இன்றைய சூழ்நிலையில் தங்கம் விற்கும் விலைக்கு, ஒரு குண்டுமணி தங்கம் கூட நம்மால் வாங்க முடியாது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இன்றளவும் ஒரு சுபகாரிய நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடக்கும் வேண்டும் என்றால், அந்த இடத்தில் முன்னணியில் இருப்பது தங்கம். ஒரு திருமணம் காதுகுத்து என்றாலும் தங்கத்திற்கு தான் முதலிடம். உங்களுக்கு அவசியம் இப்போது தங்கம் வாங்கக்கூடிய தேவை இருக்கிறது.
திருமணமோ காது குத்தோ வைத்திருக்கிறீர்கள். பெண் குழந்தைகளுக்கு தங்கம் வாங்கி சேர்க்க வேண்டும் என்ற அவசியமும் இருக்கிறது. ஆனால் ஒரு குண்டுமணி தங்கம் வாங்கும் அளவுக்கு கூட எங்களுக்கு நல்ல நேரம் கை கூடி வரவில்லை என்ற சூழ்நிலை இருந்தால், நாளை வரும் அஷ்டமி திதியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அஷ்டமி திதியில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் தங்கம் சேருமா? என்ற சந்தேகம் சில பேருக்கு வரலாம். சில பேருக்கு அஷ்டமி நாள் என்றால், அது நல்ல நாள் இல்லையே என்ற யோசனை வரும். ஆனால் எதிர்மறை சிந்தனை வேண்டாம். வளர்பிறை அஷ்டமி திதியில் எமகண்ட நேரத்தில், தங்கம் வாங்கி அணிந்து கொண்டால், தங்கத்தை மேலும் மேலும் வாங்கக்கூடிய யோகம் வரும் என்று சில ஜோதிடர்களால் சொல்லப்பட்டுள்ளது.
உங்களுக்கு தங்கம் வாங்க வேண்டும் என்ற அவசியம் இருந்தால், நீங்கள் இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள். நாளை 7-01-2025 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வளர்பிறை அஷ்டமி திதி. செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரம், காலை 9:00 மணியிலிருந்து 10:30 மணி வரை இருக்கிறது.
இந்த நேரத்தில் கடைக்கு சென்று ஒரு குண்டுமணி தங்கம் வாங்கி, ஒரு சின்ன மூக்குத்தி வாங்கி அந்த எமகண்ட நேரத்திலேயே அணிந்து கொள்ள வேண்டும். (உதாரணத்திற்காக மூக்குத்தி என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் மோதிரம் கம்பல் எது வேண்டும் என்றாலும் அது உங்கள் விருப்பம்.) “வளர்பிறை அஷ்டமி திதியில் எமகண்ட நேரத்தில் புதுசாக வாங்கிய நகையை எமகண்ட நேரத்திலேயே அணிந்து கொண்டால் தங்கம் வாங்கும் யோகம் வரும்”.
நாளைய தினம் குலதெய்வத்தையும் பைரவரையும் துர்க்கையம்மனையும் நினைத்து தங்கத்தை வாங்கி நீங்கள் போட்டுக் கொண்டால், மேலும் மேலும் தங்கம் வாங்கோ யோகம் உங்களை நிச்சயம் தேடி வரும். தேவைப்படுபவர்கள் இந்த பரிகாரத்தை பயன்படுத்தி பலன் பெறலாம்.
அதேபோல வளர்பிறை அஷ்டமி திதி என்றாலே அது பைரவருக்கு உகந்த வழிபாடு. அதிலும் நாளைய தினம் ஸ்வர்ணாகர்ஷ்ண பைரவரை வழிபாடு செய்வது மிக மிக சிறப்பு. உங்களுக்கு நிறைய தங்க நகை வாங்க வேண்டும். அடகு வைத்த நகைகளை மீட்டெடுக்க வேண்டும் என்றால், நாளைய தினம் இந்த ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை தரும்.
இதையும் படிக்கலாமே: குடும்ப கஷ்டம் தீர நிலை வாசல் பரிகாரம்
வீட்டு பக்கத்தில் ஸ்வர்ணாகர்ஷ்ண பைரவர் சன்னிதானம் இருந்தால், அங்கு சென்று இரண்டு மண் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து, மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்கள் வீட்டில் அடமானத்திற்கு சென்ற நகைகள் மீண்டும் மீட்டெடுப்பதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். “ஓம் ஸ்வர்ணாகர்ஷ்ண பைரவரே போற்றி போற்றி” என்ற மந்திரத்தை 108 முறை நாளைய தினம் சொல்லுங்கள். நிச்சயம் உங்கள் பண பிரச்சினை நகை பிரச்சனை தீர்வதற்கு உண்டான வழியை அந்த இறைவன் காட்டிக் கொடுப்பான்.