இனி தயிர் வடை செய்யும் போது இந்த மசாலா சேர்த்து செஞ்சு பாருங்க. ஹோட்டல்ல கொடுக்கிற அந்த டேஸ்ட் கொஞ்சம் கூட மாறாம அப்படியே இருக்கும்.

- Advertisement -

பலவகையான வடை ரெசிபிகளில் இந்த தயிர் வடை ரொம்பவே பிரபலமான ஒரு டிஷ் தான். பெரும்பாலும் இதை வீட்டில் அதிகம் செய்வதில்லை. இதை செய்யும் முறையில் கொஞ்சம் பிசங்கினாலும் வடை சுத்தமாக நன்றாகவே இருக்காது. இந்த பதிவில் உள்ள குறிப்புகளை தெரிந்து கொண்டு செய்யும் போது நல்ல ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடும் ரிச்சான டேஸ்ட்டில், இந்த தயிர் வடையை ரொம்பவே சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.

செய்முறை

இந்த தயிர் வடை செய்வதற்கு முதலில் 1 கப் உளுந்தை இரண்டு முறை கழுவி சுத்தம் செய்து மூன்று மணி நேரம் ஊற வைத்த பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து உளுந்து வடைக்கு அரைப்பது போல் அரைத்து எடுத்துக் உப்பு சேர்த்து மாவை நன்றாக அடித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த வடை மாவில் வேறு எதையும் சேர்க்கக் கூடாது.

- Advertisement -

அடுத்ததாக ரெண்டு கப் கட்டி தயிரை ஒரு பவுலில் எடுத்து கொஞ்சம் கூட கட்டிகள் இல்லாத படி கலந்து வைத்து கொள்ளுங்கள்.

இப்போது தயிர் வடைக்கு தேவையான இந்த மசாலாவை அரைத்து விடுவோம். அதற்கு ஒரு சிறிய துண்டு இஞ்சி, ஒரு டேபிள் ஸ்பூன் கெட்டி தயிர், ஒரு பச்சை மிளகாய் மூன்றையும் தண்ணீர் சேர்க்காமல் நல்ல பையன் பேஸ்ட் ஆக அரைத்து இதையும் அடித்து வைத்திருக்கும் தயிரில் சேர்த்து கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த தயிருக்கு ஒரு சின்ன தாளிப்பை சேர்த்து விடலாம். அதற்கு அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து சூடானவுடன், ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு உளுந்து கால் டீஸ்பூன் சேர்த்து பொரிந்த பிறகு கால் டீஸ்பூன் சீரகம் ஒரு கொத்து கருவேப்பிலை கால் டீஸ்பூன் பெருங்காயம் இவை அனைத்தையும் சேர்த்து பொரிந்த உடன் அதை எடுத்து வைத்திருக்கும் தயிரில் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள்.

இப்போது அடுப்பில் எண்ணெய் கடாய் வைத்து காய்ந்தவுடன் அடுப்பை மிதமான தீக்கு மாற்றிக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் பக்கத்தில் இன்னொரு அடுப்பில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரை சூடு படுத்தி கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது எண்ணெயில் வடைகளை எடுத்து ஒவ்வொன்றாக போட்டு ஒரு புறம் சிவந்த பிறகு மறுப்புறம் திருப்பி போட்டு எடுத்த பிறகு அந்த வடைகளை கொதித்துக் கொண்டிருக்கும் சுடுதண்ணீரில் போட்டு இரண்டு நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு அதிலிருந்து எடுத்து தண்ணீர் பிழிந்து விட்டு நாம் கலந்து வைத்திருக்கும் தயிரில் சேர்த்து விட வேண்டியது தான்.

நீங்கள் எப்போது சாப்பிட வேண்டுமோ அப்போது தான் வடையை சுடுதண்ணீரில் போட வேண்டும். முன்னமே நாம் வடையை தண்ணீரில் போட்டு தயிரில் சேர்த்து நேரம் கழித்து சாப்பிட்டால் நன்றாக இருக்காது எனவே வடைகளை சுட்டு வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் முன்பு சுடுதண்ணியில் போட்டு எடுத்து அதன் பிறகு தயிரில் கலந்து எடுத்து சாப்பிடுங்கள் சுவை நன்றாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: சப்பாத்தி போடுற நேரத்துக்குள்ளே அட்டகாசமான சுவையில் இந்த மஸ்ரூம் கிரேவியை செஞ்சி முடிச்சிடலாம். இந்த கிரேவி இருந்தா சப்பாத்திக்கு கறி குழம்பு கூட வேணாம் இதுவே போதும் சொல்லுவாங்க.

தயிரில் வடை நன்றாக மூழ்கிய பிறகு அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி, காராபூந்தி, துருவிய கேரட் சிறிதளவு மிளகாய் தூள் இது எல்லாம் லேசாக தூவி பரிமாறினால் அப்படியே ஹோட்டலில் போய் சாப்பிட்டு திருப்தி கிடைக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -