இந்த பொருட்களை எல்லாம், கட்டாயம் தானம் கொடுக்க கூடாது தான்! தானம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்! என்ன செய்வது?

- Advertisement -

சில பொருட்கள் எல்லாம், நம் வீட்டு வாசல்ப்படி தாண்டி செல்லக்கூடாது, என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவை அனைத்தும் சரிதான். இருப்பினும் குறிப்பிட்ட இந்த சில பொருட்களை எல்லாம் தானம் கொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், என்ன செய்வது? என்பதைப் பற்றியும், தானமாக கொடுக்கப்பட்ட பொருட்களின் மூலம் நமக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்றால், என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

thanam

முதலில் தானமாக கொடுக்கக்கூடாது என்று சொல்லப்படும் பொருளில், நம் வீட்டில் எரிந்த தீபம். அதாவது நம் வீட்டில் ஏற்றப்பட்ட, எரிந்த தீபத்தை தானமாக கொடுக்க கூடாது. நம் வீட்டிலிருந்து திருடும் போகக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. தானமாகக் கொடுத்தாலும், திருட்டுப் போனாலும், அந்த விளக்கு எந்த இடத்திற்கு சென்றதோ, அவர்களுக்கு நம்முடைய அதிர்ஷ்டமும் சென்றுவிடும் என்கிறது சாஸ்திரம்.

- Advertisement -

குறிப்பாக வீட்டின் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து கொண்டிருக்கும் சுவாமி படங்களாக இருந்தாலும் சரி, சுவாமி சிலைகளாக இருந்தாலும் சரி, அந்த பொருட்களையெல்லாம் கட்டாயமாக திருமணமாகி சென்ற பெண்ணிற்கு கொடுக்கக்கூடாது என்று சொல்லுவார்கள். காரணம் பிறந்த வீட்டு லட்சுமி தேவியை, புகுந்த வீட்டுக்கு கொடுத்த அனுப்புவதற்கு சமம் என்று சொல்லுவார்கள். சில வீடுகளில் எல்லாம் திருமணத்திற்கு பின்பு, அந்த வீட்டின் ஆண் வாரிசு, தனிக்குடித்தனம் சென்றாலும் தங்கள் வீட்டு பூஜை பொருட்களை அவர்களுக்கென்று கொடுக்கமாட்டார்கள். இதனால் பெரிய பிரச்சனைகள் எல்லாம் நடக்கும்.

poojai

சூழ்நிலை காரணமாக, உங்களுடைய மகளுக்கோ, உங்களுடைய மகனுக்கோ உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் பொருட்களை தானமாக கொடுக்க வேண்டியதாயிற்று. கொடுத்து விட்ட பின்பு, உங்களது மன நிலைமை எப்படி இருக்கும்? ‘நம் வீட்டு மகாலட்சுமி, நம் வீட்டை விட்டு அந்த பூஜை பொருட்களின் மூலம் வெளியேறி விட்டது.’ என்று! அந்த வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். நினைத்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் கட்டாயம் அவர்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியே சென்று விடுவால் என்பதில் சந்தேகமில்லை. இப்படி நினைப்பவர்கள் ஒரு விதம்.

- Advertisement -

ஆனால் நிறைய பேர் வீடுகளில், ஆண் வாரிசு இருக்காது. பெண் குழந்தை மட்டும்தான் இருக்கும் அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் இருக்கும் எல்லா பொருட்களும் அந்த பெண் குழந்தைக்கு தானே சொந்தமாக போகின்றது. நம் வீட்டில் எரிந்த தீபத்தையும் பூஜை பொருட்களையும் வெளி ஆட்களுக்கு தானமாக கொடுக்கக்கூடாது தான். சூழ்நிலை காரணமாக உங்கள் வீட்டு வாரிசுகளுக்கு, உங்கள் வீட்டு பூஜை பொருட்களை கொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டாலும், மனத் திருப்தியோடு அதை கொடுத்துவிடுங்கள். அரைகுறை மனதோடு செய்யும் எந்த ஒரு விஷயமும் நமக்கு தோஷத்தை ஏற்படுத்தக்கூடும்.

