நம் வீட்டிற்குள் நுழையும் கெட்ட சக்தியை வாசலிலேயே தடுத்து நிறுத்த வேண்டுமா? இந்த 2 பொருள் போதும்.

- Advertisement -

நம் வீட்டிற்குள், நம்மை அறியாமல், கண்ணுக்கு புலப்படாத சில கெட்ட சக்திகள் நுழைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. விதியின் பயனால் நாம் அனுபவிக்கும் கஷ்ட நஷ்டத்திற்கு கூட சில கெட்ட சக்திகள் தான் காரணமாக இருக்கும். இது ஒரு பக்கம் இருக்க, நம் முன்னேற்றத்தை கண்டு பொறாமை படுபவர்களால், ஏவிவிடப்படும் கெட்ட சக்திகளில் இருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில்தான் நாம் இருக்கின்றோம். ஏனென்றால் போட்டிகள், பொறாமைகள் நிறைந்த இந்த உலகத்தில் ஒருவரது முன்னேற்றத்தை தடுக்க எதிரிகள் இதைத்தான் செய்ய வேண்டும் என்று வரைமுறை வைக்காமல், பில்லி, சூனியம், ஏவல் இவைகளை ஏவிவிட்டு தங்களது தீய எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட தீய சக்திகள் நம் வீட்டில் நுழைய வேண்டும் என்றால், இரண்டு வழிகள் மட்டும் தான் இருக்கின்றது. ஒன்று நில வாசல்படி. மற்றொன்று ஜன்னல்.

இந்த இரண்டு வழிகளில் இருந்தும் தீய சக்திகள் நம் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க நம் முன்னோர்கள் சொன்ன ஒரு சிறிய பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது ஒரு சுலபமான பரிகாரம் தான். நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயத்தை முறையாக எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

நம்முடைய வீட்டின் நில வாசல் படியிலும், ஜன்னலிலும் மஞ்சள் குங்குமத்தை வைப்பதை நம் முன்னோர்கள் வழக்கமாக வைத்து வந்துள்ளார்கள். இதற்கு காரணம் வீட்டில் கெட்ட சக்திகள் அண்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இதிலும் ஒரு சூட்சும ரகசியம் அடங்கியுள்ளது. மஞ்சள் குங்குமத்தை வைப்பதற்கு முன்பாக அஷ்டதிக் பாலகர்களான இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசன் இந்த எட்டு பெயர்களை மனதார உச்சரித்து, ‘நம் வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சக்தியும் வரவிடாமல் நீங்களே பாதுகாக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டு, அதன் பின்பு நில வாசற்படியில் ஜன்னலும் உங்கள் முறைப்படி மஞ்சள் குங்குமத்தை வைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த மஞ்சள் குங்குமத்தையும் குறிப்பிட்ட இந்த நாளில் வைக்கும்போது மிகச் சிறப்பான பலனை நம்மால் அடைய முடியும்.

Turmeric

அது எந்த நாள்? ஒவ்வொரு மாதமும் வாஸ்து நாள் என்று ஒன்று வரும். அந்த வாஸ்து நாளில் வாஸ்து நேரம் என்று ஒன்று இருக்கும். நம்முடைய வீட்டில் கெட்ட சக்திகள் அண்டாமல் இருக்க ஒவ்வொரு மாதமும் வரும் வாஸ்து நாளில், வாஸ்து நேரத்தில், அஷ்டதிக்பாலகர்களை மனதார வேண்டிக்கொண்டு, மஞ்சளையும் குங்குமத்தையும் வைத்தால் கட்டாயமாக எந்த ஒரு கெட்ட சக்தியும் நம் வீட்டிற்குள் அண்டாது என்று நம் முன்னோர்களால் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

kungumam

ஆகவே பெயின்ட் மூலம், ஸ்டிக்கர் மூலம் மஞ்சள் குங்குமம் வைத்திருக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால் அதை முடிந்தவரை மாற்றிக்கொள்ளுங்கள். ஏனென்றால் நம் முன்னோர்கள், நமக்காக கூறியிருக்கும் இந்த முறைகள் எல்லாம் நம்மை பாதுகாக்க தான் கூறப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தாலே போதும். நம் வறுமையிலிருந்தும், நம் கஷ்டத்தில் இருந்தும், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம். வறுமையும், கஷ்டமும், நோயும் கெட்ட சக்திகளால் தான் ஈர்க்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் இதை நெற்றியில் இட்டுக்கொண்டால் நிச்சயம் வெற்றிதான்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have ketta sakthi. veetil ketta sakthi. veetu vasal. vasthu naal

- Advertisement -