பணம் சேர வெள்ளிக்கிழமை அன்று கூற வேண்டிய லட்சுமி மந்திரம்

lakshmi-money

பண கஷ்டத்தில் இருப்பவர்கள், பண சம்பாதிக்க வழி தேடுபவர்கள், தொழிலை விரிவு படுத்த நினைப்பவர்கள் போன்ற பலருக்கு நல்ல பலனை தரும் அற்புதமான லட்சுமி மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இம் மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக பணம் சம்பாதிப்பதற்கான வழி பிறக்கும்.

Lakshmi goddess

மந்திரம்:
ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமக

வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் பால் பாயாசம், கற்கண்டு, வெற்றிலைபாக்கு, பழங்கள் போன்றவற்றை வைத்து விளக்கேற்றி லட்சுமி தேவியை வழிபட்டு மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பலனாக வாழ்வில் விரைவான முன்னேற்றத்தை காணலாம்.

இதையும் படிக்கலாமே:
குழந்தை பாக்கியம் பெற ஆண்கள் ஜபிக்கவேண்டிய சூரியன் காயத்ரி மந்திரம்

வாரத்தின் மற்ற நாட்களில், தொழில் செய்யும் இடங்கள் மற்றும் வீட்டில் தீபம் ஏற்றி, மேலே உள்ள மந்திரத்தை 9 முறை ஜபித்து, லட்சுமி தேவியிடம் வளமான வாழ்வை தந்தருள வேண்ட வேண்டும். தீபம் நின்ற பிறகு அந்த தீப திரியில் உள்ள கருக்கை லட்சுமி தேவியை நினைத்து நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும்.