வீட்டின் தென்மேற்கு மூலையில் தண்ணீர் வைத்தால் இவ்வளவு அதிர்ஷ்டம் வருமா? வாஸ்துவும்! தென்மேற்கு மூலையும்! சொல்லும் ரகசியம் தான் என்ன?

vinayagar-vastu

வாஸ்து சாஸ்திர அமைப்பின் படி தென்மேற்கு மூலை என்பது கன்னி மூலையை குறிக்கிறது. இந்த இடத்தில் வைக்கப்படும் பொருட்களும், அதன் அமைப்புகளும் செல்வ செழிப்பு அதிகரிக்க செய்யும். நாம் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும், சம்பாதித்த பணம் கையில் நிற்க வேண்டும் அல்லவா? தண்ணீர் போல் செலவாகிக் கொண்டே இருந்தால் என்ன செய்வது? பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் காலகட்டத்திலும் இதே நிலைமை தான்! ஒரு லட்சம் சம்பாதித்தாலும் அதே நிலைமை என்றால் எப்படி? இதற்கு வீட்டின் தென்மேற்கு மூலை மிகவும் சரியாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதை எப்படி செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

thorana-ganapathy

‘கன்னி மூலை கணபதி’ என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம். அதாவது விநாயகர் வீற்றிருக்கும் திசையானது கன்னி மூலை தான். எல்லா கோவில்களிலும் விநாயகர் தென்மேற்கு திசையில் தான் வீற்றிருப்பார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தென்மேற்கு பகுதி நைருதி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அதிக கனமான பொருட்களை வைக்க வேண்டும். தென்மேற்கு பகுதியானது கனமில்லாமல் இருந்தால், வீட்டில் பணமும் கனம் இல்லாமல் போய்விடும். கட்டுக்கட்டாக பணம் சேர தென்மேற்கு மூலையை வெயிட்டாக வைத்திருங்கள்.

தென்மேற்கு மூலையில் பணப்பெட்டி, பீரோ போன்றவைகள் இடம் பெற்றிருக்கும். பணவரவை அதிகரிக்க செய்யும் இந்த கன்னி மூலையில் குடும்பத்தில் இருக்கும் தலைவன் படுக்கும் அறையாக அமைத்திருக்க வேண்டும். தென்மேற்கு மூலையில் படுக்கை அறை அமைத்திருப்பது வீட்டின் வசதி, வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும். எவ்வளவு கஷ்டமான சூழ்நிலை இருந்தாலும், இந்த வாஸ்து அமைப்பு உங்களை மேலும் மேலும் உயர்த்தி காட்டும்.

vasthu-vastu

தென்மேற்கு மூலையில் பணம் இருந்தால் திடீரென வரும் விரயங்கள் தடுக்கப்படும். அதாவது ஒரு சிலருக்கு திடீரென அதிக தொகை தேவைப்படும். பணத்திற்காக நாய் போல் அலைவார்கள். இதுபோன்ற சூழ்நிலை வராமல் இருக்க தென்மேற்கு மூலையில் பணத்தை வைக்க வேண்டும். பீரோ இருந்தால் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். பீரோவின் உள்ளே கட்டாயம் மகாலட்சுமி படம் ஒன்றை வைத்து, அதில் மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வையுங்கள். இதனால் தோஷங்கள் எல்லாம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். சுபகாரிய தடை இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். நினைத்த வரன் உடனே கைகூடிவரும்.

அதே போல் வீட்டின் வெளிப்புறத்தில் தென்மேற்கு மூலையில் தண்ணீர் தொட்டி அமைத்திருப்பது நல்லது. அல்லது அந்த இடத்தில் தண்ணீர் கட்டாயம் தினமும் வைப்பது அதிர்ஷ்டத்தை மேலும் மேலும் பெருக செய்யும். பறவைகளுக்கு, விலங்குகளுக்கு தண்ணீர் வைத்து பழகலாம். அதைக் குடிக்க வரும் உயிரினங்கள் மூலம் உங்களுக்கு புண்ணியங்கள் சேரும். தண்ணீருக்கு அருகில் தானியங்களை வைத்தால் பறவைகள் தானியங்களையும், தண்ணீரையும் அருந்திவிட்டு செல்லும்.

water-for-crow

நாய், பூனை போன்ற விலங்குகள் அந்த தண்ணீரை குடிக்கும் பொழுது பித்ருக்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். தென்மேற்கு மூலையில் வைக்கப்படும் தண்ணீர் பித்ருக்களுக்கு தாகத்தை தீர்ப்பதாக ஐதீகம் உள்ளது. பித்ருக்களின் சாபம் இருப்பவர்கள் கட்டாயம் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். பித்ரு பூஜைகளை சரியாக செய்யாதவர்கள், உங்களுடைய முன்னோர்களின் கடும் பசியை போக்க தென்மேற்கு மூலையில் சிறு குவளையில் ஆவது தண்ணீரை தினமும் வையுங்கள்! நல்லது நடக்கும்.