தயிரும் வேர்கடலையும் வைச்சு இட்லி, தோசைக்கு இப்படி சட்னி அரைச்சு பாருங்க. மாவு காலி எந்திரிங்கன்னு சொல்ற வரைக்கும் சாப்பிட்டே இருப்பாங்க. செம டேஸ்டியான சட்னி ரெசிபி.

- Advertisement -

இட்லி, தோசை, பொங்கல் போன்றவைகளுக்கு நாம் என்ன தான் சாம்பார் வைத்தாலும் இந்த சட்னி இருந்தால் கூட கொஞ்சம் சாப்பிட தான் தோன்றும். சட்னியில் பல விதம் உண்டு, அதில் இந்த வேர்க்கடலை சட்னி கொஞ்சம் வித்தியாசமான ரெசிபி தான். வேர்கடலையை வைத்து எத்தனை விதமாக சட்னிகள் இருந்தாலும், தயிர் சேர்த்து அரைக்கும் இந்த ரெசிபியை ஒரு முறை நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப வித்தியாசமாக அதே சமயத்தில் சுவை பிரமாதமாகவும் இருக்கும். அந்த சட்னி ரெசிபி எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம்.

தேவையான பொருட்கள்: வேர்க்கடலை – 1கப், பச்சை மிளகாய் – 4, இஞ்சி -1 துண்டு, தேங்காய் துருவியது – கால் கப், புளிக்காத தயிர் – 1/4 கப், கடுகு – 1 டீஸ்பூன், சீரகம் -1 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், புளி – 1 கொட்டைப்பாக்கு அளவு, காய்ந்த மிளகாய் -2, கருவேப்பிலை சிறிதளவு.

- Advertisement -

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து வேர்க்கடலை மேலே உள்ள தோல் பிரிந்து வரும் அளவிற்கு நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதே கடாயை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள். அத்துடன் ஒரு துண்டு இஞ்சியும் சிறிதாக நறுக்கி அதையும் வதக்கி எடுத்து ஆற வைத்து கொள்ளுங்கள்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்து வேர்க்கடலை சேர்த்த பின், வதக்கிய பச்சை மிளகாய், இஞ்சி அனைத்தையும் சேர்த்த பிறகு துருவிய தேங்காயும் இதில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் ஒரு முறை மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள். அப்போது தான் வேர்க்கடலை மற்ற பொருட்கள் எல்லாம் நன்றாக அரைபடும். அதன் பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். அத்துடன் உப்பு, புளி சேர்த்து நல்ல நைசாக பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.இப்போது கடைசியாக கால் கப் புளிக்காத தயிரையும் சேர்த்து நன்றாக ஒரு முறை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

சட்னியை தாளிப்பதற்கு அடுப்பில் ஒரு சிறிய கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் போட்டு பொரிந்தவுடன் இரண்டு காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு கருவேப்பிலையும் சேர்த்து தாளித்து அதை இந்த சட்னியில் சேர்த்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இந்த தீபாவளிக்கு ரவையை வைத்து குண்டு குண்டு சாப்டான குலாப் ஜாமுன் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

அவ்வளவு தான் சுவையான வேர்கடலை தயிர் சட்னி தயார். இந்த சட்டினி ஒன்று இருந்தால் போதும் உங்கள் வீட்டில் வேண்டாம் என்று சொல்லாமல் சுட சுட சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும்.

- Advertisement -