தென்னாடுடைய சிவனே போற்றி மந்திரம்

guru-compressed-1

ஒன்பது கிரகங்களில் முழுமையான சுப கிரகமான குரு பகவானின் பெயர்ச்சியை அனைவரும் எதிர்பார்க்க காரணம் வருடந்தோறும் ஏற்படும் இந்த குரு பகவானின் பெயர்ச்சியால் தங்களுக்கு எந்த அளவுக்கு நன்மையான பலன்கள் ஏற்படும் என்பது தான். நற்பலன்கள் அதிகம் ஏற்படவில்லையென்றாலும் பாதக பலன்கள் ஏதும் ஏற்படக்கூடாது என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. குரு பகவான் பெயர்ச்சியால் ஏற்படும் பாதக பலன்களை குறைக்கவும், தோஷங்களை போக்கவும், தெய்வ வசியம் கிடைக்கவும் செய்யும் திருவாசக மந்திர பாடல் இதோ.

guru bagavan

தென்னாடுடைய சிவனே போற்றி பாடல்

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

dhakshinamoothi

- Advertisement -

சிவபெருமானை போற்றும் இந்த திருவாசக மந்திரத்தை தினந்தோறும் கூறி வழிபடுவது நல்லது. மேலும் வியாழக்கிழமைகளில் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், அருகிலுள்ள கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, பின்பு அக்கோவிலில் தென் திசையை பார்த்தவாறு இருக்கும் தட்சிணாமூர்த்தியின் சந்நிதியில் தீப தூபங்கள் ஏற்றி, இந்த திருவாசக மந்திரத்தை துதித்து வழிபட தெய்வ வசியம் ஏற்படும். குரு கிரகத்தின் அம்சம் கொண்ட தட்சிணாமூர்த்தியின் அருளால் குரு கிரக தோஷங்கள் நீங்கும்.

guru

“திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்பது திருவாசக பாடல் வரிகளின் சிறப்பை எடுத்து கூறுவதாகவும். இந்த திருவாசகம் ஒன்பதாம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் இயற்றிய ஒரு தெய்வீக நூலாகும். இந்த திருவாசகம் 51 பதிகங்களை கொண்டது. அதில் மொத்தமாக 658 பாடல்கள் இருக்கின்றன. மாணிக்கவாசகர் சிவனின் மீது தீவிர பக்தி கொண்டவர். எப்போதும் சிவனின் நினைவிலேயே வாழ்ந்தவர். சிவபெருமான் மீது அவர் இயற்றிய மந்திர அதிர்வுகள் நிறைந்த இந்த பாடல் வரிகளை படிப்பதால் நமக்கு பல விதமான நன்மைகள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
வாழ்வில் எதையும் சமாளிக்கும் தைரியம் தரும் நரசிம்மர் போற்றி

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thennadudaya sivane potri ennatavarkum iraiva potri lyrics in Tamil or Thennadudaya sivane potri lyrics in Tamil. Here we have thennadudaya sivane potri meaning in Tamil.