தண்ணீருக்கு உள்ள தெய்வீக ஆற்றல் பற்றி தெரியுமா ?

kamandalam
- Advertisement -

உயிர்கள் அனைத்தும் உயிர் வாழ எப்படி சுவாசிக்கும் காற்றும், உண்ணும் உணவும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு நமது தாகத்தை தீர்க்கும் நீரும் முக்கியம். இந்த தண்ணீர் நமது தாகத்தை தணிப்பது மட்டுமின்றி நமக்கு வேறு பல வகைகளிலும் உதவுகிறது. இந்த நீர் நமது ஆன்மீக சடங்குகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் வாழ்வில் அன்றாடம் பயன்படும் இந்த நீரின் மூலம் நமக்கு ஏற்படும் சில பிரச்சனைகளை எவ்வாறு தீர்த்து கொள்வது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

River

தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்த பின்பு ஒரு குடுவையில் சிறிது நீரை எடுத்துக்கொண்டு பூஜையறையில் நீங்கள் வணங்கும் தெய்வத்தின் படத்திற்கு முன்பு வைத்து, காலை உணவை உண்ட பிறகு அந்த நீரை அருந்த உங்கள் உடலுக்கும் மனதிற்கும் நன்மை அளிக்கும். நாம் வீடுகளில் வளர்க்கும் துளசி செடிக்கு வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் நமது கைகளால் நீரூற்றி வர பல நன்மைகளை பயக்கும்.

- Advertisement -

உங்கள் வீட்டிற்கு உறவினர்களோ அல்லது வெளிநபர்கள் எவரேனும் வந்து அவர்களுக்கு நீங்கள் குடிக்க வழங்கிய நீர் பாத்திரத்தில் மீதமிருந்தால், அதை நாம் பயன்படுத்தாமல் நமது தோட்டத்திலிருக்கும் ஏதேனும் ஒரு செடியின் வேர் பகுதியில் ஊற்றி விட வேண்டும். இதனால் அந்த மீதமான நீரில் கலந்துவிட்ட வெளியாட்களின் கெட்ட அதிர்வுகள் மற்றும் எண்ணங்களின் தாக்கத்தை நாம் வளர்க்கும் செடி மரங்கள் ஏற்றுக்கொள்கின்றன.
உங்கள் வீட்டு தோட்டத்திலோ அல்லது வீட்டின் வெளியிலோ மண் சட்டி அல்லது ஏதாவது ஒரு பழைய பாத்திரத்தில் பறவைகள் மற்றும் பிற விலங்குகள் தங்களின் தாகத்தை தீர்த்து கொள்வதற்கு தினமும் தூய்மையான நீரை ஊற்றி வைக்க வேண்டும். இதனால் அந்த உயிர்களின் வடிவில் இருக்கும் இறைவனின் அருளாசி உங்களுக்கு கிட்டும்.

ganga

தினமும் காலையில் குளிக்கின்ற போது அதில் சிறிது கல்லுப்பை இட்டு கரைத்து, குளித்து வர நமது தோல் சார்ந்த நோய்கள் நீங்குகிறது. மேலும் நமது பூத உடலுக்கு வெளியில் கண்களுக்கு புலப்படாமல் இருக்கும் சூட்சம உடலில் தங்கியிருக்கும் எதிர்மறையான சக்திகள் நீங்குவதால் நம் உடல், மனம், ஆன்மா நல்ல நிலையில் இருக்கும். புண்ணிய நதிகள் அல்லது கடற்கரை ஓரம் இருக்கும் கோவில்களுக்கு செல்லும் போது அக்கோவில்களின் குளதீர்த்ததையும் நதிகள் மற்றும் கடல்களின் தீர்த்தத்தையும் ஒரு புட்டியில் நிரப்பி நமது வீட்டிற்கு கொண்டு வந்து பூஜையறையில் வைத்து வழிபடலாம். அந்த புண்ணிய தீர்த்தங்களில் சிறிதை ஒரு சொம்பில் ஊற்றி, மாவிலையை கொண்டு வீட்டின் அனைத்து பகுதிகளிலும் சில துளிகளை தெளிக்க வீட்டில் துஷ்ட சக்திகள் ஏதேனும் இருந்தால் அவை நீங்கும்.

- Advertisement -

https://dheivegam.com/wp-content/uploads/2017/07/water-life-crop.jpg

அரச மரம் பல தெய்வீக சக்திகளை தனக்குள் கொண்டதாகும். நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் அரச மரம் ஏதேனும் இருந்தால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது விஷேஷ தினங்களில் அம்மரத்திற்க்கு நீரூற்றி வர, உங்கள் வாழ்வில் நன்மைகள் பல ஏற்பட வழிவகுக்கும். ஏதேனும் ஒரு சுப நிகழ்ச்சிக்காக வெளியில் செல்லும் போது உங்கள் பூஜையறையில் செம்பு பாத்திரத்தில் இருக்கும் தீர்த்தத்தை உங்களின் குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை வேண்டி, சிறிது எடுத்து உங்கள் கையில் விட்டு அதை அருந்தி, சில துளிகளை தலையில் தெளித்து கொண்டு சென்றால் உங்களை எந்த ஒரு தீய வினைகளும் அண்டாது. மேலும் நீங்கள் சென்ற காரியமும் நீங்கள் விரும்பிய படி நடக்கும்.

இதையும் படிக்கலாமே:
மகாலட்சுமி நிரந்தரமாக வீட்டில் தங்க எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் மந்திரங்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -