- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதரித்திரம் விலக போகி அன்று செய்ய வேண்டிய பரிகாரம்

தரித்திரம் விலக போகி அன்று செய்ய வேண்டிய பரிகாரம்

- Advertisement -

பழையன கழிதலும் புதியன புகுதலும், போகி என்றாலே நாம் நினைவிற்கு வரும் வாசகம் இது தானே. மார்கழி மாதம் நிறைவடையக்கூடிய நாள் போகி பண்டிகை. அடுத்ததாக தை மாதம் பிறக்கப் போகின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று எல்லோரும் காத்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த தை மாதம் பிறந்ததும் உங்கள் வாழ்விற்கு நிச்சயம் நல்ல வழி பிறக்கும். இதுநாள் வரை தொடர்ந்த துன்பங்களை எல்லாம்,  இந்த தைத்திருநாளில் இருந்து உங்களை விட்டு நீக்கி விடுவான் இறைவன். அனைவருக்கும் இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

- Advertisement -

போகி பண்டிகை 2025

போகி என்றாலே வீட்டு வாசலில் பழைய பொருட்களை எல்லாம் போட்டு எரித்துக் கொண்டாடுவது நம்முடைய வழக்கம். அந்த பொருட்களில் தயவுசெய்து யாரும் சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், கவர்களை போட்டு எரிக்க வேண்டாம். டயர்களை போட்டு எரிக்க வேண்டாம் என்ற வேண்டுதலையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம்.

பழைய பாய், துடைப்பம் தேவையற்ற துணிகள் இவைகளை தான் போட்டு எரிக்க வேண்டும். துடைப்பதில் பிளாஸ்டிக் துடைப்பம், பிளாஸ்டிக் பாய் இவைகளை போட்டு எரிக்கக் கூடாது. இந்த போகிப் பண்டிகையை எளிமையான முறையில் நம்முடைய வீட்டில் எப்படி கொண்டாடுவது. நம்மை பிடித்த கஷ்டங்கள் எல்லாம் நம்மை விட்டு விலக வேண்டும் என்றால் போகிப் பண்டிகை அன்று குளிக்கும் தண்ணீரில் எந்தெந்த பொருட்களை சேர்ப்பது, வீட்டில் இருக்கும் தரித்திரம் வெளியேற வேண்டும் என்றால் என்ன தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிப்பது, என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

போகி பண்டிகை 13-1-2025 அன்று அதிகாலை 4:30 மணிக்கு முன்பாகவே போஹியை உங்கள் வீட்டில் கொளுத்தி விடுங்கள். தேவையற்ற பொருட்களை எல்லாம் வெளியில் போட்டு நெருப்பு மூட்டி இறைவனை வழிபாடு செய்து கொள்ளுங்கள். இந்த போகி கொளுத்தக்கூடிய விஷயத்தை வீட்டில் இருக்கும் ஆண்கள் செய்வது சிறப்பு என்று சொல்லப்பட்டுள்ளது.

வீட்டில் குழந்தைகள் மற்றவர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருந்தாலும் போகி கொளுத்திய பிறகு அவர்களை கண் விழிக்க செய்து, இந்த போகி அக்னியை ஒரு முறை பார்க்கச் சொல்லுவது ரொம்ப ரொம்ப நல்லது. போகி நெருப்பை பார்த்த பிறகு திரும்பவும் போய் படுத்து தூங்க கூடாது.

- Advertisement -

முதலில் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் குளித்து விட வேண்டும். ஒரு சொட்டு நல்லெண்ணையை உச்சந்தலையில் வைத்து குளிக்க வேண்டும். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் எல்லாம் நல்லெண்ணெய் வைத்து போகி அன்று தலைக்கு குளிக்கலாம். பெண்களாக இருந்தால் கூடவே கொஞ்சம் மஞ்சள் தேய்த்து குளிப்பது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு போகி அன்று கட்டாயம் வீட்டை எல்லாம் துடைத்து சுத்தம் செய்து விட வேண்டும். ஏனென்றால் அடுத்த நாள் தை திருநாள் வரவிருக்கிறது. ஆகவே வீட்டை சுத்தம் செய்து கழுவி மொழுவி விடுங்கள். பூஜையறையை எல்லாம் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக சில பேருக்கு இந்த போகி நாளில் குலதெய்வ வழிபாடு செய்வது வழக்கமாக இருக்கும். சில பேருக்கு மாரியம்மன் வழிபாடு செய்வது வழக்கமாக இருக்கும். உங்கள் வீட்டில் என்ன வழக்கம் இருக்கிறதோ அதை நீங்கள் பின்பற்றிக் கொள்ளுங்கள். கூடவே ஒரு பித்தளை சொம்பு அல்லது செம்பு சொம்பு அல்லது சில்வர் சொம்பு எது வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீர், கொஞ்சம் பன்னீர், கொஞ்சம் கோமியம் கிடைத்தால் சேர்த்துக் கொள்ளுங்கள். இதோடு வேப்ப இலை, மஞ்சள் தூள், கல்லுப்பு போட்டு ஒரு தீர்த்தத்தை தயார் செய்து, பூஜை அறையில் வைத்து எங்கள் வீட்டை பிடித்த பீடை இன்றோடு ஒழிய வேண்டும் என்று குல தெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு இந்த தீர்த்தத்தை ஒரு மாஇலை அல்லது வெற்றிலை வைத்து வீடு முழுவதும் தெளித்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர போகி பரிகாரம்

போகி அன்று காலை இந்த தீர்த்தத்தை வீட்டில் தெளித்தாலும் சரி அல்லது மாலை இந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்தாலும் சரி அது உங்களுடைய விருப்பம். ஆக மொத்தத்தில் போகி அன்று இந்த திர்தத்தை தயார் செய்து வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். மீதம் இருக்கும் தீர்த்தத்தை கொண்டு போய் செடி கொடிகளுக்கு கீழே ஊற்றி விடுங்கள். மேலே சொன்ன இந்த எளிமையான விஷயங்கள் உங்களுக்கு நிச்சயம் நல்ல பலனை கொடுக்கும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த குறிப்பு வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தித் தரும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்