- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅடகு நகையை மீட்கவும் தங்கம் அதிக அளவில் சேரவும் செய்ய வேண்டிய பரிகாரம்.

அடகு நகையை மீட்கவும் தங்கம் அதிக அளவில் சேரவும் செய்ய வேண்டிய பரிகாரம்.

- Advertisement -

வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் நகை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அந்த நகையை போட்டு அனுபவிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். அதே சமயம் தங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றாலோ அவசரத்திற்கு பணம் வேண்டும் என்றாலும் முதலில் தங்களுடைய நகையை தான் எடுத்துக் கொடுப்பார்கள். அப்படி கொடுக்கக்கூடிய நகையை அடமானத்தில் வைத்து அதன் மூலம் வரக்கூடிய பணத்தை வைத்து அந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளித்து விடலாம்.

ஆனால் மறுபடியும் திரும்ப அந்த நகையை திருப்புவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமாக இருப்பது கிடையாது. பலருக்கும் நகையை திருப்ப முடியாத சூழ்நிலையை உண்டாகி இருக்கிறது. அதையும் மீறி திருப்பினாலும் திரும்பத் திரும்ப அந்த நகையை அடமானத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். இந்த சூழ்நிலைகள் அனைத்தையும் நீக்கவும் அடகு வைத்த நகையை திருப்பவும் தங்கநகை அதிக அளவில் சேரவும் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

பொதுவாக ஒரு விஷயம் நமக்கு வேண்டும் என்றால் அந்த விஷயத்தில் அதிக அளவில் அக்கறை காட்ட வேண்டும். அப்பொழுதுதான் அது நம்முடனே நிலையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தங்க நகையை நாம் மிகவும் கவனமாக கையாள வேண்டும். நினைத்த இடத்தில் எல்லாம் தங்க நகையை வைக்கக்கூடாது. அதற்கென்று இருக்கும் இடத்தில் மட்டும்தான் வைக்க வேண்டும். அதேபோல் வாரத்திற்கு ஒரு முறையோ மாதத்திற்கு ஒரு முறையோ 3 மாதத்திற்கு ஒரு முறையோ நாம் அணிந்திருக்கக் கூடிய தங்க நகையை சுத்தம் செய்ய வேண்டும். இப்படி சுத்தம் செய்த அணிவதன் மூலமே நமக்கு தங்க நகை மீது இருக்கக்கூடிய ஆர்வம் அதிகரிக்கும் அதன் மூலம் தங்க நகையும் சேரும் என்று கூறப்படுகிறது. அப்படி நகையை சுத்தம் செய்வதற்கு உகந்த கிழமையாக கருதப்படுவது புதன் கிழமை. புதன்கிழமை அன்று அணிந்திருக்கக் கூடிய நகையை சுத்தம் செய்து திரும்பவும் அணிவதன் மூலம் மகாலட்சுமியின் அருளால் நமக்கு தங்க நகை சேரும்.

இதோடு புதிதாக நம் தங்கநகை வாங்கினாலும் அல்லது அடகில் வைத்த நகையை திருப்பினாலும் செய்யக்கூடிய ஒரு பரிகாரம் என்பது இருக்கிறது. இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு கிண்ணத்தில் பன்னீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் துளி சேர்த்து சிறிதளவு கல் உப்பையும் சேர்த்து நாம் புதிதாக வாங்கிய நகையாக இருந்தாலும் அல்லது அடமானத்தில் இருக்கக்கூடிய நகையாக இருந்தாலும் அந்த தண்ணீரில் போட்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இப்படி சுத்தம் செய்த பிறகு அதை எடுத்து மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்து பிறகு நகை வைக்கும் இடத்தில் வைத்தோம் என்றால் அந்த நகை என்றென்றும் நம்முடனே இருக்கும்.

- Advertisement -

மேலும் நாம் நகை வைக்கும் இடத்தில் ஒரு சிறிய டப்பாவில் சிறிதளவாவது கல்லுப்பையும் சேர்த்து வைத்தோம் என்றால் அந்த இடத்தில் மகாலட்சுமியின் அம்சம் அதிகரிக்கும். அதனால் நகைகள் அந்த இடத்தை விட்டு செல்வதற்குரிய வாய்ப்புகள் ஏற்படாது. புதிதாக நகைகள் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் பௌவுர்ணமி நாளன்று இந்த தண்ணீரில் நகைகளை சுத்தம் செய்து மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து மகாலட்சுமி தாயாருக்கு பால் பாயாசத்தை நெய்வேத்தியமாக வைத்து தூப தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்வதன் மூலமும் வீட்டில் மகாலட்சுமியின் அருளால் தங்க மழை பொழியும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: ஏழு ஜென்ம பாவங்களை நீக்கும் மந்திரம்

இந்த எளிமையான பரிகாரங்களை தொடர்ச்சியாக பின்பற்றுபவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருளால் தங்க நகை தாராளமாக சேரும் என்றும் அருகில் இருக்கக்கூடிய நகையை விரைவிலேயே திருப்ப முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்