இந்த கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் என்ன நடக்கும்? தேரையர் சித்தர் கூறும் அதிர வைக்கும் உண்மைகள்! நீங்களும் தெரிஞ்சுக்கோங்க?

oil-bath-theraiyar-siddhar
- Advertisement -

எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடலில் இருக்கும் உஷ்ணத்தை தணிக்க வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பது நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த பழக்கம். அதை இன்று மறந்து வருவதால் என்னவோ, நம் உடலில் அதிகப்படியான வியாதிகள் வந்து சேர்ந்து விடுகின்றன. சித்தர்களில் ஒருவரான தேரையார் சித்தர் தன் பாடலில் கூறியுள்ள இந்த உண்மைகளை கேட்டால் நமக்கும் வியப்பாகத்தான் இருக்கும். அவர் அப்படி என்ன அந்த பாடலில் கூறியுள்ளார்? எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது? என்பதை நீங்களும் அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

theraiyar-siddhar

சித்து வேலைகளை புரியும் சித்தர்கள் சில குறிப்புகளை தன் பாடல்களின் மூலம் இந்த உலகிற்கு கொடுத்து விட்டு சென்றுள்ளனர். அப்பாடல்களில் இருக்கும் கருத்துகளின்படி நாம் நம்முடைய வாழ்க்கையை வாழ்ந்தோமேயானால் நிறையவே நன்மைகளைப் பெறலாம் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. அவ்வகையில் தேரையர் சித்தர் பாடியுள்ள கீழ்வரும் இந்த பாடலின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

- Advertisement -

தேரையர் வைத்திய சாரம் பாடல்:
கேளு அருக்கன் பலன் தான் அழகை மாற்றும்!
கெடியான திங்கள் பலன் தான் பொருளுண்டாகும்!
பாலு செவ்வாய் பலன் தான் உயிரை மாய்க்கும்!

suvadi

பாங்கான புதன் பலன் தான் மதியுண்டாகும்!
தாளு வியாழன் பலன் தான் கருத்தை போக்கும்!
தப்பாது வெள்ளி பலன் கடனே செய்யும்!
நாளு சனியின் பலன் தான் எண்ணெய் மூழ்க!!

- Advertisement -

நாளுக்கு இரண்டு
வாரத்துக்கு இரண்டு
மாசத்துக்கு இரண்டு
வருடத்திற்கு இரண்டு

karuvurar Siddhar

அதாவது ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும். வாரத்துக்கு இரண்டு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். மாதத்திற்கு இரண்டு முறை உபவாசம் அதாவது விரதம் இருக்க வேண்டும். அதைப் போல் இரண்டு முறை தான் மனைவியுடன் உடலுறவு கொள்ள வேண்டும். வருடத்திற்கு இரண்டு முறை வயிற்றை சுத்தப்படுத்த பேதிக்கு மருந்து உட்கொள்ள வேண்டும் என்று ஆயுர்வேத நூல்கள் எடுத்துரைக்கின்றன. இவ்வகையில் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

oil-bath

அதே போல தேரையர் சித்தரும் தன் பாடலின் மூலம் ஞாயிற்றுக் கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க உடலின் அழகை மாற்றும் என்றும், திங்கட் கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க பொருட்கள் சேரும் என்றும், செவ்வாய்க் கிழமையில் தலைக்கு எண்ணெய் தேய்க்க உயிரையே மாய்க்கும் என்றும், புதன் கிழமையில் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் அறிவாற்றல் பெருகும் என்றும், வியாழன் கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் மந்த நிலை உண்டாகும் என்றும், வெள்ளிக் கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் கடன் பெருகும் என்றும், சனிக் கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் நல்ல நட்பும், நல்ல பெயரும் கிடைக்கும் என்றும் விளக்கியுள்ளார். பொதுவாக புதன் மற்றும் சனிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்க அதிக நற்பலன்கள் உண்டாகும் என்பது நியதி, ஆனால் இதில் குறிப்பிட்ட படி செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்காமல் சாதாரணமாக தலைக்கு குளிப்பதும், மற்ற நாட்களில் எண்ணெய் வைத்து தலைக்கு குளிப்பதும் மிகவும் நல்லது.

- Advertisement -