poojai-turmeric

நாம் நினைக்கிறோம் அல்லவா? ‘நம் வீட்டு பூஜை பொருட்கள் எல்லாம் நம் வாசல் படியை விட்டு வெளியே தாண்டிவிட்டது. நம் வீட்டில் மகா லட்சுமி தங்காமல், அவர்களுடைய வீட்டிற்கு போய் விடுவாளோ’! அந்த நினைப்பானது கொஞ்சம் கொஞ்சமாக, நம் மனதில் ஆழமாக பதியும் போது, ஏற்படுகின்ற இறுதி விளைவு தான், நமக்கு ஏற்படுகின்ற தோஷம். தானம் கொடுக்க கூடாத பொருட்கள், சூழ்நிலை காரணமாக தானம் கொடுக்கப்பட்டாலும், நம் வீட்டை விட்டு வெளியே சென்றாலும், ‘அந்த பொருட்களினால் பயன் அடையப் போவது நம் வாரிசு தான்! அதில் எந்த ஒரு தவறும் இல்லை’. என்ற எண்ணம் உங்களுக்கு இருந்து விட்டால் எந்த ஒரு தோஷமும் உங்களை தாக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அந்த வரிசையில், நாம் போட்டிருக்கும் தங்கத்தை வெளியாட்களுக்கு தானமாக கொடுக்க கூடாது என்று சொல்லுவார்கள். தங்கத்திற்கு தோஷத்தை, ஈர்க்கும் சக்தி உள்ளது. நல்ல எண்ணத்தோடு நீங்கள் தங்கத்தை தானமாக செய்தாலும், அந்த தங்கம் திரும்பவும், உங்கள் கைகளுக்கு வந்த பின்பு சிறிது மஞ்சள் தண்ணீரில் கழுவி விட்டு, நீங்கள் பின்பு அந்த தங்கத்தை அணிந்து கொள்ளலாம்.

Gold rate in Saravana stores

உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்திய துடைப்பத்தை யாருக்கும் தானமாக கொடுக்க கூடாது என்று சொல்லுவார்கள். அப்படி கொடுத்தால் உங்கள் வீட்டில் லட்சுமி தேவி, வீட்டை விட்டு வெளியே சென்று விடுவாள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் கிழிந்த துணியையும் யாருக்கும் தானமாகக் கொடுக்க கூடாது. இது நமக்கு தரித்திரத்தை தேடித்தரும்.

brooms

சூழ்நிலை காரணமாக எந்த பொருட்களையும், தானமாக கொடுத்து விட்டு, பின்பு ஐயோ! என் வீட்டு மகாலட்சுமி வெளியே போய் விட்டாளே! என்ற வார்த்தையை மட்டும் உபயோகப்படுத்தி விடாதீர்கள். அந்த எண்ணம்தான் நம் வீட்டுக்கு தரித்திரத்தை கொண்டு வரும், என்பது ஆணித்தரமான உண்மை. “எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்லுவார்கள்” அல்லவா? அப்படித்தான் இதுவும்.

bhagavathi poojai

உங்களுடைய எண்ணம் எதை நினைக்கின்றதோ, அதுதான் உங்களுடைய வாழ்க்கையாகவே மாறிவிடும். ‘இதற்காக நம் முன்னோர்கள் சொன்ன சாஸ்திரத்தை எல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். சூழ்நிலை காரணமாக, சாஸ்திர சம்பிரதாயங்களை மீறினாலும் நம்முடைய எண்ணம் எதிர்மறையாக சிந்திக்கவே கூடாது, என்பதுதான் இந்தப் பதிவின் கருத்து.’! நல்லதாகவே நினைத்தீர்கள் என்றால், நல்லதே நடக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த சாமியை, இந்தக் கிழமையில், இப்படி கும்பிட்டால் உங்களுக்கு எதிரி தொல்லையே இருக்காது. எதிரியை சுலபமாக ஜெயிக்கும் சக்தியும் உங்களிடம் வந்து விடும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have dhaanam. Dhaanam vagaigal Tamil. Dhanam in Tamil. mahalakshmi veetil thanga

- Advertisement -