கோவிலில் அபிஷேகத்திற்கு இந்த 1 பொருளை தானமாக வாங்கிக் கொடுத்தாலே போதும். உங்கள் வாழ்க்கையில் கசப்பான சம்பவங்கள் நடக்காது.

abishegam

நம்முடைய வாழ்க்கை தேன் போல எப்போதுமே இனிப்பாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும், என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு சில பேருக்கு தங்களுடைய வாழ்க்கையை வாழவே பிடிக்காது. அடுத்தடுத்து துயர சம்பவங்கள் கசப்பான சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கும். ‘ஏன் தான் இந்த வாழ்க்கை வாழ்கிறோமோ என்ற அளவுக்கு விரக்தி இருக்கும்.’ இப்படிப்பட்டவர்கள் இறைவனுக்கு இந்த ஒரு பொருளை அபிஷேக பொருளாக வாங்கி கொடுக்க வேண்டும். இந்த ஒரு பொருளை கோவிலுக்கு வருபவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இல்லறம் இனிமையாக மாறும்.

honey comb 1

இறைவனுக்காக அபிஷேகத்திற்கு வாங்கிக் கொடுக்க வேண்டிய, அந்த ஒரு பொருள் தேன். நல்ல மலை தேனாக சுத்தமான தேன் கிடைத்தால் அதை வாங்கி கோவிலுக்கு தானமாக கொடுக்க வேண்டும். அவர்கள் அந்த பொருளை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இதில் முக்கியமாக கவனிக்கப்பட விஷயம் என்னவென்றால் அந்த தெய்வத்திற்கு இந்த ஒரு பொருளை மட்டும் கொண்டு தான் அபிஷேகம் செய்யவேண்டும்.

நிறைய கோவில்களில் பாலபிஷேகம், சந்தன அபிஷேகம், குங்கும அபிஷேகம், விபூதி அபிஷேகத்தோடு, சேர்ந்த தேன் அபிஷேகம் செய்வார்கள். அப்படி அல்லாமல், முதலில் இறைவனுக்கு தண்ணீரால் அபிஷேகம் செய்துவிட்டு, இரண்டாவதாக தேன் அபிஷேகம் செய்து விட்டு மீண்டும் இறைவனை தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்து அலங்காரத்தை முடித்துவிடவேண்டும்.

abishegam

உங்களுடைய வீட்டின் அருகில் ஒரு சிறிய கோவில் இருந்தால்கூட அர்ச்சகரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு, இப்படி ஒரு அபிஷேகம் செய்ய அனுமதி பெற்றுக்கொண்டு வாழ்க்கையில் ஒரே ஒரு முறை இந்த அபிஷேகத்தை நீங்கள், அந்த இறைவனுக்கு செய்து வைத்தாலே போதும். உங்கள் வாழ்க்கையில் கசப்பான சம்பவங்கள் நடப்பது படிப்படியாக குறைந்துவிடும்.

மரத்தடியில் இருக்கும் சிறிய விநாயகருக்கு இந்த அபிஷேகம் செய்வதும் நன்மையை கொடுக்கும். அடுத்தபடியாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கற்கண்டை பிரசாதமாக கொடுக்க வேண்டும். நீங்கள் எப்போது கோவிலுக்கு சென்றாலும் கொஞ்சம் கற்கண்டே கையில் எடுத்துச் செல்லுங்கள். அங்கே மரத்தடியில் இருக்கும் எறும்புகளுக்கு அந்த கற்கண்டுகளை சாப்பிட உணவாக போட வேண்டும். உங்கள் பாவங்கள் குறைக்கப்படும். உங்களுடைய வாழ்க்கையில் வரக்கூடிய பல பிரச்சனைகள் காணாமல் போவதை அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்.

sivakaali amman

நிறைய பேர் குடும்பத்தில் இன்று குடும்ப ஒற்றுமை இல்லாமல் இருந்து வருகிறது. கணவன் மனைவிக்குள் பிரச்சனை இருந்து வருகிறது. குழந்தைகள் பெற்றோர்களின் பேச்சை கேட்பது கிடையாது. இப்படி வீட்டில் இருக்கக்கூடிய பல கசப்பான கஷ்டங்களும் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் கூடிய சீக்கிரத்தில் நல்ல முடிவுக்கு வரும். முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.