கண்ணை கலங்க வைக்கும் கஷ்டம் வரும்போது, வீட்டில் இருந்தபடியே இந்த வழிபாட்டினை செய்தால் தீராத கஷ்டத்திற்கும் தீர்வு கிடைக்கும்.

deepam1
- Advertisement -

சில சமயங்களில் நமக்கு வரக்கூடிய கஷ்டத்திற்கு அவ்வளவு சுலபமாக தீர்வு என்பது கிடைத்துவிடாது. மனிதர்களாக பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கா பஞ்சம். ஒரு பிரச்சனை போனால் அதன் பின்னாலேயே வரிசையில் பல பிரச்சினைகள் காத்துக்கொண்டு நிற்கிறது. அதில் சில பிரச்சினைகள் வந்தவழி தெரியாமலேயே போய்விடும். ஆனால் சில பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டோம் என்றால் அதிலிருந்து வெளிவருவது என்பது மிகப் பெரிய கஷ்டம். அது வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி, குடும்ப சம்பந்தப்பட்ட பிரச்சினைகளாக இருந்தாலும் சரி, குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி, பண கஷ்டமாக இருந்தாலும், கடன் சுமையாக இருந்தாலும் சில கஷ்டங்களை வெளியில் சொல்ல முடியாமல் மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருக்கும் அந்த சமயத்தில் நம்முடைய கண்களில் இருந்து கண்ணீர் மட்டும்தான் வரும். கஷ்டத்தை வெளியே சொல்வதற்கு ஆள் இருக்காது.

sad-crying

இப்படிப்பட்ட துயரமான நிலையில் நாம் இருக்கும்போது, நமக்கு கை கொடுப்பது, நம் கஷ்டங்களை பகிர்ந்து கொள்வது அந்த ஆண்டவன் மட்டும்தான். அந்த இறைவனை நம் வீட்டில் இருந்தபடியே கஷ்ட காலத்தில் எப்படி வழிபாடு செய்வது. எந்த தீபம் ஏற்றி நம்முடைய கஷ்டங்களை இறைவனிடம் முறையிட்டால், அந்த கஷ்டத்திற்கான தீர்வு உடனடியாக கிடைக்கும் என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரம் சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டுள்ள பதிவு இது. தேங்காய் தீபம். இதை பல பேர் அவ்வளவாக கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். பல கோவில்களில் நாம் பார்த்திருப்போம். ஆனால், எதற்காக இந்த தீபம் ஏற்றப்படுகிறது என்று சில பேருக்கு தெரிவதில்லை.

thengai-deepam

இறைவனிடம் தீராத கஷ்டங்கள் துயரங்கள் தீர வேண்டும் என்று வேண்டுதல் வைத்து ஒரு தேங்காயை இரண்டாக உடைத்து, ஒரு தாம்பாள தட்டின் மேல், சிறிது பச்சரிசி பரப்பி, அதன் மேல் இந்த தேங்காய் மூடிகளை நிற்க வைத்து, அந்த தேங்காய் மூடி முழுவதும் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தாமரைத் தண்டு திரி போட்டுத் தீபம் ஏற்ற வேண்டும். இதை கோவில்களில் மட்டும் தான் ஏற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் வீட்டிலும் ஏற்றலாம்.

- Advertisement -

திங்கட்கிழமை அன்று ஞாயிற்று கிழமை அன்றும் உங்களுடைய வீட்டில் இந்த தீபத்தை ஏற்றிவைத்து தீராத எவ்வளவு பெரிய கஷ்டங்கள் இருந்தாலும் அந்த கஷ்டங்களை இறைவனிடம் முறையிடுங்கள். நிச்சயமாக அந்த கஷ்டம் மூன்றே வாரங்களில் நல்லதொரு முடிவுக்கு வரும்.

thamarai-thandu-thiri

செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை வாரத்தில் வரக்கூடிய இந்த இரண்டு நாட்களில், ஏதாவது ஒரு நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை இந்த தீபத்தை வீட்டில் ஏற்ற தொடங்கினால், 3 செவ்வாய்க் கிழமை ஏற்றவேண்டும். ஞாயிற்றுக்கிழமை தீபம் ஏற்ற தொடங்கினால் 3 ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்ற வேண்டும்.

pray

இந்த தேங்காய் தீபம் எரிந்து முடிந்த பின்பு, இந்த தேங்காயை நம் வீட்டின் உபயோகத்திற்கும் பயன் படுத்திக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் தேங்காயை ஓடிலிருந்து தனியாக எடுத்து, சிறிய துண்டுகளாக வெட்டி பசு மாட்டிற்கும் போடலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். மனதார இறைவனை வேண்டிக்கொண்டு தீராத கஷ்டம் தீர இந்த தீபத்தை ஏற்றி அனைவரும் பயனடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -