வீட்டில் தங்கம் மளமளவென்று பெருக பூஜை செய்யும் பொழுது இதை செய்ய மறக்காதீங்க! அடகு போகாமல் தங்கம் மேலும் மேலும் சேர்ந்து கொண்டே இருக்க, நம் முன்னோர்களும் இதைத்தான் செய்தார்களா?

gold-jewel-lakshmi-abishegam
- Advertisement -

வீட்டில் தங்க நகை சேர்க்கைக்கு நம் முன்னோர்களும் இதைத்தான் செய்தார்கள். தொன்று தொட்டு வழி வழியாக ஒருவருடைய இல்லத்திலும், வம்சத்திலும் செல்வம் சேரவும், நகைகள் பெருகவும், ரத்தினங்கள் குவியவும் இந்த ஒரு விஷயத்தை செய்து வந்தனர். அதே போல இன்றளவிலும் பல இடங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை எளிதான முறையில் வீட்டிலும் நாம் செய்து பயனடையும் வகையில் இக்குறிப்பு அமைந்துள்ளது. வாருங்கள் தொடர்ந்து படித்துப் பார்த்து என்னவென்று தெரிந்து கொள்வோம்.

பெரிய பெரிய கோவில்கள் அமைக்கப்பட்டு அதில் கும்பாபிஷேகங்களும், அபிஷேகங்களும் செய்யப்படுகின்றன. இப்படி இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களில் கலந்து கொள்ளும் பக்தர்களிடம் ஸ்வர்ணங்களையும், நகைகளையும் வாங்கி அபிஷேக நீரில் போட்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்த பிறகு அதனை திருப்பிக் கொடுப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

- Advertisement -

அதே போல இன்றும் அருகாமையில் அமைந்திருக்கும் கோவிலுக்கு சென்றால் கூட அபிஷேக விழாக்களில் பக்தர்களிடம் இருந்து நகைகள் கேட்பது வழக்கமாக இருந்து வருகிறது. நம்மிடம் இருக்கும் ஏதாவது ஒரு குண்டுமணி தங்கத்தை அபிஷேகத்தில் நீங்கள் கொடுத்து கலந்து கொண்டால் உங்களுக்கு மென்மேலும் நகைகளும், ஸ்வர்ணங்களும் சேரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

தங்கம் மட்டும் அல்லாமல் வைரம், வைடூரியம் என்று எந்த வகையான ஆபரணங்களாக இருந்தாலும், நகைகளாக இருந்தாலும் அதை கொடுத்து சொர்ண அபிஷேகம் செய்வதை பெரும் பாக்கியமாக கருதப்பட்டு வந்தது. அதே போல நம் வீட்டில் விக்கிரகங்கள் வைத்திருந்தால் அதற்கு முறையாக அபிஷேகம் செய்ய வேண்டும். அப்படி அபிஷேகம் செய்யும் பொழுது ஸ்வர்ண அபிஷேகம் செய்து வருவது வீட்டில் தங்க நகை சேர்க்கைக்கு எளிய பரிகாரமாக அமைந்திருக்கும்.

- Advertisement -

வீட்டில் அபிஷேகத்திற்கு சுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு முறை நீங்கள் ஒவ்வொரு பொருளை கொண்டு அபிஷேகம் செய்த பின்பு, தண்ணீரால் அந்த அபிஷேகத்தை களைய வேண்டும், அதன் பின்பு சந்தன, குங்குமம் இட்டு, பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும். மீண்டும் வேறொரு பொருளை வைத்து அபிஷேகம் செய்ய இவ்வாறு அலங்கரித்த பிறகு தான் நீங்கள் செய்ய ஆரம்பிக்க வேண்டும். இதே முறையின்படி நீங்கள் வீட்டிலும் தொடர வேண்டும் என்பது ஐதீகம்.

வீட்டில் விக்ரகங்கள் வைத்திருப்பவர்கள் எண்ணெய் காப்பு, பஞ்சகவ்ய அபிஷேகம், பஞ்சாமிர்தம், பன்னீர், அரிசி மாவு, மஞ்சள் பொடி போன்றவற்றை கொண்டு எளிமையான முறையில் அபிஷேகம் செய்யலாம். கடைசியாக நீங்கள் அபிஷேகம் செய்யும் தண்ணீரில் உங்களிடம் இருக்கும் ஸ்வர்ணங்கள் நகைகள் ஏதாவது போட்டு விக்கிரகத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்து வந்தால் செல்வங்கள் குவியும், நகைகள் சேரும் என்பது ஐதீகம். மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் இருக்கும் நகைகள் அடகு போகாமலும் இருக்கும். அடகு சென்ற நகைகள் மீண்டும் வந்து சேரவும் இவ்வாறு நீங்கள் பரிகாரமாக இதை கடைப்பிடித்து வரலாம். கோவிலில் செய்யும் அபிஷேகம் மட்டுமல்லாமல், இப்படி வீட்டில் செய்யும் சொர்ண அபிஷேகத்திற்கும் நிறையவே பலன்கள் உண்டு. இதை முறையாக கடைபிடிப்பவர்களுக்கு தங்க நகை சேர்க்கை என்பது எளிதாகவே கிடைக்கும் பாக்கியமாக அமையும். நீங்களும் இதை செய்து பார்த்து பயனடையுங்கள்.

- Advertisement -