- Advertisement -
Homeஆன்மிகம்கஷ்டங்களை தீர்க்கும் தேங்காய் பரிகாரம்

கஷ்டங்களை தீர்க்கும் தேங்காய் பரிகாரம்

- Advertisement -

கஷ்டங்களை அனுபவிக்காத நபர்கள் என்று யாராவது ஒருவர் இந்த உலகத்தில் இருக்க முடியுமா? கண்டிப்பான முறையில் இருக்க முடியாது என்று தான் கூற வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும். இன்னும் சிலரோ அதில் விதிவிலக்காக அவர்கள் செல்லும் இடமெல்லாம் பிரச்சனைகளை ஏற்படும். அவர்கள் தொட்டதெல்லாமே தேவையில்லாத வீண் பிரச்சனைகளுக்கு ஆளாகி அதனால் அவர்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கும் சூழ்நிலையும் உண்டாகும். அப்படிப்பட்டவர்கள் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

கஷ்டங்களை தீர்க்கும் தேங்காய் பரிகாரம்

இந்த பரிகாரத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவிகள் செய்வது மிகவும் சிறப்பு அல்லது கஷ்டங்களாலும், பிரச்சனைகளாலும் தவித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். பிரம்ம முகூர்த்த வேளையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் போல் உங்கள் வீட்டில் நீங்கள் பூஜை செய்வதற்காக தயார் செய்வீர்கள் அல்லவா? அதேபோல் தயார் செய்து கொள்ளுங்கள். இதனுடன் நல்ல தேங்காயாக பார்த்து ஒரு தேங்காயை வாங்கிக் கொள்ள வேண்டும்.

அது முழுவதும் மஞ்சளை தடவி அந்த தேங்காய் சுற்றி ஐந்து இடங்களில் குங்குமப்பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தேங்காயை உங்களுடைய வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். உங்களுடைய அன்றாட பூஜைகளை எப்பொழுதும் போல் செய்து முடித்துவிட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டும் பொழுது அந்த தேங்காய்க்கும் காட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவ்வாறு காட்டி முடித்த பிறகு உங்களுடைய பிரச்சினை என்னவோ ஒரே ஒரு பிரச்சினையை மட்டும் தான் நீங்கள் நினைக்க வேண்டும். அந்த பிரச்சினையை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு நினைத்து முடித்த பிறகு இந்த தேங்காயை உடைக்க வேண்டும். தண்ணீர் அனைத்தையும் வெளியேற்றிவிட்டு அதன் குடுப்பியை எடுத்து விட்டு இந்த இரண்டு மூடிகளையும் உங்கள் வீட்டு நிலை வாசலுக்கு வெளியில் இரண்டு புறங்களிலும் வைக்க வேண்டும்.

நிலை வாசலுக்கு வெளியில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேங்காய் அன்றைய நாள் முழுவதும் அப்படியே இருக்கட்டும். மாலை 6 மணிக்கு எப்பொழுதும் வீட்டில் விளக்கு ஏற்றுவோம் அல்லவா? அதே போல் விளக்கேற்றி உங்களுடைய மாலை நேர வழிபாட்டியும் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதற்கு பிறகு பிரச்சனைகளால் கஷ்டப்படுபவர்களோ அல்லது குடும்பத்தில் இருக்கும் இல்ல தரிசிகளோ வீட்டிற்கு வெளியே வந்து நிலை வாசலில் இருக்கக்கூடிய இந்த இரண்டு மூடிகளையும் எடுத்து இடது கையில் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது ஒரு தேங்காய் உடையாமல் இருந்தால் எப்படி இருக்கும் அப்படி நாம் இந்த இரண்டு தேங்காய் மூடிகளையும் இடது கையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்படி வைத்து விட்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் தலையில் இருந்து பாதம் வரை மூன்று முறை என்று சுற்ற வேண்டும். இவ்வாறு சுற்றி முடித்துவிட்டு இதை அப்படியே எடுத்துக் கொண்டு போய் கால் படாத இடமாக பார்த்து ஒரு இடத்தில் போட்டுவிட்டு திரும்ப வரவும். இவ்வாறு வரும்பொழுது உங்களுடைய முகம் கை கால்களை கழுவி விட்டு வீட்டிற்குள் வரவேண்டும்.

இப்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் எப்பேர்ப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அந்த கஷ்டங்கள் படிப்படியாக விலகுவதை நம்மால் உணர முடியும். கஷ்டங்கள் முற்றிலும் தீர்ந்து விட்டது என்னும் பட்சத்தில் இந்த பரிகாரத்தை நிறுத்திக் கொள்ளலாம். மறுபடியும் புதிதாக ஏதாவது பிரச்சனை தலைதூக்க ஆரம்பிக்கிறது என்னும் பட்சத்தில் மறுபடியும் இந்த பரிகாரத்தை நாம் செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: செவ்வாய் குரு பலன்கள்

பிரச்சனை இல்லாத வாழ்க்கையே இருக்காது. அந்தப் பிரச்சினையை சமாளிக்கும் அளவிற்கு நமக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தரக்கூடிய ஒரு பரிகாரமாக தான் இந்த பரிகாரம் திகழ்கிறது. இதில் விருப்பம் இருப்பவர்கள் முழு மனதுடன் இந்த பரிகாரத்தை செய்து உங்களுடைய கஷ்டங்களிலிருந்து நீங்கள் விழுபடலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்