தங்க நகைகள் மேலும் மேலும் சேர இந்த காசை பயன்படுத்தி தங்கம் வாங்கி பாருங்கள்! அப்படி என்ன காசு அது?

coins-gold

தங்கம் விற்கும் விலைக்கு தங்கம் வாங்குவது என்பது பெரிய விஷயமாக இன்று இருக்கிறது. புதிதாக நகை வாங்க நினைப்பவர்கள், தொழில் துவங்க நினைப்பவர்கள் இந்த காசில் இருந்து தங்க நகைகளை வாங்குவது யோகம் தரும். இது மேலும் மேலும் தங்கம் வாங்குவதற்கான அதிர்ஷ்டத்தை உண்டாக்கித் தரும் என்பது சூட்சமம் ஆகும். அப்படி நாம் எந்த காசை பயன்படுத்த போகிறோம்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

gold3

நீங்கள் புதிதாக தொழில் துவங்க நினைக்கும் பொழுது இந்த காசை வைத்து துவங்கினால் நல்ல ஒரு அதிர்ஷ்டமான யோகம் உண்டாகும். இதனால் உங்களுடைய தொழில் அல்லது வியாபாரம் மென்மேலும் பெருகி வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரம் மட்டுமல்ல புதிதாக நீங்கள் செய்ய நினைக்கும் எந்த ஒரு செயலையும் துவங்குவதற்கு இந்த காசை பயன்படுத்தி துவங்கலாம். இந்த நாணயத்திற்கு அவ்வளவு ஒரு நல்ல மதிப்பு உண்டு.

வீட்டில் மகாலட்சுமி படம் கட்டாயம் அனைவரும் வைத்திருப்பது லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்க செய்யும். அதிலும் தனலட்சுமி, கஜலக்ஷ்மி போன்ற லட்சுமிகளை வைத்திருப்பது இன்னும் யோகம் தரும். இத்தகைய மகாலட்சுமிகளின் படத்திற்கு முன்பு பூஜை அறையில் நீங்கள் ஒரு வெள்ளிக் கிண்ணத்தை வைக்க வேண்டும். வெள்ளி உலோகத்தால் செய்யப்பட்ட எந்த ஒரு பொருளாக இருந்தாலும் பரவாயில்லை காசு வைப்பதற்கு அந்தப் உலோகம் தேவைப்படும்.

silver-bowl

வெள்ளியில் இருக்கும் நாணயத்திற்கு தனலட்சுமி என்பது பெயராகும். வெள்ளி கிண்ணத்தில் உங்களிடமிருக்கும் சில்லரை காசுகளை ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் போன்ற நாணயங்களை போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை செவ்வாய், வெள்ளி பூஜையின் பொழுது பிரார்த்தனையில் வேண்டிக் கொண்டு ரூபாய் நாணயத்தை இந்த கிண்ணத்தில் போட்டு வாருங்கள்.

- Advertisement -

திடீரென தொழில் துவங்க நினைப்பவர்கள் முதல் செலவாக தொழில் துவங்குவதற்கு தேவையான விஷயத்தை செய்வதற்கு இந்த காசை வைத்து செய்வது யோகத்தை தரும். தனலட்சுமியை வைத்து செய்யப்படும் எந்த ஒரு செயலும் ஜெயமாகும் என்பது தான் உண்மை. வெள்ளியில் வைக்கப்பட்டு, பூஜிக்கப்படும் நாணயங்களுக்கு தனலட்சுமியின் அருள் பரிபூரணமாக இருக்கும்.

இந்த நாணயங்களை வைத்து தொழில் துவங்க நினைப்பவர்கள், வியாபாரம் செய்ய நினைப்பவர்கள் முதல் மூலதனமாக எடுத்து அதற்காக செலவு செய்யும் பொழுது தனலட்சுமியை கொண்டு அந்த வியாபாரத்தை துவங்குவதாக அர்த்தமாகிறது. இதனால் அந்த இடத்தில் மகாலட்சுமியின் அம்சம் நிரம்பி மேலும் மேலும் செல்வ வளம் கூடும் என்பது ஐதீகம்.

five-rupee-coins

அது போல் புதிதாக தங்க நகைகளை வாங்க நினைப்பவர்கள் இந்த கிண்ணத்திலிருந்து எடுத்துக் கொண்டு போகப்படும் நாணயங்களை வைத்து முதல் பணத்தை கொடுக்க வேண்டும். அதாவது இந்த நாணயத்தையும் சேர்த்து தான் நீங்கள் கொடுத்து தங்கம் வாங்க வேண்டும். வெள்ளிக் கிண்ணத்தில் இருக்கும் இந்த நாணயங்களை வைத்து தங்கம் வாங்கும் பொழுது தங்கம் மேலும் மேலும் வீட்டில் பெருகும் என்பது ஐதீகம்.

gajalakshmi

தனலட்சுமியுடைய பரிபூரணமான அருள் உங்களுக்கு கிடைக்கும் என்பதால் தங்கத்தை அதிகமாக சேர வைக்கும். எந்த ஒரு பொன்னாபரணங்கள் மற்றும் வெள்ளியாலான ஆபரணங்களை நீங்கள் புதிதாக வாங்கினாலும் அதனை அந்த கிண்ணத்தில் வைத்து பூஜை செய்த பின் போட்டுக் கொள்வது சிறப்பான ஒன்றாகும். எப்பொழுதும் இந்த வெள்ளிக் கிண்ணம் பூஜை அறையில் வைத்து இருப்பது அதிர்ஷ்டத்தை தரும்.