வீணாக கீழே போடும் இந்த ஒரு பொருள் இருந்தா போதும் கருத்துப் போன வெள்ளி பழைய தங்க நகைகள் இரண்டையும் ஒரே நேரத்திலே பளிச்சுன்னு கிளீன் பண்ண சூப்பர் ட்ரிக்ஸ் இருக்கு வாங்க தெரிஞ்சிக்கலாம்.

silver cleaning
- Advertisement -

இந்த வெள்ளி தங்க நகைகளை சுத்தம் செய்ய பல முறைகள் இருந்தாலும் அதையெல்லாம் செய்ய நமக்குள் ஒரு சிறு தயக்கம் இருக்கும் இப்படி நாமே சுத்தம் செய்வதால் பொருளின் தரம் பாதித்து விடுமோ என யோசிப்போம் எதற்காக கடைகளில் அதிக செலவு செய்து அவைகளை பாலிஷ் போட்டுக் கொள்வோம். ஆனால் இனி அப்படி அதிக விலை கொடுத்து பாலிஷ் போடாமல் வீட்டில் வேண்டாம் என்று கீழே போடும் இந்த ஒரு பொருளை வைத்து இரண்டையுமே பளிச்சென்று மாற்ற ஒரு சூப்பர் ஐடியா இருக்கு வாங்க அது என்னவென்று பார்க்கலாம்.

இப்போது இந்த நகைகளை எல்லாம் சுத்தம் செய்ய நாம் ஒரு லிக்விட் தயாரிக்க வேண்டும் அதற்கு முதலில் நாம் வீட்டில் டீ போட்ட பிறகு மீதமிருக்கும் சக்கை டீத்தூளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த டீத்தூளை ஒரு வடிகட்டியில் போட்டு இரண்டு மூன்று முறை தண்ணீர் ஊற்றி நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். அப்போது தான் இதில் சேர்த்து இருக்கும் பால் எல்லாம் நீங்கி டீ தூள் மட்டும் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

அடுத்து இந்த சக்கை டீத்தூளில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீர் நன்றாக கொதி வரும்போது ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா ஒரு ஸ்பூன் துணி துவைக்கும் சோப்புத் தூள் இரண்டையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். இவை மூன்றும் சேர்ந்த நன்றாக நிறம் மாறி டீத்தூளில் நிறத்திற்கு தண்ணீர் மாறி விடும்.

இப்போது இந்த தண்ணீரை எடுத்து நாம் இரண்டு தனித்தனி கிண்ணத்தில் வடிகட்டி ஊற்றிக் கொள்ளுங்கள். இதன் பிறகு ஒரு கிண்ணத்தில் இருக்கும் தண்ணீரில் அரை ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலந்து வைத்து விடுங்கள். அடுத்ததாக மஞ்சள் தூள் சேர்க்காத டீ தூள் தண்ணீரில் வெள்ளி நகைகளை மட்டும் போடுங்கள் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீரில் தங்க நகைகளை போட்டு விடுங்கள் இரண்டையும் 10 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். இதையெல்லாம் செய்யும் பொழுது தண்ணீர் வெதுவெதுப்பான சூட்டிலே இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

- Advertisement -

பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் இருந்து நகைகளை எடுத்து நல்ல சுத்தமான வேறு தண்ணீரில் போட்டு விடுங்கள் இந்த முறையிலேயே நகைகள் எல்லாம் பளிச்சென்று மாறியிருக்கும் ஒருவேளை இடுக்குகளில் அழுக்கு இருந்தால் மட்டும் டூத் பிரஷ் வைத்து லேசாக தேய்த்துக் கொடுத்தால் போதும் இந்த முறையில் நகைகளுக்கு எந்த சேதாரமும் ஆகாமல் பளிச்சென்று மாறி விடும்.

இதையும் படிக்கலாமே: இந்த 1 பொருளை தூக்கு சட்டியில் போட்டு வைத்தால், எண்ணெயில் சுட்ட பலகாரங்கள் எல்லாம் 1 மாதத்திற்கு சிக்கு வாடை வீசாதா?

இனி தங்கம் வெள்ளி நகைகளை அதிக விலை கொடுத்து பாலிஷ் போடாமல் வேண்டாம் என தூக்கி கீழே போடும் இந்த பொருளை வைத்து பளிச்சென்று மாற்றிக் கொள்ளுங்கள். இந்தக் குறிப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தோன்றினால் உடனே முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -