- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதங்கம் அதிகளவில் சேர ஆடிப்பெருக்கு பரிகாரம்

தங்கம் அதிகளவில் சேர ஆடிப்பெருக்கு பரிகாரம்

- Advertisement -

வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் விரும்பக்கூடிய ஒரு முக்கியமான பொருள் என்றால் அது தங்க நகைகள் தான். இந்த தங்க நகைகளை அணிவதற்காக வாங்கினாலும் ஏதாவது ஒரு சூழ்நிலை காரணமாக அடமானத்தில் வைக்கவும் பெண்கள் தயங்க மாட்டார்கள். அப்படி அடமானத்தில் வைத்த தங்க நகைகளை திருப்புவதற்கும் அதிக அளவில் தங்கத்தை சேர்ப்பதற்கும் ஆடிப்பெருக்கு மிகவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது.

வசதி மிகுந்தவர்கள் ஆடிப்பெருக்கு நாள் அன்று தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்குவார்கள். அப்படி வாங்குவதன் மூலம் அந்த பொருள் அதிகளவில் பெருகிக்கொண்டே செல்லும் என்று கூறப்படுகிறது. வசதி மிக்கவர்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம். இதே ஆசைதான் வசதி குறைந்தவர்களுக்கும் இருக்கும். அவர்கள் என்ன செய்ய முடியும்? அப்படிப்பட்டவர்கள் மிகவும் எளிதில் விலை மலிவாக கிடைக்கக்கூடிய இந்த ஒரு பொருளை வாங்கி வைத்தாலேயே அவர்களின் வீட்டில் தங்கம் சேர ஆரம்பிக்கும். அந்த பொருள் என்ன என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தங்கம் அதிகளவில் சேர பரிகாரம்

ஆடிப்பெருக்கு நாள் அன்று நாம் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அந்த பொருள் பெருகும் என்று கூறப்படுகிறது அதனால் பொதுவாக பலரும் அன்றைய தினத்தில் கல்லுப்பு, மங்களகரமான பொருட்களான மஞ்சள், குங்குமம், பூ, பழங்கள், தாலி சரடு போன்றவற்றை வாங்கி வைத்து வழிபாடு செய்வார்கள். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் அவர்களுக்கு அனைத்து விதமான மங்கலங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதே போல் தான் தங்கம் அதிக அளவில் சேர வேண்டும் என்று நினைப்பவர்களும் அடமானத்தில் இருக்கக்கூடிய தங்க நகைகளை திருப்ப வேண்டும் என்று நினைப்பவர்களும் ஆடிப்பெருக்கு நாளன்று தங்களால் இயன்ற அளவு விரலி மஞ்சள் வாங்க வேண்டும். இந்த விரலி மஞ்சளை கடையில் இருந்து வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த விரலி மஞ்சளை மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாகவோ அல்லது வாராகி அம்மனின் படத்திற்கு முன்பாகவோ வைத்து தங்க நகைகள் அதிக அளவில் சேருவதற்குரிய வாய்ப்புகளை அருள வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த விரலி மஞ்சளை பணம் நகை வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி ஆடிப்பெருக்கு நாள் அன்று யார் ஒருவர் விரலி மஞ்சளை வாங்கி வைத்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு குருவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். குருவே தங்கத்திற்கு அதிபதியாக திகழ்கிறார் என்பதால் தங்கம் அதிக அளவில் சேருவதற்குரிய வாய்ப்புகள் உண்டாக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:ஆடிப்பெருக்கு வீட்டில் வழிபாடு செய்யும் முறை

மதிப்பு மிகுந்த தங்கத்தை வாங்க இயலாதவர்கள் விலை மலிவாக கிடைக்கக்கூடிய இந்த ஒரு பொருளை வாங்கி வைத்து மனதார வழிபாடு செய்ய மகாலட்சுமியின் அருளால் தங்கம் அதிக அளவில் சேர ஆரம்பிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்