1 கிராம் தங்கம் கூட வாங்க முடியவில்லையா? சனிக்கிழமையில் துளசியை இப்படி செய்யுங்கள், தங்க நகை குவியும்!

gold-thulasi

எல்லோருக்குமே தங்க நகை வாங்க வேண்டும் என்கிற கனவு இருக்கும். அதிகமாக ஆசைப்படா விட்டாலும் கழுத்திலும், காதிலும் தங்கத்தை போட்டு அழகு பார்க்க வேண்டும் என்கிற ஆசை குழந்தைக்காக பெற்றோருக்கும், மனைவிக்காக கணவனுக்கும் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு தங்க நகை என்பது ஆடம்பரப் பொருளாக இருக்கும். தங்க நகைக்காக செலவு செய்ய முடியாத அளவிற்கு அவர்களுடைய சூழ்நிலை இருக்கும். தங்கம் என்பதும் ஒருவகையில் மகாலட்சுமி அம்சம் தான். உங்கள் வீட்டில் தங்கம் அதிகம் சேர்வதற்கு சனிக்கிழமையில் துளசியை இப்படி செய்யுங்கள்! அதை பற்றிய குறிப்புகளை, இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Gold

ஒரு வீட்டில் மகாலட்சுமி அம்சம் இருக்க, குண்டுமணி தங்கமாவது அந்த வீட்டில் இருக்க வேண்டும். குண்டுமணி அளவுக்கு கூட தங்கம் ஒரு வீட்டில் இல்லையென்றால், அவர்களுடைய ஜாதகத்தில் இருக்கும் தோஷத்தை நிவர்த்தி செய்ய வேண்டும். தங்கம் என்பது செல்வத்தையும், வசதி வாய்ப்பையும் மட்டும் குறிப்பது அல்ல, தங்கத்தை கடவுளாகவும் பார்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும் என்பது ஐதீகம்.

மகாலட்சுமியை தன் மார்பில் கொண்டு விளங்கும் பெருமாளை சனிக் கிழமைகளில் வழிபடுவது செல்வ செழிப்பை உண்டாக்கும். குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு செல்வது தொழில் விருத்தியை கொடுக்கும். பெருமாளுக்கு துளசி மாலை வாங்கி சாற்றினாலே போதும். உங்களுடைய வருமானம் பல மடங்கு பெருகும்.

perumal1

பெருமாள் கோவிலில், பெருமாளுக்கு சாற்றப்படும் துளசி மாலைகளிலிருந்து உங்களுக்கு பிரசாதமாக சிறிது துளசி இலைகள் கொடுக்கப்படும். இந்த துளசி இலைகளை வாரம் தவறாமல் கொண்டு வந்து வீட்டில் நீங்கள் எங்கு தங்க நகையை வைப்பீர்களோ? அந்த இடத்தில் ஒரு கொத்து துளசி இலையை வைத்து அதனுடன் இரண்டு கிராம்பு மற்றும் ஒரு துண்டு பச்சை கற்பூரம் சேர்த்து வைத்தால் போதும், தங்க நகை மளமளவென்று சேர ஆரம்பிக்கும்.

- Advertisement -

வருமானம் தரக்கூடிய உத்தியோகத்தில், பதவி உயர்வுகளும், எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். அது போல் தொழில் செய்பவர்களுக்கு தொழில் விருத்தி ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். வியாபாரம் செழித்து ஓங்கும். இதன் மூலம் உங்களுடைய வருமானம் பெருகி, நீங்களும் தங்க நகைகள் அடிக்கடி வாங்கும் அளவிற்கு உயர்ந்து விடுவீர்கள். ஒரு வீட்டில் தங்கம் இருக்க வேண்டிய திசை வடக்கு திசையாகும். செல்வத்தை வடக்குத் திசையில் வைப்பது மேலும் மேலும் செல்வம் பெருக வைக்கும் என்பது வாஸ்து ஜோதிட பரிகாரம் ஆகும்.

thulasi chedi

எனவே வடக்கில் தங்க நகையை பட்டுத் துணியில் வைத்து வையுங்கள். தங்கத்தை எப்பொழுதும் பட்டுத்துணியில் தான் வைக்க வேண்டும். அதனால் தான் தங்கம் வைக்கும் நகை பெட்டியில் பட்டுத் துணியை வைத்து தைத்து வைத்திருக்கிறார்கள். பெட்டி இல்லை என்றாலும், கண்டிப்பாக பட்டுத்துணியில் வைத்து வாரம் தோறும் பெருமாள் கோவிலில் கொடுக்கும் துளசி இலைகளை அதனுடன் சேர்த்து வைத்து இந்த பரிகாரத்தை செய்தால் நிறைய தங்கம் சேரும். வாரம் ஒரு முறை துளசி இலைகளை மாற்றிவிட வேண்டும். இதனால் வாரா வாரம் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று அவரை சேவித்து விட்டு, பிரசாதமாக துளசி இலைகளை வாங்கி வாருங்கள் தங்கம் குவியும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் பணத்தை இப்படி மட்டும் வைத்தால், 1 ரூபாய் கூட சேர்த்து வைக்க முடியாது! பணம் வைக்கும் முறையும், அதிர்ஷ்ட யோகமும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.