தட்டைப் பயறை வைத்து கட்லெட் செய்வது இவ்வளவு ஈசியா? ஊட்டச்சத்துகள் நிறைந்த, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய இந்த ஸ்நாக்ஸ் ரெசிபியை மிஸ் பண்ணாதீங்க!

cutlet

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றைய சூழ்நிலையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவினை சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்க வேண்டும். அதே சமயம் அந்த சாப்பாடு நாவிற்கு சுவை தருவதாகவும் இருக்க வேண்டும். நோய் தீவிரமாக பரவி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள நாம் சாப்பிடும் உணவு வகைகளுக்கும் முதலிடம் உண்டு. அந்த வரிசையில் நம் வீட்டில் இருக்கும் தட்டை பயிரை வைத்து சுலபமான முறையில் ஒரு கட்லெட் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

cutlet3

தட்டைப் பயறை 1/2 கப் அளவு எடுத்து, இரண்டு முறை கழுவி தட்டபயிறு மூழ்கும் வரை நல்ல தண்ணீரை ஊற்றி மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் ஊறவைத்து விடுங்கள். அதன் பின்பு ஒரு குக்கரை எடுத்துக்கொள்ளுங்கள். ஊற வைத்த தட்டை பயிரை மட்டும் குக்கரில் போட்டு, 1 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, 1/2 ஸ்பூன் உப்பு போட்டு 4 விசில் வைக்க வேண்டும்.

வேக வைத்த தட்டை பயிறை ஒரு வடிகட்டியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இதை ஒரு அகலமான பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். இப்போது தட்டை பயறு வேக வைத்து தயாராக உள்ளது அல்லவா. இந்த தட்டை பயறை மத்து வைத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். சில பேர் இதை காராமணி என்றும் சொல்லுவார்கள்

cutlet2

மசித்த தட்டைப்பயிறுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய – பூண்டு ஒரு ஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி தழை – கைப்பிடி அளவு, மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது, மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், மல்லித் தூள் – 1/4 ஸ்பூன், சீரக தூள் – 1/4 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்டோன், எலுமிச்சைப்பழச் சாறு – 2 டேபிள் ஸ்பூன், இறுதியாக பிரெட் கிரம்ப்ஸ் – 1/2 கப் அளவு, தேவையான அளவு உப்பு சேர்த்து, இதை உங்களுடைய கையை கொண்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். தட்டைப் பயறை வேக வைக்கும் போது உப்பு சேர்த்து இருக்கின்றோம் பார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்களுடைய கையில் கொஞ்சமாக எண்ணையை தடவிக் கொண்டு, தயார் செய்து வைத்திருக்கும் இந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருண்டை பிடித்து கட்லெட் வடிவத்தில் தட்டி தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

cutlet1

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி தயாராக இருக்கும் கட்லெட்டுகளை எடுத்து தோசைக்கல்லில் போட்டு மிதமான தீயில் சிவக்க வைத்து எடுத்து பரிமாறினால் தட்டை பயிறு கட்லெட் தயார். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும் செய்து கொடுத்து பாருங்கள். நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்.