- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதீரா கஷ்டத்திற்கு தீர்வு தரும் பிரியாணி இலை பரிகாரம்

தீரா கஷ்டத்திற்கு தீர்வு தரும் பிரியாணி இலை பரிகாரம்

- Advertisement -

சில பேர் வாழ்க்கையில் நடந்த மிக மிக மோசமான அனுபவத்தால் ரொம்பவும் நொந்து நொடிந்து போய் இருப்பார்கள். எத்தனை நாள் போராட்டத்திலேயே வாழ்க்கை செல்கிறது என்று பார்ப்போமே என்று ஒரு விரக்தியில், கஷ்டத்திலேயே தங்களுடைய வாழ்க்கையை நடத்தி செல்வார்கள். ஆனால் போராட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது.

உங்களுடைய வாழ்க்கையிலும் அதுபோல என்ன கஷ்டம் இருந்தாலும், அந்த கஷ்டத்தை சரி செய்ய இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது ஒரு சிறப்பான பரிகாரம். இந்த முறைப்படி என்ன வேண்டிக்கொண்டாலும் அது ஐந்து நாட்களில் நடக்கும். உங்கள் வாழ்க்கையில், எந்த ஒரு விஷயத்திற்காக நீங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்கள், அந்த ஒரு விஷயத்தை முதலில் தெளிவாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உதாரணத்திற்கு பிரிந்த கணவன் மனைவி சேர வேண்டும் என்று நினைத்தாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டுமா, இந்த பரிகாரத்தை செய்யலாம். அல்லது பண பிரச்சினை குறைய வேண்டும் என்றும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

கணவரை திருத்த, பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு வர, காலேஜ் சீட்டு கிடைக்க, என்ன கேட்டாலும் சரி, நிச்சயம் அது உங்களுக்கு கிடைத்துவிடும். உடல் ஆரோக்கிய பிரச்சனை சரியாக வேண்டும் என்று நினைத்தாலும், இந்த பரிகாரத்தை செய்யுங்கள். உங்கள் பிரச்சனைக்கு சரியான தீர்வு சொல்லும் டாக்டர் உங்க கண்ணு முன்னாடி வருவாங்க.

- Advertisement -

பிரியாணி இலை பரிகாரம்

இன்று இரவு தூங்க செல்லும் போது என்ன செய்ய வேண்டும். ஒரு பிரியாணி இலையை எடுத்து, உங்களுடைய பிரச்சனையை அந்த பிரியாணி இலையில் எழுதி, நீங்கள் நினைத்த அந்த நல்லது நடந்து விட்டதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வேண்டுமா. கணவன் மனைவி இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள், பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக உங்களுடைய நாள் செல்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நல்ல வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா, வேலை கிடைத்தது முதல் மாசம் சம்பளம் வாங்கி, அம்மா கையிலோ, பொண்டாட்டி கையிலோ கொடுப்பது போல கற்பனை செய்து கொள்ளுங்கள். அவ்வளவு சந்தோஷத்தை மனதில் வைத்துக் கொண்டு பிரியாணி இலையில் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று எழுத வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம். கணவன் மனைவி ஒன்றாக சேர்ந்து விட்டதாக சந்தோஷத்தோடு பிரியாணி இலையில் உங்களுடைய பிரார்த்தனையை எழுதுங்கள். இந்த பிரியாணியி இலையை ஒரு நோட்டு புத்தகத்தில் வைத்து அலமாரியில் பத்திரமாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

ஐந்து நாட்களுக்குள் இந்த பரிகாரம் நிச்சயம் வேலை செய்யும். ஐந்து நாட்களுக்குள் உங்களுடைய வேண்டுதல் நிறைவேற 99 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது. அப்போ அந்த 1 சதவீதம் என்ன அது. எல்லோருடைய தலையெழுத்துங்க. அது கடவுளுக்கு தான் தெரியும். 99% வாய்ப்பு இருக்கிறது அல்லவா. பாசிட்டிவாக நினைத்து பரிகாரத்தை செய்வோம். சரி ஐந்து நாட்கள் கழித்து அந்த பிரியாணி இலையை என்ன செய்வது.

ஐந்தாவது நாள் வியாழக்கிழமை (13-03-2025) நிறைந்த பௌர்ணமி வருகிறது. நிலா உதயமான பிறகு, இந்த பிரியாணி இலையை கையில் வைத்துக்கொண்டு, மீண்டும் ஒருமுறை உங்களுடைய பிரார்த்தனையை இறைவனுக்கு சொல்லி, இறைவனுக்கு நன்றி தெரிவித்து நெருப்பில் இந்த பிரியாணி இலையை பொசுக்கி அந்த சாம்பலை தண்ணீரில் கரைத்து சிங்கிள் கொட்டி விடவும். இவ்வளவுதான் பரிகாரம். நீங்கள் நினைத்த நல்ல காரியம் ஐந்து நாட்களுக்குள் நடந்தாலும் சரி நடக்காமல் போனாலும் சரி பௌர்ணமி அன்று அந்த பிரியாணி இலையை எரித்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: நிறைவான வாழ்க்கை வாழ ஏற்ற வேண்டிய தீபம்

நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் நீங்கள் அந்த பிரியாணி இலையில் எழுதியது நிச்சயம் நடக்கும். உங்களுடைய தகுதிக்கு ஏற்ப நேர்மையாக ஒரு வேண்டுதலை வைத்து பாருங்கள். நிச்சயம் கடவுள் உங்களுக்கு பாசிட்டிவான ஒரு ரிசல்ட்டை கொடுப்பான். ஐந்து நாட்களில் ஒரு வேலை நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்றால் உங்களுடைய முயற்சிகளை கைவிடாமல் தொடருங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்