நீங்கள் வாங்கும் தங்க நகை பல மடங்காகப் பெருகிக் கொண்டே இருக்க, உங்கள் வீட்டில் அவசியம் இருக்க வேண்டியது இந்த ஸ்வர்ண அட்சய பாத்திரம் தான்

nagai
- Advertisement -

தங்க நகைகள் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. வீட்டிலுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தாங்கள் அணியக்கூடிய நகைகள் அனைத்தும் தங்கத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும். ஒவ்வொரு தங்க நகை வாங்கும் பொழுதும் அவர்கள் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. தங்கம் என்பது மகாலட்சுமியின் ஸ்வரூபமாகவும் பார்க்கப்படுகிறது. எந்த வீட்டில் தங்க நகைகள் அதிகமாக இருக்கிறதோ அங்கு மகாலட்சுமி தேவியும் நிரந்தரமாக இருக்கிறாள் என்று அர்த்தமாகும். இவ்வாறு உங்கள் இல்லத்தில் தங்க நகைகள் சேர்ந்து கொண்டே இருக்க அவற்றை முறையாக கையாள வேண்டும். அதற்கு இந்த ஸ்வர்ண அட்சய பாத்திரத்தை முறையாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைக்காத அளவிற்கு தங்கம் மடமடவென்று சேர்ந்து கொண்டே இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

செல்வம் மற்றும் பணம் சேர நாம் முழுமையாக வணங்குவது மகாலட்சுமி தேவியை தான். மகாலட்சுமி தேவி எப்பொழுதும் செல்வ செழிப்புடன் இருப்பவள். எனவே மகாலட்சுமி தேவிக்கு உகந்த அனைத்து விதமான மங்கள பொருள்களையும் நமது வீட்டில் வைத்திருக்க வேண்டும். உப்பு, மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்ற அனைத்து விதமான மங்களப் பொருட்களும் எப்பொழுதும் வீட்டில் குறைவில்லாமல் இருக்க வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு தங்கம் அதிகமாக சேர இந்த அட்சய பாத்திரம் தயார் செய்வதற்கு முதலில் மகாலட்சுமி குடம் வாங்க வேண்டும். அதாவது சிறிய சில்வர் அல்லது வெண்கல குடத்தில் மகாலட்சுமி படம் போட்ட குடம் வாங்க வேண்டும். இது அனைத்து விதமான பூஜை பொருட்கள் விற்கப்படும் கடைகளிலும் கிடைக்கிறது. பூ கட்ட பயன்படுத்தப்படும் வாழை நாரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த வாழை நாரை வைத்து குடத்தின் மீது கலசம் செய்வதுபோல் முழுமையாக சுற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றிக்கொள்ள தெரியாதவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் குருக்களிடம் கொடுத்து இவ்வாறு குடத்தில் வாழை நாரை வைத்து சுற்றி வர வேண்டும்.

- Advertisement -

பிறகு நகைக் கடைக்குச் சென்று அங்கு வெள்ளி பூணூல் மற்றும் அரை கிராம் வெள்ளி காசு வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றை பன்னீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றிற்க்கு சந்தன, குங்கும பொட்டு வைக்க வேண்டும். பின்னர் மகாலட்சுமி குடத்திற்கும் மஞ்சள், குங்கும பொட்டு வைக்க வேண்டும்.

பின்னர் சிறிதளவு ஜவ்வாதை மகாலட்சுமி குடத்தினுள் சேர்க்க வேண்டும். பின்னர் அதனுடன் இந்த வெள்ளி காசை சேர்க்கவேண்டும். வெள்ளி பூணூலை குடத்தின் கழுத்தில் சுற்றி விட வேண்டும். பிறகு இந்த குடத்தினுள் உங்கள் வீட்டில் இருக்கும் சிறிய தங்க நகைகளை போட்டு வைக்கவேண்டும் .பின்னர் இந்த குடத்தை உங்கள் வீட்டில் பீரோ அல்லது பூஜை அறையில் வைத்துக் கொள்ளவேண்டும் விரைவில் உங்கள் இல்லத்தில் தங்கநகைகள் மலைபோல் குவிய ஆரம்பிக்கும்.

- Advertisement -