நமக்கு எப்பொழுதும் முதல் எதிரியாக இருப்பது கோபம்தான்! இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்

kovil-gopuraml

பல பிரச்சினைகளுக்கு முதல் அடித்தளமாக இருப்பது கோபம்தான். கோபத்தினால் வீட்டிலும், மற்ற இடங்களிலும் இந்த கோபத்தினால் நம் அன்றாட வாழ்வில் நிம்மதி இல்லாமல் போய்விடுகின்றது. இந்த கோபத்தை குறைத்துக் கொள்வது எப்படி என்பதை இப்பதிவில் நாம் காணலாம்.

 

நாம் ஒரு செயலை சரி என்று தீர்மானித்துக் கொண்டு வைத்திருப்போம். அந்த செயலை மற்றொருவர் மீறும்போது நம்மை அறியாமலே நமக்கு மற்றவர் மீது கோபம் வருவதற்கான முதல் படி ஆகும். முதலில் நாம் நமது கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். உலகத்தில் உள்ள அனைவரையும் நம்மால் சரியான நேர்கோட்டில் கொண்டு செல்ல முடியாது. இதனால், நமது வேலையும் செய்யமுடியாமல் தேவையில்லாத பிரச்சனைகளில் நாம் செல்ல நேர்ந்திடும்.

எப்பொழுதும் கோபப்படுவதற்கு முன் நன்றாக யோசித்துக் கொள்ள வேண்டும். இதில் நமக்கு என்ன பிரச்சனை வரும் என ஆராய்ந்து கொண்டு பின்னரே நாம் கோபத்தை வெளிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தேவையில்லாத அவமானங்களை சந்திக்க நேரிடும். இந்த கோபத்தினால் நாம் வீட்டில் இருப்பவர்களையும் மற்றவர்களும் கொடுத்த மரியாதை, குறைவாக நாம் பேசி விடுவோம். இதனால், வீட்டில் உள்ள நிம்மதி கெடும்.அன்பும் சகிப்புத்தன்மையும் நம் மனதில் இருந்து விட்டால் கோபம் என்பது அவ்வளவு எளிதில் நமக்கு வந்துவிடாது. இதனால் தேவையில்லாத பிரச்சனைகளை நாம் சந்திக்க இயலாது.

- Advertisement -

 

மற்றவர்கள் நம்மிடத்தில் கோபப்பட்டாலும், நாம் அதை சகித்துக்கொண்டு பேசாமல் அமைதியாக உட்கார வேண்டும். இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. நாம் கோபப்படும்போது மற்றவர்கள் நம்மீது கோபப்படும் போதும், நாம் அமைதியாகவும், பக்குவமாகவும் இருப்பது நல்லது. எல்லா நேரங்களிலும் நாம் நிதானத்தோடு இருந்தால் நிம்மதியாக வாழலாம். எனவே, கோபத்தைத் தணித்து அனைவரிடத்திலும் நற்புகழைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்திடுவோம்.

இதையும் படிக்கலாமே:
அன்றாட வாழ்வில் முறையான உணவு பழக்கத்தை நாம் எப்படி பின்பற்றுவது

English Overview:
Here we have The benefits of controlling this anger in tamil. We have details of The benefits of controlling this anger too.