உங்களை பிடித்த தரித்திரம் நீங்க உங்கள் முகம் வசீகரமாக, தினமும் குளிக்கின்ற தண்ணீரில் இந்த 2 பொருளை சேர்த்து குளியுங்கள் போதும்.

sivan-nandi-bathing
- Advertisement -

சிலரை திட்டி நாம் கேள்விப்பட்டு இருப்போம். ‘இவன் விளங்காதவன். இவன் தரித்திரம் பிடித்தவன். இவன் கையால் எதை செய்தாலும் அது உருப்படியாக நடந்து முடியாது. இவன் முகத்தில் விழித்தால் நல்லது நடக்காது.’ என்றெல்லாம் சில பேரை ஒதுக்கி வைத்திருப்பார்கள். இப்படி அதிர்ஷ்டம் கெட்டவர்களாக இருக்கும் மனிதர்களை கூட, அதிர்ஷ்டமான மனிதர்களாக மாற்றக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த சுலபமான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

bathing

சில பேருக்கு இயற்கையாகவே பிறக்கும் போதே இந்த தரித்திரம் கூடவே ஒட்டி இருக்கும். ஆனால் சில பேர் பிறந்து வளரும் சமயத்தில் அதிர்ஷ்டசாலிகளாக தான் இருப்பார்கள்‌. சில சூழ்நிலைகளில் எதிர்பாராது நடக்கும் சில சம்பவங்களின்னால் அவர்கள் அதிர்ஷ்டம் கெட்டவர்களாக மாறிவிடுவார்கள். முதலில் நம்முடைய உடலை தரித்திரம் எப்படி பிடிக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். அதன் பின்பு பிடித்த தரித்திரத்தை எப்படி நீக்குவது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பொதுவாகவே இறந்த உயிரினங்கள் வீதியில் இருக்கும் போது அந்த உயிரினங்களை தாண்டி நாம் செல்லக்கூடாது. எடுத்துக்காட்டுக்கு சில இடங்களில் எலி, நாய், பறவைகள், செத்துக் கிடக்கும். இப்படி ஜீவராசிகள் இறந்து கிடந்தால் அதை எக்காரணத்தைக் கொண்டும் தாண்டி செல்லக்கூடாது. இப்படி இறந்த ஜீவராசிகளை தாண்டினாலும் ஒருவிதமான தரித்திரம் உண்டாகும்.

bathing

மனிதர்கள் உயிர் இழந்துவிட்டாலும் இறுதி ஊர்வலத்தில் பூக்களை தூவி கொண்டே செல்வார்கள். அப்படி அந்த பூக்கள் வீதியில் சிதைந்து கிடக்கும் போது, அதை மிதித்துக் கொண்டே நடந்தாலும் உடல் தரித்திரம் பிடிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அடுத்தவர்களுடைய எச்சில் நேரடியாக நம் தேகத்தில் படும்போதும், அடுத்தவர்களுடைய எச்சிலை காலால் மிதிக்கும் போதும் கூட தரித்திரம் பிடிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

வீதியில் இப்போதெல்லாம் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது எச்சில் துப்பும் பழக்கத்தை நிறைய பேர் செய்கிறார்கள். தயவுசெய்து அந்த பழக்கத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களாக இருந்தால், வண்டி ஓட்டிக் கொண்டே இருக்கும் போது எச்சில் துப்பாதீர்கள். அது உங்கள் பின்னால் வண்டி ஓட்டிக் கொண்டு வருபவர்கள் மீது விழுகின்றது. இப்படி எச்சில் உங்கள் மீது பட்டாலும் தரித்திரம் உண்டாகும். அதுமட்டுமல்லாமல், இது ஆரோக்கிய சீர்கேடும் கூட.

pachai-karpooram1

இப்படி நம் உடலில் கலக்கக்கூடிய தரித்திரத்தையும், பிறந்ததிலிருந்தே நம்முடன் ஒட்டியிருக்கும் தரித்திரத்தையும் எப்படி சரி செய்து கொள்வது. தினமும் குளிக்கும் தண்ணீரில் 2 சிட்டிகை பச்சை கற்பூரம், 2 சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் பொடியை சேர்த்து கலந்து விட்டு, 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு இந்த தண்ணீரில் குளிக்க வேண்டும். கிழக்கு பக்கம் பார்த்தவாறு இந்த தண்ணீரில் குளித்து வந்தால் நம்மை பிடித்த தரித்திரம், நம் உடலை விட்டு நீங்கும்.

kashthuri-manjal

சில பேருக்கு சுத்தமாக மணக்க மணக்க குளித்துவிட்டு வந்தால் கூட, உடலில் துர்நாற்றம் வீசும். இந்த பிரச்சினையை எதிர் கொள்பவர்கள் கூட, இந்த குளியலை மேற்கொள்ளலாம். தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தினம்தோறும் உடல் மட்டும் குளித்தாலே போதும். தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் இப்படி, இந்த 2 பொருட்களை சேர்த்து குளித்து பாருங்கள். உங்களுக்குள் ஏதோ ஒரு மாற்றம் உண்டாகும். அதன் பின்பு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உடலில் இருக்கும் தரித்திரம் அனைத்தும் உங்களை விட்டு விலகி இருப்பதை உங்களாலேயே உணர முடியும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -