தனிமை எனக்கு பிடிக்கிறது – காதல் கவிதை

Love kavithai

கனவுகள் எனக்கு பிடிக்கிறது
நீ வந்து அதற்கு அழகு சேர்ப்பதால்..
கண்ணீரும் எனக்கு பிடிக்கிறது
உனக்காய் அது உதிர்வதால்..
தனிமை எனக்கு பிடிக்கிறது
உன் நினைவுகளோடு என்றும் வாழ்வதால்..

kadhal kavithai image
kadhal kavithai image

எனக்கானவளே, உன் அழகை
ரசித்து அன்பை பொழிய
இந்த ஒரு ஜென்மம் போதாது..
நான் இறந்தாலும்
மீண்டும் பிறப்பேன்..
உன் கரம் கோர்த்து நாம்
காதலர்களாக மீண்டும் வாழ..

Love kavithai image
Love kavithai image

இதையும் படிக்கலாமே:
உன் விழி எனும் சிறையினில் – காதல் கவிதை

காதலில் வாழ்பவர்களின் வாழ்கை எப்போதுமே பல விசித்திரங்கள் நிறைந்தது. மௌனமாக சிரிப்பார். மொழி இன்றி பேசுவார். துன்பமானாலும் இன்பமானாலும் ஒருவரை மட்டுமே தேடும் மனம். இப்படி காதலுக்கென்று சில இனம் புரியாத உணர்வுகள் இன்றும் இந்த புவியில் இருக்கதான் செய்கிறது.

அலை பேசி வந்தாலும், தினம் 6 மணி நேரம் பேசினாலும் ஒரு முறையேனும் தன் ஜோடியை பார்க்க பரிதவிக்கும் ஒரு இன்ப உணர்வை காதலால் மட்டுமே கொடுக்க முடியும். அந்த உணர்வோடு வாழ்வும் அனைத்து காதல் ஜோடிகளுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்.

காதல் பாடல் வரிகள், நட்பு பாடல் வரிகள்,  காதல் கவிதைகள் இப்படி அன்பு சார்ந்த பல தகவல்கள் இங்கு உள்ளன.