இந்த மலருக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறதா? இனி கோவிலுக்கு போனால் இதை மட்டும் எடுத்து வர மறந்து விடாதீர்கள்!

lakshmi-lotus

பணத்தின் அதிபதியாக விளங்கும் மகாலட்சுமி தாயார் அமர்ந்திருப்பது தாமரையில் தான். தாமரையில் வீற்றிருக்கும் மகாலட்சுமிக்கு, அம்மலர் மீது மிகப்பெரும் அபிப்ராயம் இருந்தது. மகாலட்சுமியின் இஷ்ட மலரான தாமரைக்கு விசேஷ சக்திகள் இருப்பதாக புராணங்கள் கூறுகிறது. மலர்களில் தாமரை மலர் விசித்திரமானது. தாமரை மலரை பார்க்கும் பொழுதே தெய்வீகத் தோற்றம் தருவதாக நம்மால் உணர முடியும். அத்தகைய சிறப்பு வாய்ந்த தாமரை மலரினை இப்படி செய்வதால் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வளர்ச்சியை காண முடியும். அது எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

gajalakshmi

தாமரை மலரினை மகாலட்சுமிக்கு எப்பொழுதும் சூட்டி வைத்திருப்பார்கள். லட்சுமி சந்நிதியில் இருக்கும் அந்த தாமரை மலரை பார்த்தால் வீட்டிற்குக் கொண்டு வாருங்கள். அம்மலரை வீட்டின் பூஜை அறையில் வைத்து தூப தீப, ஆரத்தி காண்பித்து பின்பு ஒரு பச்சை பட்டு நிறத் துணியில் மடித்து வைத்து, அதனை பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் செல்வம் பெருகுவதாக ஐதீகம் உள்ளது.

செல்வம் சேர்வதற்கு மகாலட்சுமி உடைய தாமரை மலர் சிறந்த பரிகாரமாக இருக்கும். குறிப்பாக தொழில் சார்ந்த விஷயங்களில் மந்த நிலையை காண்பவர்கள் இது போல் செய்வது வழக்கம். ஓஹோ என்று போய்க் கொண்டிருந்த தொழில் திடீரென மங்கிப் போவதும், புதிதாக ஆரம்பித்த தொழில் முடங்கிப் போவதும் லட்சுமி கடாட்சம் இல்லை என்பதை குறிக்கிறது.

lotus

தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களில் லட்சுமி கடாட்சம் இல்லை என்றால் வருமானம் பெருகாது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் குறைந்து விடும். அதனால் தான் எப்பொழுதும் தொழில் செய்யும் முன் பூஜை புனஸ்காரங்கள் செய்து விட்டு கடையை அடைக்கும் பொழுது மற்றவர்களின் பார்வைகள் ஏராளமாக பட்டிருப்பதால், பட்ட திருஷ்டிகள் எல்லாம் நீங்கவும் திருஷ்டி கழித்து போடுகிறார்கள்.

- Advertisement -

கடை மற்றும் தொழில் ஸ்தாபனங்களை லட்சுமி கடாட்சத்துடன் வைத்திருந்தால் தான் செல்வமும் பெருகும். நீங்கள் செய்யும் தொழிலும் சிறப்பாக இருக்கும். சம்பாதித்த தொகையிலிருந்து ஒரு சிறு தொகையையாவது கட்டாயம் அன்னதானம் செய்து பாருங்கள். அது போல ஐந்து மடங்கு உங்களுக்கு திரும்பி வந்து சேரும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.

thanam

தொழில் செய்யும் இடத்தில் நீங்கள் பணம் வைக்கும் பெட்டகத்தில் இந்த மலரை இப்படி வைக்கலாம். அல்லது வியாபாரம் போன்ற விஷயங்களில் இருப்பவர்களுக்கு கல்லா பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். அம்பாள் கோவிலுக்கு செல்லும் பொழுது தாமரை மலரை பார்த்தால் கட்டாயம் கொண்டு வந்து விடுங்கள். அம்பாளின் பாதங்களில் இடம்பெற்ற தாமரை மலருக்கு அற்புதமான ஆற்றல்களும், சக்திகளும் உண்டாகும். அதனை இப்படி கொண்டு வந்து பணத்துடன் சேர்த்து வைப்பதால் பணம் மேலும் மேலும் பெருகுவதாக அதிகம் உள்ளது.

perumal1

அது போல் பெருமாள் கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கு இருக்கும் சந்தனத்தை எடுத்து வாருங்கள். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள், கடையை திறந்த பிறகு பூஜைகள் செய்யும் பொழுது அந்த சந்தனத்தை வைத்து, தினமும் நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள் அதன் பிறகு உங்களுடைய அன்றாட பணிகளை துவங்கினால் அன்றைய நாள் அதிர்ஷ்டகரமான நாளாக அமையும். பெருமாளின் சந்தனமும், லக்ஷ்மி தேவியின் தாமரை மலரும் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற சிறந்த பரிகாரங்கள். இவற்றை தினமும் கடை பிடிப்பவர்களுக்கு ராஜயோகம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே
ஏமாற்றம் இல்லாத ஏற்றம் பெற, துயரங்கள் நீங்க, ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாடுகளில் இதுவும் ஒன்று! இந்த வழிபாட்டை மறந்தாலும் வாழ்க்கையில் தீராத துன்பம் வரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.