உங்ககிட்ட தங்கம் நிலைக்கவே இல்லையா? எந்த நகையையும் அணிந்து கொள்ளும் முன் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து கொள்ளுங்கள்! நகையும் அதிர்ஷ்டமாக மாறிவிடும்.

gold-manjal
- Advertisement -

ஒவ்வொருவரிடமும் குண்டுமணி தங்கமாவது இருப்பது அவசியமான ஒன்று. அதிலும் பெண்களாக இருந்தால் கட்டாயம் ஏதாவது ஒரு சின்ன தங்கம் ஆவது எப்போதும் அவர்களுடைய உடம்பில் இருப்பது மிகவும் நல்லது. நகைகள் அணிந்து கொள்வதற்கும் நிறைய சாஸ்திர காரணங்கள் உண்டு. அத்தகைய தங்க நகை ஒரு சிலரிடம் நிலைப்பதே இல்லை. அடிக்கடி தங்க நகை அடகு போய்விடும். இதற்கு ஸ்வர்ண தரித்திரம் என்கிற பெயருண்டு. ஸ்வர்ண தோஷம் இருப்பவர்களுக்கு இது போன்ற சுவர்ண தரித்திரம் ஏற்படுவது வழக்கம்.

gold-pot

இதிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒவ்வொரு நகையையும் நீங்கள் அணிந்து கொள்வதற்கு முன் செய்ய வேண்டிய பரிகாரம் ஒன்று உள்ளது. இதை செய்து விட்டு நீங்கள் நகையை அணிந்து கொண்டால் தோஷ நிவர்த்தி ஆகி விடும். அதை எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

ஸ்வர்ண தரித்திரம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது தெரியுமா?
நீங்கள் புதிதாக நகையை வாங்கினால் அந்த நகை உடனடியாக அடகு கடைக்கு சென்று விடும். மீண்டும் அது உங்கள் இடத்தில் வந்தாலும் சிறிது நாட்களிலேயே திரும்பவும் அடகு கடைக்கு செல்லும் நிலைமை வந்துவிடும். தங்க நகையை அணிவதே மற்ற உலோகங்கள் நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் தான். அப்படி இருக்கும் பொழுது தங்க நகையே அணிந்தாலும் ஒரு சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல் போய் விடுவது உண்டு. தங்க நகையை அணிந்தால் கழுத்தில் புண்கள் வர வாய்ப்புகள் இல்லை. அப்படி உங்களுக்கு ஏற்பட்டால் ஸ்வர்ண தரித்திரம் இருப்பதாக ஐதீகம் உண்டு.

settu-gold

மேலும் புதிதாக ஒரு நகை உங்களிடத்தில் வரும் பொழுது உங்களுடைய வாழ்க்கையில் வீண் விரயங்கள் ஏற்பட்டால் அதுவும் சொர்ண தரித்திரத்தை குறிக்கிறது. புதிதாக ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு தங்க நகை சேர்கிறது என்றால் அது நமக்கு யோகமாக தான் அமைய வேண்டும். ஆனால் அந்த நகை வந்த பின்னால் தொடர்ந்து பணமோ அல்லது பொருளோ விரயமாகி கொண்டிருந்தால் இதன் மூலம் ஸ்வர்ண தரித்திரத்தை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சொர்ண தரித்திரம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?
நாம் வாங்கும் புதிய தங்க நகைகள் எங்கிருந்து வருகிறது என்பது நமக்கு தெரிவதில்லை. அவை வேறு ஒருவர் அணிந்திருந்த பழைய நகைகளை உருக்கியும் செய்திருக்கலாம். மற்றும் நம்முடைய நகைகளை வேறு ஒருவர் அணிந்து கொண்டு திரும்ப நம்மிடத்தில் கொடுத்தாலும் இந்த தோஷம் ஏற்படுகிறது. அல்லது பரம்பரை ரீதியாக நம்மிடம் வந்து சேரும் நகைகளும் தோஷம் உள்ளது தான். இந்த தோஷத்தை நீக்க எளிய பரிகாரங்கள் உள்ளது.

Today Gold rate

அடகு கடைக்கு சென்று வந்த நகையாக இருந்தாலும் சரி, புதியதாக தங்க நகை வாங்கி வந்தாலும் சரி அதனை நேரடியாக அப்படியே அணிந்து கொள்ளக் கூடாது. தோஷத்தை போக்கும் மஞ்சளை சிறிதளவு தண்ணீரில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த நீரில் நகைகளை போட்டு பத்து நிமிடம் கழித்து எடுத்து மாட்டிக் கொள்ளலாம். முதல் முறையாக நகை அணியும் பொழுது கிழக்கு திசையை பார்த்து அணிவது உத்தமம்.

- Advertisement -

தேங்காய்

தங்க நகை ஐஸ்வரியமாக மாற என்ன செய்ய வேண்டும்?
நம்முடைய நகை ஐஸ்வரியமாகவும், அதிர்ஷ்டமாகவும் நமக்கு மாறுவதற்கும் பரிகாரம் உள்ளது. தேங்காயை உடைத்து அதில் குடுமியுள்ள பகுதியில் நகையை வைத்து வாழை இலையை போட்டு மூடிவிட வேண்டும். இதற்கு ஒரே ஒரு கற்பூர ஹாரத்தி காண்பித்து விட்டு அரை மணி நேரம் கழித்து எடுத்து கிழக்கு நோக்கி மாட்டிக் கொண்டால் போதும். அந்த நகை ஐஸ்வர்யமாக நமக்கு மாறிவிடும். நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே
உங்களுடைய சொத்தே உங்களுக்கு பிரச்சனையாக உள்ளதா? ராசியில்லாத வீடு, நிலம் கூட ராசியாக மாற வேண்டும் என்றால் இந்தப் பிள்ளையாரை வழிபட்டாலே போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -