- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதீராத நோய் தீர முருகன் பரிகாரம்

தீராத நோய் தீர முருகன் பரிகாரம்

- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். ஆனால் இந்த கலியுகத்தில் அது தலைகீழாக உள்ளது. செல்வத்தை தேடி தேடி ஓடி, இலவசமாக நோயை வரமாக பெற்றுக் கொள்கின்றோம். இரவு நேரத்து வேலை, டென்ஷனான வேலை, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பிரஷர், இதெல்லாம் நமக்கு நோய் நொடிகளை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது.

சரி போகட்டும். கலியுகத்தில் வேறு வழி கிடையாது. கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும். வந்த நோயிலிருந்து விடுபடுவதற்கு ஏதாவது ஒரு மார்க்கம் உண்டா. ஏதாவது ஒரு தீர்வு உண்டா, என்று கேட்பவர்களுக்காக இந்த பதிவு. முருகா உன்னை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர மருத்துவ செலவு குறைய நல்ல ஒரு வழியை காட்டு என்று சொல்லி இந்த பதிவிற்குள் பயணம் செய்வோம்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்லுங்கள். ஒரு முழு பூசணிக்காயை வாங்கிக் கொண்டு செல்லுங்கள். அந்த முருகன் கோவிலில் முதலில் மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் போட்டு விடுங்கள். பிறகு அந்த பூசணிக்காயை மடியில் வைத்துக்கொண்டு, அந்த முருகன் கோவிலிலேயே ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து, கந்த சஷ்டி கவசத்தை முழுசாக படியுங்கள்.

முருகனை மனமார பிரார்த்தனை செய்து நோய்நொடி விலக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அந்த பூசணிக்காயை ஒரு தாம்பல தட்டில் வைத்து, வெற்றிலை பாக்கு, பூ பழம், 11 ரூபாய் உங்களால் முடிந்த தக்ஷனை முடிந்தால், ஒரு வஸ்திரம் வைத்து கோவிலுக்கு வெளியே வர வேண்டும். கோவிலுக்கு வெளியில் இதை யாருக்கேனும் தானம் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி செவ்வாய்க்கிழமை பூசணிக்காயை முருகன் கோவிலில் வைத்து வழிபாடு செய்துவிட்டு தானம் கொடுத்தால் உங்க கர்ம வினைகள் நீங்கி, நோய் நொடி பிரச்சனைகள் விலகும் என்பது நம்பிக்கை. இந்த பூசணிக்காயை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஏதேனும் ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் வருமா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது.

தானத்தை பெற்றுக் கொள்பவர்கள், தானத்தை பெறுவதற்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும். அந்த பூசணிக்காயை ஒரு ஆணுக்கோ, ஒரு பெண்ணுக்கு நீங்கள் தானமாக கொடுக்கலாம். வாங்குபவர்கள் அதை மன நிறைவோடு வாங்கி, அவர்கள் அதை சமைக்கவோ அல்லது வேறு ஏதாவது பயன்பாட்டிற்கோ பயன்படுத்திக் கொள்ளலாம். அது அவர்களுடைய விருப்பம். அதை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். ஆனால் இந்த சூழ்நிலையானது உங்களுக்கு அமைய வேண்டும்.

- Advertisement -

அந்த பூசணிக்காய் தானம் பெறுவதற்கு ஒருவர் கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்துவிட்டால் உங்கள் கர்மா தீர்ந்தது, நீங்கள் பிரச்சினையில் இருந்து விடுபட்டு விட்டீர்கள் என்று அர்த்தம். இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை நம்பியவர்கள் பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக நீண்ட நாள் நோய் வாய் பிரச்சனை நீங்கும்.

நீண்ட நாட்களாக மருந்து மாத்திரை சாப்பிட்டு குணமடையாத நோய் தீர, ஏதாவது ஒரு ரூபத்தில் வழி கிடைக்கும். வீண்விரய மருத்துவ செலவுகள் குறையும். ஆரோக்கியம் பெருகும். குறைந்தபட்சம் நீங்கள் மருந்து சாப்பிடக்கூடிய அளவையாவது குறைக்கலாம். அந்த டோசெஜ் குறைந்தால் கூட நமக்கு சந்தோஷம் தானே.

இதையும் படிக்கலாமே: பஞ்சபூதங்களின் மூல மந்திரம்

இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் சிறு நன்மை நடந்தால் கூட, அது பெரிய அளவில் நமக்கு சந்தோஷத்தை கொடுக்கப் போகிறது. ஆகவே உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இந்த பரிகாரத்தை பரிந்துரை செய்யுங்கள். முருகனை பிரார்த்திப்போம். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்