இந்த சாமியை, இந்தக் கிழமையில், இப்படி கும்பிட்டால் உங்களுக்கு எதிரி தொல்லையே இருக்காது. எதிரியை சுலபமாக ஜெயிக்கும் சக்தியும் உங்களிடம் வந்து விடும்!

மனிதப்பிறவி எடுத்த ஒவ்வொருவருக்கும், கண்டிப்பா ஒரு எதிரியாவது நிச்சயம் இருப்பாங்க! எதிரிகளே இல்லாமல் வாழ்வது என்பது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். இருப்பினும் அந்த எதிரியின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொண்டால் போதும். உங்களுக்கு தொழிலில் இருக்கும் எதிரியாக இருந்தாலும், குடும்ப பிரச்சனையில் எதிரியாக இருந்தாலும், சொத்து தகராறில் எதிரியாக இருந்தாலும், அலுவலகத்தில் எதிரியாக இருந்தாலும், அக்கம் பக்கத்து வீட்டார் எதிரியாக இருந்தாலும் சரி. அவர்கள் உங்களிடம் பிரச்சனைக்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Ayyanar3

முதலில் எதிரிகள் நம் பக்கம் தலை வைத்து கூட படுத்தாமல் இருக்க வேண்டும் என்றால், நாம் அய்யனாரை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒரு வழி. குதிரை என்பது சூரிய பகவானுக்கு உகந்ததாக சொல்லப்பட்டாலும், அந்த குதிரை ஐயனாருக்கு மிகவும் உகந்தது என்றும் சொல்லப்பட்டுள்ளது. அய்யனார் கோவிலில், அய்யனார் குதிரை மீது அமர்ந்து இருப்பார். உங்களுக்கு எதிரிகளுடைய பிரச்சனை அதிகமாக இருந்தால், அய்யனார் கோவிலுக்கு மண் குதிரையை வாங்கி தானமாகக் கொடுப்பது ஒரு சிறந்த வழி.

அதிலும் குறிப்பாக, சொத்துப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள் சொத்து பிரச்சினையால் ஏமாற்றம் அடைந்தவர்கள், இந்த அய்யனாரை திங்கட்கிழமை அன்று வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று. உங்களது சொத்தினை மற்றவர்களை நம்பி இழந்திருந்தாலும் சரி. உங்களது சொத்தை அடுத்தவர் ஏமாற்றி பிடிங்கிக் கொண்டாலும் சரி. உங்களுடைய சொத்து திரும்பவும் உங்கள் கைக்கே வரவேண்டும் என்று நினைத்து, அய்யனார் கோவிலுக்கு சென்று, அய்யனார் கோவிலில் இருக்கும் மண்ணை சிறிதளவு எடுத்து உங்கள் நெற்றியில் வைத்துக்கொண்டு வேண்டிக் கொள்ள வேண்டும்.

Ayyanar

அய்யனார் கோவிலில் மண் இல்லாமல் கட்டாயம் இருக்காது. அய்யனார் திறந்தவெளியில், ஆகாய மார்க்கமாக தான் அமர்ந்திருப்பார். அவரைச் சுற்றி மணல் பரப்பு கட்டாயம் இருக்கும். அந்த மண்ணில் சிறிதளவு எடுத்து உங்கள் நெற்றியில் வைத்துக்கொண்டு, நீங்கள் இழந்த சொத்துக்கள் அனைத்தும் திரும்பவும் உங்களிடமே வரவேண்டும் என்பதை வேண்டிக் கொண்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -

சிலபேருக்கு வியாபாரத்தில் எல்லாம் போட்டி பொறாமையின் மூலம், எதிரி பிரச்சனை அதிகமாக இருக்கும். பொறாமையின் காரணமாக கூட, சில பேர் தங்களுடைய எதிரிகளுக்கு இந்த செய்வினை யெல்லாம் வைத்துவிடுவார்கள். செய்வினையால் பாதிக்கப்பட்டவர்கள், கூட இவரை வழிபட்டால் நல்ல தீர்வு கிடைக்கும். கண் திருஷ்டி தோஷங்களும் விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அன்றும், செவ்வாய்கிழமை அன்றும், அய்யனார் கோவிலுக்கு சென்று, அங்கு உள்ள பூசாரியிடம் விபூதி பொடி போட்டு, மந்திரித்து கொண்டால் கெட்ட சக்திகள் அண்டாது என்பது நம்பிக்கை.

Ayyanar

அய்யனாரை யார் வேண்டுமென்றாலும் வழிபாடு செய்யலாம். மனதார நினைத்து வழிபடுபவர்களுக்கு, மன தைரியமும் அதிகரிக்கும். எதிரி பிரச்சனையும் இருக்காது. யாராலும் நீங்கள் ஏமாற்ற படமாட்டீர்கள் என்பது உறுதி. கோபமான சக்தி வாய்ந்த தெய்வங்களுல், இந்த அய்யனாரும் கட்டாயம் அடங்குவார். ஆகவே, கெட்ட எண்ணத்தோடு அய்யனாரை யாரும் நெருங்க முடியாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் கெட்ட சக்தி குடி கொண்டுள்ளதா! என்பதை எப்படி கண்டுபிடிப்பது? கெட்ட சக்தியால் பாதிப்படைந்தவர்கள், குலதெய்வ பரிகாரம் செய்வது எப்படி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Ethirigal thollai neenga Tamil. Ayyanar swamy. Ethirigal azhiya Tamil. Ethirigal vilaga Tamil