தப்பித் தவறியும் உங்கள் வாயிலிருந்து இது போன்ற வார்த்தைகள் வெளிவராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது போன்ற வார்த்தைகள் மகாலட்சுமியை நமது வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்து விடும்

pesa
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் படித்து முடித்தவுடன் சிறிய வேளையில் தனது வாழ்க்கையை துவங்கி, அதன்பின் தனது கடின உழைப்பின் மூலமாக அதிக அளவு சம்பாதனை தரக்கூடிய பெரிய பதவிக்கு செல்ல முடிகிறது. அது போல சிறு சிறு விஷயங்கள் தான் நம் வாழ்க்கையை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்பவைகளாக இருக்கின்றன. அவ்வாறு நாம் செய்யும் சிறிய தவறுகளும் நமது வாழ்க்கையை அடி மட்டத்திற்கு கொண்டு சென்றுவிடும். இப்படி நமது வாயில் இருந்து வரக்கூடிய சில வார்த்தைகள் மூலமாக மகாலட்சுமி தேவியின் அதிர்ஷ்டத்தை நாம் தடுத்து விடுகிறோம். எனவே தவறியும் நமது வாயில் இருந்து வரக்கூடாத அந்த வார்த்தைகள் என்னென்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

job

ஐஸ்வர்யத்தையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தருகின்ற மகாலட்சுமி தேவியின் அருளைப் பெறுவதற்கு நமது வாயிலிருந்து வரும் வார்த்தைகளே காரணமாக அமையும். என்னதான் கடுமையாக உழைத்தாலும், வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலும், பல பூஜைகள் செய்தாலும் நாம் பேசுகின்ற வார்த்தை மிகவும் தூய்மையானதாக இருந்தால் மட்டுமே நாம் நினைக்கும் காரியங்கள் நன்மையாக நடைபெறும்.

- Advertisement -

ஏனென்றால் நம்மை சுற்றி எப்போதும் அஷ்டதேவதைகள் சூழ்ந்து கொண்டிருப்பார்கள் எனவே நாம் பேசும் வார்த்தைகளுக்கு அவர்கள் ததாஸ்து என்று சொல்லிவிடுவார்கள். இப்படி சொல்வதற்கு அர்த்தம் என்னவென்றால் நீங்கள் சொல்வதும், நினைப்பதும் அப்படியே ஆகட்டும் என்று பொருள்படும். எனவே தான் எப்பொழுதும் வீட்டில் உள்ள பெரியவர்கள் நல்லதையே பேச வேண்டும், நல்லதையே நினைக்க வேண்டும் என்றும், எண்ணம் போல் தான் வாழ்க்கை அமையும் என்றும் சொல்வார்கள்.

cash

அப்படி நாம் சொல்லக்கூடாத வார்த்தையில் முதலில் இடம் பெறுவது இல்லை என்ற வார்த்தை தான். வீட்டில் அரிசி இல்லை, பணம் இல்லை, என்னிடம் நகை இல்லை என்று சொல்வதை தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக அரிசி வாங்க வேண்டும், எப்படியாவது பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும், கூடிய விரைவில் நகை வாங்க வேண்டும் என்று மாற்றிச் சொல்லலாம். எனவே இல்லை என்ற வார்த்தை சொல்வதை தவிர்த்து விடுங்கள்.

- Advertisement -

அவ்வாறு நவகிரகங்களில் மிகவும் பயத்தை ஏற்படுத்தும் சனிபகவானின் பெயரை மற்றவர்களை திட்டுவதற்காக கோபமாக சனியனே என்று குறிப்பிடக் கூடாது. இவ்வாறு அழைப்பதால் அவர் நம்முடனே வந்து தங்கி விடுவார். எனவே தீராத துயரத்திற்கு ஆளாகி விடுவோம். அப்படி குழந்தைகளை சபிப்பதோ, திட்டி பேசுவதோ கூடாது. அவர்கள் தவறு செய்தாலும் அவர்களுக்கு புரிகின்ற வகையில் அவற்றை தெளிவுபடுத்த வேண்டுமே தவிர இழி சொற்களை பயன்படுத்தி பேசக்கூடாது.

sani-bagavaanl

அதுபோல மூதேவி என்ற வார்த்தையையும் பயன்படுத்தக்கூடாது. இந்த வார்த்தை ஸ்ரீதேவி என்பதற்கு எதிர்மாறான ஒரு எதிர்மறை சக்தியாகும். இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தினால் மூதேவி நமது வீடு தேடி வந்து விடுவாள். அடுத்ததாக வீட்டிலுள்ள பெண்கள் அமங்கலமான வார்த்தைகளைச் சொல்லி புலம்ப கூடாது.

mahalakshmi

இதுபோல பலரும் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய ஒரு வார்த்தை ஐயோ என்பதாகும். இது எமதர்மனின் மனைவியின் பெயராகும். இந்த வார்த்தையை நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் எமதர்மன் விரைவாக நமது வீடு தேடி வந்து விடுவார். இதனால் அமங்கலமான விஷயம் தான் நடைபெறும்.

- Advertisement -