- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதேய்பிறை அஷ்டமி அன்று நிலை வாசலில் தெளிக்க வேண்டிய தீர்த்தம்

தேய்பிறை அஷ்டமி அன்று நிலை வாசலில் தெளிக்க வேண்டிய தீர்த்தம்

- Advertisement -

கால பைரவர் ஒரு காவல் தெய்வம். அவர் நம் வீட்டு நிலை வாசலில் வந்து, காவல் தெய்வமாக நின்று விட்டால் நம் குடும்பத்தை பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்வார். நம் வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சக்தியையும் கண் திருஷ்டியையும் நுழைய விட மாட்டார். அதற்கான ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாளைய தினம் 28.7.2024 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை அஷ்டமையும் சேர்ந்து இருக்கிறது. நாளைய தினம் இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்வது சிறப்பு.

தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், எதிரிகள் சூழ்ச்சியில் சிக்கி இருப்பவர்கள், ஏவல் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பத்தில் நிம்மதியே இல்லாமல் தவித்து வருபவர்கள் சனிதோஷத்தால் கஷ்டப்படுபவர்கள் எல்லாம் நாளைய தினம் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் உங்கள் குடும்பத்தில் இருக்கும் கஷ்டத்தை தீர்த்து வைக்க அந்த கால பைரவர் காவல் தெய்வமாக வந்து நிற்பார்.

- Advertisement -

நாளை நிலை வாசலில் தெளிக்க வேண்டிய தீர்த்தம்

இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பாகவே ஒரு செம்பு சொம்பு எடுத்துக் கொள்ளுங்கள். செம்பால் செய்யப்பட்ட பாத்திரம் இல்லை என்றால் பஞ்ச பாத்திரத்தில் கூட நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். அந்த பஞ்ச பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றி 2 வில்வ இலைகள், 1 சிட்டிகை குங்குமப்பூ, கொஞ்சமாக புனுகு, சந்தனம், இந்த நான்கு பொருட்களையும் சேர்க்க வேண்டும்.

பைரவர் எங்கள் வீட்டு காவல் தெய்வமாக இருக்க வேண்டும் என்று சொல்லி இந்த பொருட்களை எல்லாம் போட்டு அந்த தண்ணீரை பாத்திரத்தோடு எடுத்து உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இரவு இந்த தீர்த்தத்தை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலை எழுந்து, அதாவது நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வாசல் தெளிக்க தண்ணீர் எடுப்பீர்கள் அல்லவா. அந்த தண்ணீரில் இந்த பூஜை அறையில் வைத்திருக்கும் தீர்த்தத்தை எடுத்து கலந்து நிலை வாசலில் தெளித்து கோலம் போட்டு விடுங்கள்.  பைரவா பைரவா என்ற நாமத்தைச் சொல்லி இந்த தண்ணீரை நிலை வாசலில் தெளித்து கோலம் போட வேண்டும்.

வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு உங்களுடைய நிலை வாசல் படியில் இரண்டு பக்கம் இருக்கும் அல்லவா. அந்த இரண்டு பக்கத்திலும் கொஞ்சமாக பச்சரிசி அட்சதையை தூவி விடுங்கள். கால பைரவரே காவல் தெய்வமாக எங்கள் வீட்டில் நிற்க வேண்டும் என்று சொல்லி இரண்டு பக்கமும் பச்சரிசி அட்சதையை தூவி விட்டு வீட்டுக்குள் வரவும். பிறகு பூஜையறையில் விளக்கு ஏற்றி காலபைரவரை மனதார நினைத்து வழிபாடு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு இந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் மூளை முடுக்ககளில் படும்படி தெளிக்கலாம் தவறு கிடையாது. பச்சரிசியில் ஒரு சொட்டு நெய் விட்டு மஞ்சள் பொடி போட்டு கலந்தால் அட்சதை தயார். இதையும் நீங்கள் முந்தைய நாள் இரவே தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை காலை தேய்பிறை அஷ்டமி திதியில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே இந்த வழிபாட்டை மேற்கொள்வது மிக மிக சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: காலமெல்லாம் கடன் இல்லாமல் வாழ கால பைரவர் வழிபாடு

காலை 5:30 மணி அளவில் வாசல் கூட்டி கோலம் போடும்போது மேல் சொன்ன பரிகாரத்தை எல்லாம் பின்பற்றிக் கொள்ளுங்கள். கட்டாயம் காவல் தெய்வமான கால பைரவர் உங்கள் வீட்டிலேயே குடியிருந்து உங்கள் வீட்டை பாதுகாக்கும் வேலையை செய்து விடுவார். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. உங்களுக்கு இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய பிரச்சனைகளையும் சுலபமாக சரி செய்யக்கூடிய சக்தி இந்த கால பைரவருக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்