மனதில் நினைத்த குறிக்கோளை நிறைவேற்ற வேண்டுமா? காஞ்சி பெரியவர் கூறிய 16 தீப வழிபாடு.

kanchi-periyava

நம்முடைய மனதில் நினைத்திருக்கும் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்கு விடாமுயற்சி என்பது மிக அவசியமான ஒன்று. அடுத்ததாக தோல்வியை கண்டு அழக்கூடாது. பயப்படக்கூடாது. துவண்டு போகக்கூடாது. தோல்வி என்ற கஷ்டத்தில் தான், வெற்றி மறைந்திருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள், நிச்சயமாக வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து உள்ளார்கள் என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய முயற்சியும், செயல்பாடும் தான் நம் கையில் உள்ளதை தவிர, வெற்றி தோல்வி நம் கையில் இல்லை. வெற்றியைத் தருவதும், தோல்வியை தருவதும் அந்த இறைவனிடத்தில் தான் உள்ளது. நாம் செய்யும் முயற்சி ஒரு பக்கம் இருக்க, ஒரு பக்கம் இறைவழிபாட்டை மேற்கொள்வது அவசியமாகிறது.

amman

நம் மனதில் இருக்கும் குறிக்கோளானது எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம். வீடு வாங்க வேண்டும். வாகனம் வாங்க வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். நல்ல பணம் சம்பாதிக்க வேண்டும். நம் குடும்பம் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்க வேண்டும். இப்படி உங்கள் மனதில் இருக்கும் வேண்டுதல், குறிக்கோள் அல்லது லட்சியம் எந்தப் பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதை நிறைவேற்றுவதற்கு ஒரு சுலபமான இறைவழிபாட்டை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பரிகாரத்தை மகாபெரியவர், கஷ்டத்தோடு வந்த தன் சீடருக்கு கூடியது. இதற்கு தேவைப்படும் பொருட்கள் புதிதாக வாங்கப்பட்ட 16 மண் அகல் விளக்குகள், பஞ்சுத் திரி, நெய். வழக்கம்போல வெள்ளிக்கிழமை அன்று வீட்டை எப்படி சுத்தம் செய்திகளோ அப்படி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். முதலில் எந்த தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ள போகிறீர்கள் என்பதை நாம்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும். உங்கள் இஷ்ட தெய்வமாக இருக்கலாம். குல தெய்வமாக இருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு அம்மன் தெய்வமாக இருக்கலாம். எந்த தெய்வமாக இருந்தாலும் முதலில் அந்த திருவுருவப்படம் உங்களது வீட்டில் இருக்க வேண்டும்.

deepam

அந்த திரு உருவ படத்திற்கு முன்பாக முதல் வாரம் வெள்ளிக்கிழமை, ஒரு தாம்பூலத் தட்டில் அகல் விளக்கை வைத்து, நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றுவதற்கு முன்பு அகல் தீபத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளலாம். உங்களால் முடிந்தால் பேரிச்சை பழம், கற்கண்டு நைவேத்தியமாக படைக்கலாம். உங்கள் வீட்டில் இறைவனுக்காக வைக்க பழங்கள் இருந்தால்கூட அதை நைவேத்தியமாக வைக்கலாம்.

- Advertisement -

முதல் வாரம் ஒரு நெய் தீபம். இரண்டாவது வாரம் வெள்ளிக்கிழமை இரண்டு தீபம் ஏற்றி, உங்கள் மனதில் நினைத்திருக்கும் உங்களது வேண்டுதல் என்னவோ அதை மனதார கூறி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக மூன்றாவது வாரம் மூன்று தீபம். நான்காவது வாரம் 4 தீபம். இப்படியாக 16 வாரமும் தொடர்ந்து தீபம் ஏற்றி உங்களது வேண்டுதலை உங்கள் இஷ்ட தெய்வத்தின் முன்பாக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். 16 வது வாரம் முடிவடையும் நேரத்தில் 16 தீபத்தை ஒன்றாக ஏற்றி வைத்திருப்பீர்கள். அப்போது சர்க்கரைப் பொங்கல் அல்லது உங்களால் என்ன பிரசாதம் செய்யமுடியுமோ அந்த பிரசாதத்தை நைவேத்தியமாக படைத்து உங்களது பூஜையை தீப, தூப ஆராதனை காட்டி நிறைவேற்றிக் கொள்ளலாம்.

neideepam

இந்த பரிகாரமானது நான்கு மாதங்கள் தொடரும். உங்களது முயற்சிகளையும் கைவிடாமல், பரிகாரத்தையும் கைவிடாமல் தொடர்ந்து கொண்டே வாருங்கள். நிச்சயம் உங்கள் மனதில் நினைத்த காரியம் வெற்றி அடையும். ஆண்களும் இந்த தீபத்தை ஏற்றலாம். பெண்களும் ஏற்றலாம். பெண்களுக்கு இடையில் இயற்கை உபாதைகள் இருக்கும். அந்த சமயத்தில் பூஜையை செய்யாமல், அடுத்த வாரத்திலிருந்து தொடரலாம் தவறில்லை. 16 வாரங்கள் மட்டும் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். இறைவனை மனதார நினைத்து, உண்மையாக தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ளப்படும் எந்த ஒரு பிரார்த்தனையும் வீணாகாது என்பதை தீபம் ஏற்றிய பின்பு தான் உணரமுடியும்.

இதையும் படிக்கலாமே
நம் வீட்டிற்குள் நுழையும் கெட்ட சக்தியை வாசலிலேயே தடுத்து நிறுத்த வேண்டுமா? இந்த 2 பொருள் போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have agal vilakku deepam. deepam etrum murai. nei deepam. vilakku poojai