நாளை புரட்டாசி மாதத்தில் வந்திருக்கக்கூடிய நிறைந்த பௌர்ணமி. உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீர, நாளை சரியாக இந்த நேரத்தில் சந்திரனை வழிபாடு செய்ய வேண்டும்.

aadi-pournami
- Advertisement -

பொதுவாகவே பெரியவர்கள் வழக்கத்தில் சொல்வதுண்டு. இன்றைய நாள் நிறைந்த பௌர்ணமி தினம். இன்று எதை ஆரம்பித்தாலும் அது நன்றாக நடக்கும் என்று. நன்மைகள் நிறைந்த இந்த நாளை நாம் தவற விடலாமா. அதுவும் இது புரட்டாசி மாதம். பெருமாளுக்கு உரிய மாதம். விசேஷமான இந்த மாதத்தில் வந்திருக்கும் பௌர்ணமி தினத்தை யாரும் தவற விடாதிங்க. குறிப்பா நாளைய தினம் எந்த நேரத்தில் சந்திரனை வழிபாடு செய்ய வேண்டும். எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றிய சிறிய ஆன்மீக ரீதியான குறிப்பை தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

நாளை மாலை வழக்கம் போல உங்களுடைய வீட்டில் 6.00 மணிக்கு விளக்கு ஏற்றி, குல தெய்வத்தை வழிபாடு செய்து கொள்ளுங்கள். பௌர்ணமி என்றாலே சிவனுக்கும் பார்வதிக்கும் தான் விசேஷமான நாள். நாளைய தினம் எல்லா அம்மன் கோவில்களிலும் இரவு 7.00 மணிக்கு மேலாக விசேஷ பூஜைகள் சிறப்பாக நடக்கும். (முடிந்தால் பெண்கள் அந்த பூஜையில் கலந்து கொள்ளலாம்.)

- Advertisement -

சரி உங்கள் வீட்டு பூஜை அறையில் ஆறு மணிக்கு தீபம் ஏற்றி வைத்தாகி விட்டது. பூஜை அறையிலேயே சிறிது நேரம் அமர்ந்து குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். 7.00 மணிக்கு முழு நிலவு மேலே வந்திருக்கும். உங்களுடைய வீட்டின் வெளிப்பக்கத்தில் எந்த இடம் உங்களுக்கு சௌகரியமாக இருக்குமோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (மொட்டை மாடி, கொள்ளை புறம், பால்கனி எந்த இடமாக இருந்தாலும் சரிதான்.) உங்களுடைய கையில் ஒரு கைப்பிடி பச்சரிசியை மட்டும் எடுத்துகோங்க, சந்திர பகவானை தரிசனம் செய்வதற்கு. (நாளைய தினம் ஏழு மணிக்கு குரு ஹோரை இருக்கிறது. அதனால் தான் இந்த நேரத்திற்கு அவ்வளவு சிறப்பு.)

இரண்டு கைகளையும் ஏந்திய படி வைத்துக்கொண்டு, உள்ளங்கை நடுவே பச்சரிசியை வைத்து, உங்களுடைய கஷ்டங்களை அந்த சந்திர பகவானிடம் சொல்லுங்கள். சிவன் பார்வதியை நினைத்துக் கொள்ளுங்கள். பெருமாள் மகாலட்சுமியை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். குல தெய்வத்தையும் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். குறைந்தது ஐந்து நிமிடம், அதிகபட்சம் அரை மணி நேரம் கூட அமர்ந்து சந்திர பகவானை அந்த சந்திர ஒளியில் தரிசனம் செய்து வேண்டுதலை வைக்கலாம்.

- Advertisement -

அதன் பின்பு வீட்டிற்குள் வந்து அந்த ஒரு கைப்பிடி பச்சரிசியை ஒரு தட்டில் கொட்டி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் காலை எழுந்து அந்த பச்சரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து அதோடு கொஞ்சம் வெல்லமோ சர்க்கரையோ சேர்த்து ஏதாவது மரத்தடியில் தூவி விட்டு வந்து விடுங்கள். அதை எறும்புகள் சாப்பிட்டுக் கொள்ளட்டும்.

இதையும் படிக்கலாமே: பெண்களின் வாழ்க்கையில் பெரிய பெரிய துன்பங்கள் வருவதற்கு காரணம், அவர்கள் செய்யும் இந்த ஒரு சிறு தவறு தான்.

நாளைய தினம் உங்களுடைய கையில் பச்சரிசியை வைத்துக்கொண்டு இரவு 7 மணிக்கு சந்திர பகவானின் முன்பு நின்று கையேந்தி நீங்கள் எந்த வரம் கேட்டாலும் அது உடனே கிடைக்கும். இது ஆன்மீக ரீதியாக சாஸ்திரிதியாக நம்பப்படும் ஒரு நம்பிக்கை. இதில் எல்லாம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்கள் கையில் எதுவுமே எடுத்துட்டு போகாதீங்க. வெறுமனே சந்திர பகவானை தரிசனம் செய்து உங்கள் மனதில் இருக்கும் வேண்டுதலை வையுங்கள். நிச்சயம் அது நடக்கும். காரணம் பௌர்ணமி அன்று பாசிட்டிவ் எனர்ஜி இந்த பூமி முழுவதும் நிறைந்திருக்கும். அந்த சமயத்தில் நீங்கள் வைக்கக் கூடிய வேண்டுதல் நேராக பிரபஞ்சத்தை அடையும். அந்த வேண்டுதல் கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும் என்பது அறிவியல் ரீதியான உண்மையும் கூட. முயற்சி செய்து பாருங்கள் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவில் நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -