உங்கள் வீட்டில் பணத்தை இப்படி மட்டும் வைத்தால், 1 ரூபாய் கூட சேர்த்து வைக்க முடியாது! பணம் வைக்கும் முறையும், அதிர்ஷ்ட யோகமும்!

savings-money

ஒருசிலர் கொஞ்சம் சம்பாதித்தால் கூட அதிலும் மிச்சம் பிடித்து கொஞ்சமாவது சேர்த்து வைத்து விடுவார்கள். ஆனால் இன்னும் சிலருக்கோ எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட அவர்களால் சேர்த்து வைக்கவே முடியாது. இதற்கு வீட்டில் இருக்கும் வாஸ்து அமைப்பும் ஒரு காரணம் தான் என்கிறது வாஸ்து ஜோதிடம். பணம் வைக்கும் வாஸ்து சரியாக இருந்தால் நீங்கள் 100 ரூபாய் சம்பாதித்தாலும் அதில் இருந்து பத்து ரூபாயை சேர்த்து வைக்க முடியும். அதுவே வாஸ்து அமைப்பு சரியாக இல்லாவிட்டால், லட்சம் ரூபாய் சம்பாதித்தால் கூட ஒரு ரூபாய் கூட உங்களால் சேர்த்து வைக்க முடியாது. சரி நாம் வீட்டில் பணத்தை எப்படி வைக்கலாம்? எப்படி வைத்தால் அதிர்ஷ்டம் தரும்? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படிக்கலாம்.

hundi

வீட்டில் இருக்கும் திசைகளை முதலில் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு மொபைல் போனில் இருக்கும் திசைக்காட்டி உங்களுக்கு உபயோகமாக இருக்கும். உங்கள் வீட்டின் கிழக்கு திசையில், சூரிய உதயத்தின் பொழுது வரும் ஒளியானது வீட்டிற்குள் படும்படி வைத்துக் கொள்ளுங்கள். சூரிய ஒளி வீட்டிற்குள் வந்தால் தான் அந்த வீடு எப்போதும் சுபீட்சமாக இருக்கும். வீட்டின் ஜன்னல்களை எப்பொழுதும் பூட்டி வைத்துக் கொண்டே இருக்காதீர்கள். நல்ல காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் இருக்கும் வீடுகளில் தான் மகாலட்சுமி எப்பொழுதும் நிரந்தரமாக இருப்பாள். அந்த வீட்டில் பண வரவும் சிறப்பாக வந்து கொண்டே இருக்கும்.

வீட்டின் அல்லது நீங்கள் பணம் வைக்கும் அறையின் திசையை பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். வடக்கு மற்றும் தென் மேற்கு திசையில் பணத்தை சேமிக்க வேண்டும். தின சம்பளமோ அல்லது மாத சம்பளமோ, நீங்கள் வாங்கும் சம்பளத்தை இந்த திசையில் வைத்து அதிலிருந்து சிறு தொகையை எடுத்து தனியாக வைத்துக் கொண்டு செலவு செய்து வர வேண்டும். பணத்தை எப்பொழுதும் மொத்தமாக பர்சில் வைத்து கொண்டு திரிய கூடாது. வீட்டின் தென் கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் மட்டும் தவறியும் கூட பணத்தை வைத்து விடாதீர்கள். அந்த திசையில் பணம் இருந்தால் விரயங்கள் வந்து கொண்டே தான் இருக்கும். பிறகு, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என்கிற கதை தான்.

cash-box

நாம் பணம் வைக்கும் பொழுது பணத்தை நேரடியாக எங்கு வைக்கிறோம்? என்பதும் முக்கியமாக பார்க்க வேண்டும். பணத்தை இரும்பு அல்லது மரப்பெட்டியில் தான் நேரடியாக வைக்க வேண்டும். நீங்கள் மற்ற இடங்களில் பணத்தை வைப்பது அதிர்ஷ்டத்தை கொடுப்பதில்லை. பீரோவில் பணத்தை வைக்கும் பொழுது நேரடியாக இரும்பின் மீது படும்படி அப்படியே வையுங்கள். இரும்பை விட மர பீரோவில் நேரடியாக பணத்தை வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை தரும்.

- Advertisement -

நீங்கள் பர்ஸில் பணம் வைத்தாலும் அந்தப் பர்சை இரும்பு அல்லது மரத்தால் ஆன ஏதாவது ஒரு பொருள் மீது வையுங்கள். இரும்பு மற்றும் மரக்கட்டை பணத்தை ஈர்க்கும் தன்மை கொண்டுள்ளது. பெரிய பெரிய வீடுகளில் எல்லாம் இதனால் தான் இரும்பாலான லாக்கர்களில் பணத்தை நேரடியாக வைக்கிறார்கள். வீட்டில் எப்பொழுதும் பணத்தை துடைத்து எடுத்து விடக்கூடாது என்கிற ஒரு விஷயத்தையும் கடைபிடிக்க வேண்டும். ஒரு இடத்தில் நீங்கள் பணத்தை வைத்துவிட்டு, அந்த இடத்தில் இருக்கும் பணத்தை மொத்தமாக எடுக்கக் கூடாது.

purse

யாரும் ஒரே இடத்தில் பணத்தை வைப்பதில்லை. பர்ஸில் கொஞ்சம், பீரோவில் கொஞ்சம், சமையல் அறையில் கொஞ்சம், உண்டியலில் கொஞ்சம் என்று ஆங்காங்கே சேமித்து வைப்போம் அல்லவா? அதில் இருந்து பணத்தை எடுக்கும் பொழுது மொத்தமாக எடுக்காமல் அதில் கொஞ்சம் விட்டு விட்டு எடுத்து செலவு செய்வது தான் மேலும் பணத்தை பெருக்கும். இந்த விஷயங்களை எல்லாம் சரியாக கடைபிடித்தால் உங்களாலும் வீண்விரயம் இல்லாமல் பணத்தை சேமிக்க முடியும்.

இதையும் படிக்கலாமே

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.