தவறு செய்தால் ஒத்துக் கொள்கிற தைரியம் வேண்டும்! எந்த 5 ராசிக்காரர்கள் செய்த தவறை ஒப்புக் கொள்வார்கள் தெரியுமா? இவர்களா இப்படி?

astro-palan
- Advertisement -

ஒரு மனிதன் தவறே செய்ய முடியாமல் நிச்சயம் வாழ முடியாது. பொய்யே சொல்லாத ஹரிச்சந்திரன் கதைகளில் மட்டுமே நாயகனாக இருக்கிறான். எல்லோருக்குமே பொய் சொல்லாமல் உண்மையாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கத்தான் செய்கிறது ஆனால் சந்தர்ப்பமும், சூழ்நிலையும் ஒரு மனிதனை நிச்சயம் ஏதோ ஒரு கட்டத்தில் தவறு செய்ய வைத்து விடும். அப்படி செய்தாலும் அதனை ஒப்புக் கொள்ளும் தைரியம் இருப்பவர்கள் நேர்மையானவர்களாக கருதப்படுகிறார்கள். அத்தகைய தைரியம் எந்த 5 ராசிக்காரர்களுக்கு உண்டு? என்று தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் நேர்மையாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால் இவர்களின் நேர்மை பல இடங்களில் அவமதிக்கப்படும் பொழுது அங்கு அவர்கள் தவறு செய்யத் துணிகிறார்கள். செய்த தவறை மற்றவர்கள் அறிவதற்கு முன்னரே நான் தான் இதைச் செய்தேன் என்று வலிய வந்து ஒப்புக் கொள்ளும் மனோதிடம் இவர்களிடம் உண்டு. அதனால் இவர்களுக்கு எதிரிகளும் அதிகமாக இருப்பார்கள்.

- Advertisement -

கடகம்:
தேள் போல சதா கொட்டிக் கொண்டிருக்கும் இவர்களிடம் நேர்மையும் கொட்டிக் கிடக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆமாங்க, கோவம் இருக்கும் இடத்தில் தான் குணமும் இருக்கும் என்று கூறுவார்கள். அந்த வகையில் இவர்களுக்கு எந்த அளவிற்கு கோபம் வருகிறதோ, அந்த அளவிற்கு பாசமும், விசுவாசமும் அதிகமாகவே இருக்கிறது. விசுவாசத்திற்காக தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள துணியும் இவர்களை போன்றவர்கள் அருகில் இருப்பது மற்ற ராசியினருக்கு பலம் தான்.

துலாம்:
தராசு சின்னத்தை கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு நேர்மை, நியாயம் என்கிற கோட்பாடு ரொம்பவே முக்கியம். இவனும் வாழ மாட்டான், அடுத்தவரையும் வாழ விட மாட்டான் என்று சிலர் சொல்ல நாம் கேட்டிருப்போம். இது நிச்சயம் இவர்களுக்குத் தான் பொருந்தும். இவர்கள் நேர்மையாக இருக்கிறேன் என்கிற என்கிற பெயரில், மற்றவர்களையும் அதே போல இருக்க வைத்து விடுவார்கள். தெரியாமல் தான் செய்த தவறுகளை தைரியமாக ஒப்புக் கொள்ளும் துணிச்சல் கொண்ட இவர்களுக்கு மற்றவர்கள் சற்று பயந்து தான் ஆக வேண்டும்.

- Advertisement -

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் சமயத்திற்கு ஏற்ப அவ்வப்போது தங்களுடைய குணத்தை மாற்றிக் கொள்வார்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களில் தன் குணத்தை மாற்றிக் கொள்வதால் மற்றவர்களுக்கு இவர்கள் நேர்மையற்றவர்கள் ஆக தெரிவது உண்டு. சூழ்நிலை கருதி பல இடங்களில் இவர்கள் ஏதாவது தவறுகளை செய்து விட்டாலும், அதனை மறைக்காமல் ஒப்புக் கொண்டு விடுவார்கள். அதனால் வரும் சாதக பாதக பலன்களை பற்றி இவர்கள் கவலைப்படுவது கிடையாது.

மகரம்:
தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக் கொண்டு அதன்படி நடக்கும் மகர ராசிக்காரர்கள் எப்பொழுதும் துணிச்சலுடன் காணப்படுகிறார்கள். தோல்விகள் எவ்வளவு வந்தாலும், அதனை கண்டு துவண்டு விடாமல் மீண்டும் மீண்டும் எழுந்து ஓட துவங்குவார்கள். சூழ்நிலை தவறான வழியில் கொண்டு சென்றாலும், அதிலிருந்து இவர்களாகவே மீண்டு வந்து விடுவார்கள். இவர்களுக்கென இருக்கும் ஒரு லட்சியத்திலிருந்து இவர்கள் எப்பொழுதும் பின் வாங்குவது இல்லை. அதனால் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதனை ஒப்புக் கொண்டு தன்னைத் தானே சீரமைத்துக் கொள்வதில் வல்லவர்கள்.

- Advertisement -