சித்தர்களை நேரில் சந்தித்த மனிதர்கள் – வீடியோ

Agathiyar

பெரிய பெரிய மகான்களும் சித்தர்களும் வாழ்ந்த பூமி இது என்பது நாம் அறிந்ததே. அதே போல பல நூறு சித்தர்கள் இம்மண்ணில் ஜீவசமாதி அடைந்துள்ளனர் என்பதும் நாம் அறிந்ததே. அவர்களில் பலர் தங்களது பக்தர்களின் குறை தீர்க்க நேரில் வந்து காட்சி கொடுத்த ஆச்சர்யமான நிகழ்வுகளும் இம்மண்ணில் நிகழ்ந்துள்ளது. அது பற்றிய ஒரு விரிவான வீடியோ பதிவை இங்கு பார்ப்போம் வாருங்கள்.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

சித்தர்களை பற்றிய ஆய்வில் இருந்த ஒருவர், சித்தர்கள் குறித்த புத்தகங்களையும் எழுதி உள்ளார். அதில் அவர் பல சித்தர்களை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பதிவிட்டுள்ளார். அந்த புத்தகத்தின் பெயர் “ஜீவ அமிர்ந்தம்”. அந்த புத்தகத்தை இயற்றியவருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்ததாக அவர் கூறுகிறார். அதே போல தான் அந்த புத்தகத்தை எழுதவில்லை என்றும், அந்த புத்தகத்தை எழுத தான் வெறும் கருவியாக மட்டுமே இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இவரை போல இன்னும் பலர் சித்தர்களை சந்தித்த அனுபவங்களை பகிந்துள்ளனர். சாந்தி என்னும் பெண், தனது கணவரையும், மகனையும் இழந்து பெரும் துயரில் வாடியுள்ளார். அவருக்கு நாதமுனி சித்தர் நேரில் காட்சி கொடுத்து அவர் கண்ணீரை துடைத்துள்ளார். அதுவரை நாதமுனி சித்தரை பற்றி பெரிதும் அறியாத சாந்தி அன்று முதல் சித்தரின் தீவிர பக்தை ஆனார். அவர் வீட்டின் அருகிலே தான் அந்த சித்தரின் ஜீவ சமாதி இருப்பது குறிப்பிட தக்கது.