கடுமையான நோயும் கண்ணுக்குத் தெரியாமல் காணாமலேயே போய்விடும். இந்த 2 தீபத்தை உங்களுடைய வீட்டில் 48 நாட்கள் ஏற்றுங்கள்.

dheepam

எந்த ஒரு கஷ்டமான தீராத துயரத்திற்கும் தீர்வு தரும் வழிபாடு என்றால், அது தீபவழிபாடு தான். இருண்டு போயிருக்கும் உங்களது வாழ்க்கையை, வெளிச்சத்திற்கு கொண்டுவரும் அதி அற்புதமான சக்தி தீபச்சுடரில் உள்ளது. யார் ஏற்றினாலும் தீபம் எரியும். எப்படி ஏற்றினாலும் தீபம் ஒளிர தான் செய்யும். உண்மையாகவே உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் இருள் நீங்க வேண்டும் என்றால், நீங்கள் ஏற்றக்கூடிய அந்த தீப ஒளியை மன உறுதியோடு, நம்பிக்கையோடு உண்மையான இறை பக்தியோடு ஏற்ற வேண்டும் என்பது தான் சூட்சமம். இந்த சூட்சமத்தை புரிந்துகொண்டு இறைவனின் பாதங்களை பற்றிக் கொள்பவர்களுக்கு என்றைக்குமே துயரங்கள் நிலைத்து நிற்பதில்லை என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்கலாம்.

deepam

நீங்கள் தீராத நோயால் கஷ்டப்பட்டு வந்து இருந்தாலும் சரி, அல்லது உங்களுடைய உறவினர்களில் யாராவது உங்களது கணவர், மாமனார் மாமியார், அம்மா அப்பா யாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை நீங்கள் அவருடைய பெயரைச் சொல்லி தாராளமாக செய்யலாம் தவறொன்றும் கிடையாது.

உங்களுடைய வீட்டு பூஜை அறையில் இந்த இரண்டு தீபத்தை ஏற்ற வேண்டும். முதலில் இரண்டு பெரிய மண் அகல் விளக்குகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு மண் அகல் விளக்கின் உள்ளே ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பு போட்டுக்கொள்ளுங்கள். மற்றொரு அகல்விளக்கின் உள்ளே ஒரு கைப்பிடி அளவு மிளகை போட்டு கொள்ளுங்கள்.

Milagu benefits in Tamil

பெரிய மணல் அகல் விளக்குகளில் நிரப்பி இருக்கும் கல்லுப்புக்கு மேலேயும், மிளகிற்கு மேலேயும் தீபமேற்ற வேண்டும். (அந்தப் பெரிய மண் அகல் விளக்குகள் உள்ளே வைக்கும் அளவிற்கு சிறிய மண் அகல் தீபங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.) கல்லுப்பு நிரப்பப்பட்ட பெரிய அகல் விளக்கு மேல், சிறிய மண் அகல் விளக்கு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, அதன் உள்ளே இரண்டு சிட்டிகை கல் உப்பு போட்டு தீபம் ஏற்றப்பட வேண்டும்.

- Advertisement -

இரண்டாவது மண் அகலில் மிளகு இருக்கிறது அல்லவா? அதன் மேலே ஒரு சிறிய மண் அகல் தீபத்தை வைத்து, அதன் உள்ளே நல்லெண்ணெயை ஊற்றி 3 மிளகு போட்டு திரி போட்டுத் தீபம் ஏற்றப்பட வேண்டும். தீபம் ஏற்றும்போது யாருக்கு உடல்நிலை சரியில்லையோ அவர்களது பெயரை உச்சரித்து, அவர்களுடைய குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து அவர்களுக்கு வரும் கஷ்டங்கள் துயரங்கள், உடல் உபாதைகள் சீக்கிரமே தீர வேண்டும் என்ற வேண்டுதலை முழுமனதோடு வைக்க வேண்டும்.

salt

இந்த தீபம் கிழக்கு நோக்கியவாறு எரியட்டும். பெண்களுக்கு தீபம் ஏற்ற முடியாமல் போகும் குறிப்பிட்ட அந்த 5 நாட்களில் உங்கள் வீட்டில் இருக்கும் வேறு யாராவது ஒருவர் இந்த தீபத்தை ஏற்றலாம். நீண்ட நாட்களாக மருந்து சாப்பிட்டும் தீராத நோயாக இருந்தாலும், மருத்துவரால் நீங்கள் கைவிடப்பட்டு இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயம் உங்களுடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தீப பரிகாரத்தை முடித்த பின்பு, அந்த மிளகையும் உப்பையும் ஓடும் தண்ணீரில் விட்டு விடுங்கள். இல்லை என்றால் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். உப்பை தண்ணீரில் கரைத்து ஊற்றி விடுங்கள்.

shivan

இதோடு சேர்த்து உங்களால் முடிந்தால் சீர்காழி அருகிலிருக்கும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஒரு முறை சென்று வைத்தீஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். அதேசமயம் மருத்துவரின் ஆலோசனையை நீங்கள் விட்டுவிடக்கூடாது. மருந்து சாப்பிடுவதையும் விட்டு விடக்கூடாது. உயிர் வாழ்வதற்கு மருத்துவரின் பரிந்துரையோடு சேர்த்த ஆன்மீக பரிகாரத்தையும் செய்து பலன் அடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த மலருக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறதா? இனி கோவிலுக்கு போனால் இதை மட்டும் எடுத்து வர மறந்து விடாதீர்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.