உங்க வீடு தெற்கு பார்த்த வாசலா? உங்களுடைய முன்னேற்றம் தடைப்படாமல் இருக்க கட்டாயம் நிலை வாசலில் இந்த தெய்வம் இருக்க வேண்டும்.

sivan
- Advertisement -

நம்முடைய முன்னேற்றம் தடைப்படாமல் இருக்க செய்ய வேண்டிய விநாயகர் வழிபாட்டு முறைகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். விநாயகரை வழிபடாமல் நாம் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்கக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள். முழுமுதற் கடவுளான விநாயகரை பற்றி அறியாத சில தகவல்களோடு இதோ உங்களுக்கான ஆன்மீக குறிப்புகள்.

எல்லோர் வீட்டிலும் கட்டாயமாக விநாயகரின் திரு உருவப்படம் இருக்கும். அதில் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் என்று இரண்டு விநாயகர் உள்ளது. பெரும்பாலும் இடம்புரி விநாயகர் தான் எல்லா இடங்களிலும் இருப்பார். வலம்புரி விநாயகர் விசேஷமானவர் என்றாலும் அவரை எல்லா இடத்திலும் வைத்து வழிபட மாட்டார்கள். காரணம் வலம்புரி விநாயகரை வைத்து வழிபாடு செய்தால் தினமும் அவருக்கு நிவேதியம் வைக்க வேண்டும். தினம் தினம் அவருக்கு செய்ய வேண்டிய பூஜை புனஸ்காரங்களை சரியாக செய்து வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

வலம்புரி விநாயகர் வளமான வாழ்க்கையை கொடுப்பவர் என்றும், இடம்பெறி விநாயகர் இடைஞ்சலை கொடுப்பவர் என்றும் தவறான ஒரு கருத்து உள்ளது. அது தவறு. வலம்புரி விநாயகர் வளமான வாழ்க்கையை கொடுப்பார். இடம்புரி விநாயகர் இன்னல்களை தகர்த்தெறிவார் என்பது தான் அதற்கான அர்த்தம்.

உங்களுடைய வீடு தெற்கு திசை பார்த்த வீடாக இருந்தால், வீட்டிலிருந்து வெளியே வரும்போது தெற்கு திசை நோக்கி தான் நாம் வெளியே வருவோம் அல்லவா. தெற்கு என்பது எமதர்மனின் திசையாக நமக்கு சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நம்முடைய முன்னேற்றம் எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்றால், உங்கள் வீட்டின் எதிர் பக்கத்தில், அதாவது வடக்கு திசையில் விநாயகர் இருக்க வேண்டும். அந்த விநாயகர் உங்கள் வீட்டு வாசலை பார்த்தபடி இருக்க வேண்டும்.

- Advertisement -

நீங்கள் வெளியே வரும்போது விநாயகர் உங்கள் எதிரே வருவது போல விநாயகரை மாட்டி வைக்க வேண்டும். அப்படி நிலை வாசலுக்கு வெளியே எதிர்ப்பக்கம் மாட்டுவதற்கு உங்களுடைய வீட்டில் இடம் இல்லை என்றால், வீட்டிற்கு உள்ளே நிலை வாசப்படிக்கும் மேலே, வீட்டிற்கு உள்ளே பார்த்தவாறு விநாயகருக்கு திருவுருவப்படத்தை கட்டாயம் மாட்டி வைக்க வேண்டும். (நீங்கள் வெளியே கிளம்பும்போது விநாயகரை பார்த்துவிட்டு கும்பிட்டு விட்டு வெளியே கிளம்புங்க. தோஷங்கள் விலகும்.)

இதே போல வீட்டில் வெள்ளருக்கு விநாயகரை வைத்து வழிபடுவது ரொம்ப ரொம்ப நல்லது. அதிலும் வீட்டில் இருக்கும் குழந்தைகள் தினம் தோறும் வெள்ளருக்கு விநாயகரை வழிபாடு செய்து வந்தால், அவர்களுக்கு அறிவுத்திறன் மேம்படும். கல்வியில் சிறப்பாக மேலோங்கி வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: நாளை புரட்டாசி மாதத்தில் வந்திருக்கக்கூடிய நிறைந்த பௌர்ணமி. உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீர, நாளை சரியாக இந்த நேரத்தில் சந்திரனை வழிபாடு செய்ய வேண்டும்.

மேலே சொன்ன சின்ன சின்ன விநாயகர் வழிபாட்டை முறையோடு மேற்கொண்டு வந்தாலே நம்முடைய வாழ்வில் வளம் பெறலாம். நம்பிக்கையோடு தினமும் விநாயகர் வழிபாடு செய்து அனைவரும் பலன் பெற வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -