ஜவ்வாதில் இத்தனை அதிசயங்கள் உள்ளதா

DEEPAM3

ஜவ்வாது என்றாலே நமக்கு முதலில் மனதில் தோன்றுவது அதன் நறுமணம் ஆகும். அதுமட்டுமில்லாமல், மற்ற சில நன்மைகளும் ஜவ்வாது உபயோகப்படுத்துவதினால் நமக்கு கிடைக்கின்றது. இதனைப்பற்றி இப்பதிவில் காணலாம்.

ஜவ்வாதில் நமக்கு ஏராளமான பயன்களும் பல நன்மைகளும் கிடைக்கிறது. ஜவ்வாது என்றாலே அதனுடைய நறுமணம் தான் நம் மனதில் தோன்றும். அந்தகாலத்தில் செல்வந்தர்களாக இருந்த பெரும்பாலும் ஜவ்வாது அன்றாடம் பயன்படுத்தினார்கள். ஜவ்வாது பூஜையறையில் வைத்து சுற்றியுள்ள விக்ரகங்கள் சுற்றி பூசுவதன் மூலம், பூஜை அறையும் மற்றும் மற்ற அனைத்து இடமும் நறுமணத்தோடு காணப்படும். பெண்கள்மீது எக்காரணம் கொண்டும் வியர்வை வாடைஅல்லது மாமிச வாடையும் வரவே கூடாது. இதனால், பல தீமைகள் உண்டாகும் ஆகையால் பெண்கள் கண்டிப்பாக இந்த ஜவ்வாது பயன்படுத்த வேண்டும்.

 

இன்றும்கூட அனைத்து கோவில்களில் பூஜை காகவும் சிலைகளின் திருமேனிக்கு செய்வதற்காகவும் மற்றவர்களுக்கு பிரசாதமாக ஜவ்வாது பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இதனால், துர்சக்திகள் கோவிலினுள் தங்காது. இதை பயன்படுத்துவதற்கு இன்னும் ஒரு எளிய வழிமுறைகளும் உண்டு. இதனை சாம்பிராணியில் கலந்து நாம் அதை வாரத்தில் இரண்டு நாட்களோ அல்லது மூன்று நாட்களோ ஜவ்வாது கலந்த சாம்பிராணியை பூஜைக்கு உபயோகப்படுத்துவதன் மூலம் இந்த நறுமணப் புகை வீட்டில் பரவும் பொழுது வீடு கோவில் சன்னதி போல காட்சி அளிக்கும்.

Pooja room

- Advertisement -

 

அந்த வாசனை நிறைந்த வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வார்கள் என்பது ஐதீகம். லஷ்மி கடாஷம் வீட்டில் இருக்கவேண்டுமென்றால் நறுமணம் எப்பொழுதும் இருக்க வேண்டும். உடம்பிலும் இந்த ஜவ்வாது தடவிக்கொண்டால், நம் உடலுக்கும் எந்தவித தீங்கும் ஏற்படாது. இந்த ஜவ்வாது யாகங்கள் செய்யும் பொழுது குருமார்கள் சுத்தமாகவும் எந்தவித தீமைகளும் நம்மை அண்டாமல் இருக்க இதனை உடல் முழுவதும் தடவிக் கொள்வார்கள். இதனால், எந்தவித தடங்கலுமின்றி யாகம் முழுமையாக பூர்த்தியடையும். நாம் எப்பொழுதும் நறுமணத்தோடு இருந்தாலே அனைத்து செல்வங்களும் நம்மை வந்து சேரும். இந்த ஜவ்வாது வயது வரம்பின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் என பாகுபாடின்றி இதை பூசுவதன் மூலம் பல நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு தெரியாத தஞ்சை பெரியகோவிலின் வியக்கவைக்கும் மர்மங்கள். இதோ

English Overview:
Here we have These are all specialties of Javvaadhu in tamil. we have details of These are all specialties of Javvaadhu too.