தரித்திரம் நீங்கி எல்லா வளங்களையும் பெற உதவும் மந்திரம்

sivan-workship

நாம் அனைவருமே வாழும் போது பல வித ஆசைகளை மனதில் சுமந்து கொண்டு வாழ்கிறோம். அவற்றில் பல நியாயமான ஆசைகளாக இருந்தாலும், பெரும்பாலானோர்க்கு அவை நிறைவேறுவதில்லை. ஆனால் அதற்கு மாறாக பலருக்கும் நோய், வறுமை போன்ற எதிர்மறையான விஷயங்கள் அவர்கள் வாழ்வில் ஏற்படுகின்றன. தான் துறவி போன்று இருந்தாலும், தன்னை வழிபடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய வரங்களை அளிப்பவர் “ருத்ரனாகிய” “சிவ பெருமான்”. அந்த வகையில் நம் வாழ்வின் எல்லா விஷயங்களிலும் சிறக்க, அந்த சிவ பெருமானை போற்றி வழிபட வேண்டிய மந்திரம் இது.

Prathosam

மந்திரம் :
“ஓம் ருத்ராய ரோகநாஷாய
அகச்சே சஹ் ரம் ஓம் நமஹ”

எனும் இம்மந்திரத்தை சிவ வழிபாட்டிற்குரிய விசேஷ தினங்களில், காலையிலோ, மாலையிலோ வீட்டிலிருந்த படியோ அல்லது சிவாலயத்துக்கோ சென்று, இம்மந்திரத்தை 21 முறை கூறி ஜெபிக்க, நம்மை பீடித்திருக்கும் நீண்ட நாள் ரோகங்கள் நீங்கும். நம்முடைய தரித்திரம் நீங்கி பொருளாதாரம் மேம்படும். தீய சக்திகள் ஏதும் அண்டாமல் நம்மை காக்கும். நம்முடைய எண்ணங்கள் சிறந்து நம் வாழ்வின் நியாயமான ஆசைகள் அனைத்தும் அந்த சிவ பெருமான் அருளாசியால் பூர்த்தியாகும்.

இதையும் படிக்கலாமே:
தினம் தினம் மகிழ்ச்சியை தரும் மந்திரம்

இது போன்ற மேலும் பல சிவன் மந்திரங்கள் அறிய எங்களோடு இணைந்திருங்கள்

English Overview:
Here we have Lord Shiva mantra in Tamil. By chanting this mantra on regular basis one can get away from negative energy and attain good stage in life.