இந்த 1 பொருளை தூக்கு சட்டியில் போட்டு வைத்தால், எண்ணெயில் சுட்ட பலகாரங்கள் எல்லாம் 1 மாதத்திற்கு சிக்கு வாடை வீசாதா?

tips2
- Advertisement -

ரொம்ப ரொம்ப முக்கியமான பயனுள்ள வீட்டு குறிப்பு இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். இந்த வீட்டு குறிப்புகள் நிச்சயமாக உங்களுக்கு அவசரத்திற்கு கை கொடுக்கும் வகையில் அமையும். வீட்டில் இருக்கும் பெண்கள் எப்போதுமே எல்லா வீட்டு பிரச்சனைகளுக்கும் கையில் ஒரு தீர்வு வைத்திருக்க வேண்டும். அப்படி நம் வீட்டில் அடிக்கடி எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வுகள் ஒரு சில வற்றை இன்று புதியதாக தெரிந்து வைத்துக் கொள்வோமா.

குறிப்பு 1:
பாட்டி முறுக்கு சுட்டு தூக்கு சட்டியில் போட்டு வைக்கும். அது ஒரு சில நாட்களில் சிக்கு வாடை வந்துவிடும். இன்று தூக்கு சட்டி இருக்குதா இல்லையா தெரியவில்லை. பிளாஸ்டிக் டப்பாவில் முறுக்கு சீடை தட்டை ஏதாவது பொருட்களை போட்டு வைத்திருந்தாலும் கூட, அதில் இந்த குறிப்பை பின்பற்றலாம். ஒரு சிறிய வெள்ளை காட்டன் துணியில் 1 ஸ்பூன் தூள் உப்பு வைத்து, முடிச்சாக கட்டி சுட்ட பலகாரத்தோடு வைத்து விடுங்கள். ஒரு மாதம் ஆனாலும் எண்ணெயில் சுட்ட பலகாரத்தில் சிக்கு வாடை வீசாது.

- Advertisement -

குறிப்பு 2:
சின்ன சின்ன சோப்பு அட்டை பெட்டிகள் கிடைக்கும் அல்லவா. அதை குப்பையில் போடாதீங்க. கைக்குட்டைகளை மடித்து, அதன் உள்ளே வைத்து பீரோவில் வைத்தால், கைகுட்டையும் தொலைந்து போகாது. கை குட்டையில் வாசமும் சூப்பராக வீசும்.

குறிப்பு 3:
ஒரு சிறிய தட்டில் கொஞ்சமாக தண்ணீர், 1/4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் சீப்பை நனைத்து கொள்ளுங்கள். இந்த ஈர சீப்பை வைத்து லேசாக ஈரமாக இருக்கும் தலையில் சிக்கு எடுத்துப் பாருங்கள். சிக்கும் சுலபமாக சரியாகும். தலைமுடியும் கண்டிஷனர் போட்டது போல ஷைனிங்காக மாறும்.

- Advertisement -

குறிப்பு 4:
பிஸ்கட் நமத்து போகாமல் இருக்க அதை ஒரு ஏர் டைட்டான கண்டெய்னரில் போட்டு, பிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை நாட்கள் ஆனாலும் கிரிஸ்பியாகவே இருக்கும். ஒருவேளை பிஸ்கட் நாமுத்து போய்விட்டாலும், அதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் மீண்டும் அது மொறுமொறுப்பு தன்மையை பெறும்.

இதையும் படிக்கலாமே: புதுசா வாங்கின பீங்கான் பொருட்களை மறக்காம கொஞ்ச நேரம் இதுல போட்டு எடுத்து வச்சிட்டா போதும். இனி எத்தனை வருடம் ஆனாலும் இந்த பொருள் உடையவே உடையாது.

குறிப்பு 5:
தோசை கல்லை அடுப்பில் வைத்து தோசை சுட்டு முடிச்சிட்டீங்க. அடுப்பை அணைத்ததும், தோசைக்கல் ரொம்ப நேரத்துக்கு சூடாகவே இருக்கும். அடுப்பை அணைத்த பிறகு தான் இதை நீங்கள் முயற்சி செய்யணும். சூடான அந்த தோசை கல்லுக்கு மேலே, பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு (ஒரு ஒரு நாளைக்கு ஒரு ஒரு பொருளாக சூடு செய்யலாம்).

இப்படி எந்த மல்லிகை பொருளை வேண்டும் என்றாலும் கொட்டி லேசாக ஒரு ஸ்பூனை விட்டு கலந்து விட்டு சூடு செய்து ஒரு தட்டில் கொட்டிக் கொள்ளவும். அது ஆரிய பின்பு மீண்டும் பாட்டிலில் ஸ்டோர் செய்தால் அந்த பொருள் எத்தனை மாதம் ஆனாலும் வண்டு பிடிக்காது. அடுப்பை அணைத்த சூடான தோசைக்கல்லில், இந்த குறிப்பை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -