அழகு, அறிவு, யோகம், வெற்றி, வசீகரம் இவை அனைத்தும் ஒருசேர கிடைக்க நீங்கள் குளிக்கும் தண்ணீரில் தினமும் இந்த ஒரு பொருளை போட்டு குளித்தாலே போதும்.

bathing

அழகு, அறிவு, யோகம், அதிர்ஷ்டம், இந்த நான்கையும் நமக்கு கொண்டுவந்து தருவது வசீகரம் தான். வசீகரமாக இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாமே நன்மையாக தான் நடக்கும். சிலருடைய முகராசி என்று ஒன்று உள்ளது. சிலர் சொல்லி நாம் கேள்வி பட்டிருப்போம். ‘இந்த ஊரிலேயே இவர் மிகவும் ராசியானவர். இவர் போனால் அந்த பஞ்சாயத்தும் நிச்சயம் ஒரு நல்ல முடிவுக்கு வந்துவிடும். பிரச்சனை என்று வந்தால் இவரை கூட்டிக்கொண்டுபோய் பேசுங்க. பிரச்சினைக்கு சீக்கிரமே தீர்வு கிடைத்துவிடும்’. இப்படியாக ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் சில கிராமங்களில் இந்த அந்தஸ்து இருக்கும். இது வெறும் சினிமா படங்களில் மட்டும் சொல்லும் விஷயம் அல்ல. நிஜத்திலும் சில ஊர்களில் இப்படிப்பட்டவர்கள் வசீகரத் தன்மை யோடு, வசீகரிக்கும் பேச்சு திறமையோடு இருக்கத்தான் செய்கிறார்கள்.

women1

இப்படிப்பட்ட வசீகரத் தன்மை இயற்கையாகவே சில நபரிடம் அதிகமாக இருக்கும். அழகு என்பது வேறு. இந்த வசீகரத் தன்மை என்பது வேறு. அழகுக்கு வயதாகும். ஆனால் வசீகரத் தன்மைக்கு என்றுமே வயதாகது. பிறப்பில் வந்த வசீகரத் தன்மை, நாம் இறக்கும் வரை நம்மிடமே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இயற்கையாக வசீகரத் தன்மை உடையவர்களுக்கு அறிவாற்றல், சிந்திக்கும் திறன், திறமை, ஆளுமை திறமை, எதையும் சாதிக்கும் குணம் இயற்கையாகவே வந்துவிடும்.

இந்த வசீகரத் தன்மை இல்லாதவர்கள் என்ன செய்வது? அதற்கான தீர்வைப் பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தாந்திரீக பரிகாரங்களில் மிக மிக முக்கியமான ஒரு பரிகாரம் இது. இதை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயமாக சில நாட்களிலேயே வசீகர தன்மையை நாம் பெற்று விடலாம்.

தனியா, நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் இதுவும் ஒன்று. சமையலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருள் என்று கூட சொல்லலாம். இந்த தனியா விற்கு வசீகரத்தை கொடுக்கும் தன்மை உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது. இரவு தூங்கச் செல்லும் முன்பு ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, 1 ஸ்பூன் தனியாவை போட்டு ஊறவைத்து விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலை நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில், தனியாவை ஊற வைத்த தண்ணீரை மட்டும் ஊற்றி கலந்து குளித்து விட வேண்டும். தண்ணீரில் ஊற வைத்த அந்த தனியாவை தூக்கிப் போட்டுவிடலாம். அவ்வளவு தான். இதேபோல தொடர்ந்து செய்து வாருங்கள். இது காலை செய்ய வேண்டிய பரிகார முறை. இரவு தூங்க செல்வதற்கு முன்பாக ஒரு சிறிய வெள்ளை நிற காட்டன் துணியில், 1 ஸ்பூன் அளவு தனியாவை வைத்து சிறிய முடிச்சு கட்டி தலையணைக்கு அடியில் தூங்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

bathing

காலை தனியா குளியல், இரவு தனியா தூக்கம். இதைத் தொடர்ந்து செய்து வந்தாலே உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை உணர முடியும். நிறைய பேருக்கு வாழ்க்கையில் தோல்வி வருவதற்கு காரணம் வசீகரத் தன்மை இல்லாததும் கூட. வசீகரத் தன்மை உடையவர்கள் எதையும் சுலபமாக, தன்னுடைய திறமையால் சாதித்து விடுவார்கள்.

sleep1

எதையும் தன் பக்கம் ஈர்க்க கூடிய வசீகரத் தன்மை, வெற்றியையும் தன் பக்கம் ஈர்த்து வைத்துக் கொள்ளும். இப்படிப்பட்ட வசீகரத் தன்மை என்ற ஒன்று நமக்கு கிடைத்து விட்டால் போதும். அதன் பின், அழகும் வெற்றியும் திறமையும் பெயர் புகழ் பதவியும் அந்தஸ்து அனைத்துமே நம் பின்னால் நிச்சயம் வரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.