- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதங்கம் சேர விஜயதசமி வழிபாடு

தங்கம் சேர விஜயதசமி வழிபாடு

- Advertisement -

நவராத்திரி முடிந்த பத்தாவது நாள் விஜயதசமி அன்று நாம் கொண்டாடுவோம். அந்த நாளில் விஜய முகூர்த்தம் என்ற ஒரு முகூர்த்தம் வரும். இது விஜயதசமி நாள் அன்று மட்டும்தான் வரும். வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய இந்த விஜய முகூர்த்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு செயலாக இருந்தாலும் அந்த செயலில் நல்ல முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் என்ன செய்வது என்றும் அதே சமயம் வீட்டில் தங்கம் அதிகமாக சேருவதற்கு என்ன வழிபாடு செய்ய வேண்டும் என்றும் தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தங்கம் சேர விஜயதசமி வழிபாடு

விஜயதசமி நாளன்று விஜய முகூர்த்தம் என்பது மதியம் 2:03 மணியிலிருந்து 2:49 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில் புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களும், சேமிப்பு உயர வேண்டும் என்று நினைப்பவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நேரத்தை பயன்படுத்தி தொழிலை தொடங்கினாலோ அல்லது சிறிய தொகையாவது சேமிப்பாக எடுத்து வைத்தாலோ அவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும் என்றும் தொழில் சிறப்பாக நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் அன்று அபராஜிதா தேவியை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு வெற்றிகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் அபராஜிதா தேவி என்பவள் வெற்றியை தரக்கூடிய தெய்வமாக திகழ்கிறாள் என்பதுதான். அன்றைய தினத்தில் அபராஜிதா ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்வது மிகவும் நல்ல பலனை தரும். பொதுவாக மாலை நேரத்தில் விருட்சங்களை அதாவது மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது வழிபாடு செய்வது போன்று செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால் விஜயதசமி நாளன்று மட்டும் வன்னி மரத்தை நாம் மாலை நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.

இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் விஜயதசமி நாளன்று தான் குபேர பகவான் தன்னுடைய ஆயுதங்களை வன்னி மரத்தில் ஒழித்து வைத்தார் என்றும் மறுநாள் அந்த ஆயுதங்களை எடுக்க வரும்பொழுது அவை அனைத்தும் தங்கமாக மாறிவிட்டது என்றும் புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது. அதனால் மாலை நேரத்தில் வன்னி மரத்தை நாம் வழிபாடு செய்யும்பொழுது தங்கம் அதிகளவில் சேரும் என்று கூறப்படுகிறது. அந்த வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

கண்டிப்பாக முறையில் வன்னி மரம் இருக்கும் இடத்திற்கு நாம் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்து அதில் சிவப்பு நிற மையை பயன்படுத்தி வீட்டில் இருக்கக் கூடிய நபர்களின் பெயரையும் நட்சத்திரத்தையும் எழுதி அந்த பேப்பரை சுருட்டி சிவப்பு நிற நூலால் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த பேப்பரை வன்னி மர வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய வன்னி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள் பூசி குங்குமம் வைக்க வேண்டும்.

பிறகு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வன்னி மரத்தடியில் வைத்துவிட்டு உதிரிப்பூக்களால் வன்னி மரத்திற்கும் விநாயகருக்கும் நமக்கு தெரிந்த மந்திரங்களை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு நாம் எடுத்துச் சென்ற வெள்ளை காகிதத்தை வன்னி மரத்தில் கட்டி விட்டு வன்னி மரத்தை ஒன்பது முறை வலம் வர வேண்டும். இப்படி வலம் வந்த பிறகு வன்னிமர இலைகளை பறித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து விட வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை மாலை 6 மணிக்கு செய்வது போல் பார்த்துக் கொள்ளுங்கள். முடியாத பட்சத்தில் 7 மணிக்குள் செய்து முடித்து விட வேண்டும். அதற்கு மேல் செய்யக்கூடாது. எடுத்து வந்த வன்னி இலைகளை மஞ்சள் நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டி பீரோவில் வைக்க வேண்டும் அல்லது பணம் நகை வைத்திருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் வீட்டில் பண வரவு அதிகரிக்கும் தங்கம் அதிகளவில் சேர ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே:புரட்டாசி கடைசி சனிக்கிழமை கூற வேண்டிய மந்திரம்

வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய விஜயதசமி அன்று விஜய முகூர்த்தத்தில் நாம் இந்த முறையில் பணத்தை சேமித்து வைத்தால் பணவரவு என்பது அதிகரிக்கும் அதோடு வன்னி மர வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு தங்கம் அதிக அளவில் சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்