சப்பாத்தி போடுற நேரத்துக்குள்ளே அட்டகாசமான சுவையில் இந்த மஸ்ரூம் கிரேவியை செஞ்சி முடிச்சிடலாம். இந்த கிரேவி இருந்தா சப்பாத்திக்கு கறி குழம்பு கூட வேணாம் இதுவே போதும் சொல்லுவாங்க.

Mushrrom gravy
- Advertisement -

அசைவ உணவுகளில் எப்படி விதவிதமாக நாம் சமைக்க முடியுமோ அதே போலவே சைவ உணவுகளை கூட அதே அசைவையில் இந்த மஸ்ரூம் வைத்து செய்ய முடியும். அப்படி ஒரு சுவையான மஸ்ரூம் கிரேவியை தான் அசைவ சுவையில் செய்யப் போகிறோம். வாங்க அந்த மஸ்ரூம் கிரேவியை எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த கிரேவி செய்வதற்கு அடுப்பில் பேன் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் இரண்டு வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு இன்ச் இஞ்சித் துண்டு, பத்து பல் பூண்டு, 2 பெரிய பழுத்த தக்காளி இவை அனைத்தையும் பெரிதாக நறுக்கி இதில் சேர்த்த பின் 10 முந்திரியும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி ஆற வைத்த பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஏதும் ஊற்றாமல் பைன் பேஸ்ட்டாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது மறுபடியும் அடுப்பில் பேன் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு 1 துண்டு பட்டை, 2 ஏலக்காய், 1 லவங்கம் இவை எல்லாம் சேர்த்து பொரித்த பிறகு அடுப்பை சிம்மில் வைத்து ஏற்கனவே அரைத்த வெங்காய தக்காளி விழுதை இதில் சேர்த்து ஒரு முறை கலந்து விடுங்கள்.

அதன் பிறகு 2 ஸ்பூன் மிளகாய் தூள், 2 ஸ்பூன் தனியா தூள்,1/2 டீஸ்பூன் கரம் மசாலா, /4 டீஸ்பூன் மஞ்சள் தூள்,1/2 டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து ஒரு முறை நன்றாக வதக்கி கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு இரண்டு நிமிடம் வரை நன்றாக கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

இந்த நேரத்தில் 300 கிராம் மஷ்ரூமை பெரிய துண்டுகளாக நறுக்கி அலசி சுத்தம் செய்து எடுத்து கொதித்துக் கொண்டிருக்கும் கிரேவியின் சேர்த்து ஒரு முறை கலந்த பிறகு மீண்டும் 2 நிமிடம் கொதிக்க விடுங்கள். இப்பொழுது எண்ணெய் பிரிந்து மஸ்ரூம் வெந்திருக்கும். கடைசியாக 1 ஸ்பூன் கஸ்தூரி மேத்தியை கைகளில் கசக்கி இதில் தூவி கொத்த மல்லி தழைகளையும் மேலே தூவி ஒரே ஒரு கொதி மட்டும் வந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: சத்து நிறைந்த இந்தக் கீரையுடன் 2 முட்டை சேர்த்து செய்து பாருங்கள் அட்டகாசமா இருக்கும்! பாலக்கீரை பொரியல் சுவையாக செய்வது எப்படி?

சுவையான மஸ்ரூம் கிரேவி பத்தே நிமிடத்தில் தயாராகி விடும். இந்த கிரேவி செய்வது மிகவும் சுலபம் அதே நேரத்தில் சுவையும் அட்டகாசமாக இருக்கும். சப்பாத்தியுடன் இதை வைத்து சாப்பிடும் போது கறிக் குழம்பே தோற்றுப் போய் விடும். அந்த அளவிற்கு பிரமாதமாக இருக்கும். இது இட்லி, தோசை போன்றவற்றின் கூட வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -