம் வைத்திருந்தால், அந்த நகையை திரும்பவும் மீட்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால், அந்த தொகையிலிருந்து ஒரு சிறு தொகையை நாளைய தினம் கொண்டு போய் பேங்கிலோ அல்லது அடமானம் வைத்த கடையிலோ கட்டி விடுங்கள். முழு தொகையை கட்ட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்களால் முடிந்த சிறு தொகையை நாளைய தினம் கட்டி விட்டால் பிறகு அந்த நகையை சீக்கிரம் நீங்கள் மீட்டு விடுவீர்கள்.

வாய்ப்பு உள்ளவர்கள் நாளை அடமானம் வைத்த நகையை மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்து விட்டால், பிறகு உங்கள் வீட்டில் இருந்து நகை எந்த நாளிலும் அடமானத்திற்கு போகாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இதேபோல ஏதாவது சொத்து பத்திரங்கள், வேறு ஏதாவது பொருட்களை அடமானம் வைத்திருந்தாலும் இதே குறிப்பை நீங்கள் பின்பற்றலாம்.

- Advertisement -

அடுத்தபடியாக நாளைய தினம் வாய்ப்பு உள்ளவர்கள் தேவை உள்ளவர்கள் கையில் பணம் வைத்திருப்பவர்கள் உங்களால் முடிந்தால் ஒரு சின்ன குண்டுமணி தங்கத்தை வாங்கலாம். நாளைய தினம் தங்கம் வாங்கினாலும் மேலும் தங்கம் சேரும். அக்ஷய திதியை போலவே இந்த நாளும் தங்கம் வாங்குவதற்கு சிறப்பான நாளாக தான் சொல்லப்பட்டுள்ளது. தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளிப் பொருட்களை வாங்கலாம். அதுவும் வாங்க முடியாது என்பவர் உங்கள் உங்களுடைய வீட்டில் உங்கள் தேவைக்கு ஏதாவது புதுசாக வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்றால் அதை வாங்குங்கள். நிச்சயம் உங்களுடைய குடும்பம் சீரும் செழிப்புமாக இருக்கும். (கவனம் வைத்துக் கொள்ளுங்கள். நாளை மாலை 4 மணிக்கு முன்பாகவே இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் செய்து விட வேண்டும். நாளைய தினம் மாலை 4:30 மணிக்கு மேல் ரோகிணி நட்சத்திரம் முடிந்துவிடும். அதையும் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.)

இதையும் படிக்கலாமே: நாளை அமாவாசை நாளில் இதையெல்லாம் தவறாமல் செய்பவர்களை பித்ரு சாபம் மட்டும் இன்றி வேறு எந்த சாபமும் நெருங்காமல் காத்து செல்வ செழிப்போடு வாழ பித்ருக்கள் துணை நிற்பார்கள்.

நாளை அமாவாசை தினமாக இருக்கின்றது. புதுசு வாங்கலாமா புதுசு வாங்கி போடலாமா என்ற குழப்பமெல்லாம் தேவையே கிடையாது. சனிக்கிழமை ரோகினி நட்சத்திரம் அமிர்தயோகம் வந்திருப்பதால் அந்த அமாவாசை திதியை பற்றி நீங்கள் எந்த கவலையும் பட தேவை இல்லை. அமாவாசைக்கு தனியாக செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை செய்து விடுங்கள். தங்க கணபதி தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு சென்று விநாயகரை வழிபாடு செய்துவிட்டு, பின்பு மேல் சொன்ன விஷயங்களை எல்லாம் பின்பற்றும் போது உங்களுக்கு எல்லாம் ஜெயமாக நடந்து முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -