மகாலட்சுமி நிரந்தரமாக வீட்டில் தங்க எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது

mahalakshmil-1
- Advertisement -

உலகத்தில் எந்த காலத்திலும் ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ செல்வம் அவசியமாகவே இருந்து வந்திருக்கிறது. அத்தகைய செல்வத்தை ஈட்ட நாம் கடினமாக உழைத்தாலும், நாம் பிறரிடம் எதையும் எதிர்பார்க்காத வகையில் வாழ தெய்வங்கங்களின் அருட்கடாட்சம் நமக்கு வேண்டும். செல்வத்தின் அம்சமாக வழிபடப்படும் பெண் தெய்வம் “லட்சுமி தேவி” ஆவாள். அவளின் அருட்பார்வை நம்மீது என்றென்றும் இருக்க செய்ய வேண்டிய சில செயல்களை இங்கு காண்போம்.

santhana lakshmi

உங்களுக்கு வரும் எத்தகைய வருமானத்தையும் உங்கள் வீட்டு பூஜையறையிலோ அல்லது உங்கள் பணம் வைக்கும் அலமாரியில் லட்சுமி தேவியின் படத்திற்கு முன்பு வைத்து பின்பு செலவு செய்யும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். எந்த ஒரு விடயத்தையும் தங்களின் தேவைக்கு போக வீணடிக்காமல் சிக்கன படுத்தி சேமிப்பவர்கள் லட்சுமி தேவியின் அன்புக்கு பாத்திரமாகிறார்கள்.

- Advertisement -

வீடுகளில் தேவையற்ற உபயோகமில்லாத பொருட்கள் நிறைந்திருப்பதை தவிர்க்க வேண்டும். செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் புலால் உணவை உண்பவர்களுக்கு மகாலட்சுமியின் சாபம் கிட்டி, அவர்கள் எவ்வளவு பொருளீட்டினாலும் மிகப்பெரிய அளவில் சேமிப்பு உண்டாகாமல் அதற்கேற்ற ஏதேனும் வீண் செலவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். எனவே இத்தகைய செயல்களை தவிர்க்க வேண்டும்.

Lakshmi pujai

அதிகளவு சுகபோகங்கள் மற்றும் சிற்றின்ப செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களின் முகத்தில் லட்சுமி கடாட்சம் நீங்கி, பொருளாதார நிலையில் தடுமாற்ற நிலையை ஏற்படுத்தும். எனவே இன்ப நுகர்ச்சிகளை அளவோடு வைத்து கொள்ள வேண்டும். தினமும் பசுமாட்டிற்கு இரண்டு வாழை பழங்களை கொடுத்து வர வேண்டும். இது முடியாத பட்சத்தில் வெள்ளிக்கிழமை அன்றாவது இதை செய்ய வேண்டும்.

- Advertisement -

சுகங்களுக்கு காரகன் “சுக்கிர பகவான்” ஆவார். இவரின் முழு அருள் நிறைந்த வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல் அல்லது கேசரி போன்ற இனிப்பு பண்டங்களை செய்து, சுக்கிர மந்திரங்களை கூறி வழிபட்டு வர வேண்டும்.

Goddess Lakshmi

வெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலையில் தவறாமல் நெய் தீபங்கள் இரண்டை ஏற்றி, சாம்பிராணி மற்றும் பத்திகள் ஏற்றி மகாலட்சமியை பூஜிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் தவறாமல் கடைபிடித்து வரும் போது உங்களின் செல்வ நிலை உயர்வதை அனுபவத்தில் உணரலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
வீட்டில் உள்ள தரித்திரத்தை ஒரே நாளில் விரட்டுவதற்கான எளிய முறை

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள் மற்றும் பாரிகரங்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

English overview:
Here we have given some tips to make Goddess Mahalakshmi to stay in our home. This can be called as Mahalakshmi arul pera tips in Tamil.

- Advertisement -